நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கான அழைப்பை ஜெயலலிதா அரசு ஏற்று அந்த விழாவில் அதிமுக பங்கெடுக்கவில்லை என்றால், ஜெயலலிதா தலைமையிலான அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தி, அடுத்த 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தும் யோசனைக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பங்குகொள்ள மாட்டார் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் வலய நாட்டு தலைவர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்த பதவியேற்பு விழாவில் பங்குகொள்வதை தமிழக கட்சிகள் விரும்பவில்லை.விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பிடித்த தமிழக கட்சிகளான மதிமுக, காந்திய மக்கள் கட்சி போன்றவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 26.05.2014 அன்று இந்தியாவின் நிதி அமைச்சராக பதவி ஏற்க உள்ள பேராசிரியர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி என்பதும் குறிப்பிடத்தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire