
புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.வெளியுறவு அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் முதல் முறையாக பெண்மணி ஒருவர் அத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை அமைச்சரான அருண் ஜேட்லி கூடுதலாக பாதுகாப்புத் துறையையும் கவனிப்பார்.
நகர்புற அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு ஆகியத்துறைகளுக்கு வெங்கைய்யா நாயிடு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜிதேந்திர சிங், பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதர முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வருமாறு:
ரயில்வேத்துறை : சதானந்த கவுடா
சிறுபான்மையினர் நலன் : நஜ்மா ஹெப்துல்லா
சுகாதாரம் : ஹர்ஷ் வர்தன்
விவசாயம் : ராதா மோகன் சிங்
சமூக நலம் மற்றும் வலுவூட்டல் :தாவர் சந்த் கெஹலோட்
பழங்குடியினர் நலன் : ஜுவல் ஓராம்நீர்வளம் மற்றும் கங்கை நதி மேம்பாடு : உமா பாரதி
நுகர்வோ நலன், உணவு மற்றும் பொது விநியோகம் : ராம் விலாஸ் பாஸ்வான்
கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் : ஆனந்த் கீதே. இந்தத்துறையின் துணை அமைச்சராக பொன் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர்களான நிர்மலா சீதாராமனுக்கு வணிகத்துறையோடு, நிதித்துறையும், பிரகாஷ் ஜவ்டேகருக்கு செய்தி ஒலிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சமும் ஒதுக்கப்பட்டுள்ளன. bbc
Aucun commentaire:
Enregistrer un commentaire