சிரியாவில் அரசு ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பினருக்கு ஆயுதம் வழங்குவதாக அமெரிக்கா சொல்லி விட்டது. ஓரளவு ஆயுதங்களும் போராளி அமைப்பினரின் கைகளை சென்றடைந்து விட்டன. அப்படியிருந்தும், போராளி அமைப்பினர் ராணுவத்தை ஏன் ஓடஓட விரட்டியடிக்கவில்லை?
மாறாக, போராளி அமைப்பினரால் முன்பு பிடிக்கப்பட்ட பகுதிகளை ராணுவம் அல்லவா அடித்து கைப்பற்றுகிறது என்று செய்திகள் வருகின்றன!
இதை புரிந்து கொள்ள, சிரியா அரசும், ரஷ்யாவுமாக சேர்ந்து செய்யும் சில ராஜதந்திர விளையாட்டுகளையும், சிரியா ராணுவம் மேற்றொள்ளும் சில ராணுவ வியூகங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்கா போராளி அமைப்பினருக்கு ஆயுதம் கொடுத்த விவகாரத்தில், ரஷ்யாவை சீண்டும் விஷயம் ஒன்றும் இருந்தது பலருக்கு தெரியாது. அந்த விஷயம்தான் ரஷ்யாவை முதலில் கோபப்பட வைத்தது.
விவகாரம் என்னவென்றால், போராளி அமைப்பினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை கொடுத்தது அல்லவா? உலக அளவில் ஆயுதத் தயாரிப்பில் நெம்பர்-1 ஆகவுள்ள அமெரிக்கா, தமது தயாரிப்பு ஆயுதங்களைத்தான் கொடுத்திருப்பார்கள் என்றுதான் ஊகிப்பீர்கள்.
ஆனால், நடந்தது அதுவல்ல!
அமெரிக்கா இதில் ஒரு தந்திரம் செய்தது. உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் ஏஜென்டுகள், கிழக்கு ஐரோப்பிய ஆயுத கறுப்புச் சந்தையில் ஆயுதங்களை வாங்கி, துருக்கி மற்றும் ஜோர்தானுக்குள் கொண்டுவந்தார்கள். இந்த ஆயுதங்கள்தான் போராளி அமைப்பினருக்கு முதல் கட்டமாக கொடுக்கப்பட்டன.
இதில் ரஷ்யாவை கொதிப்படைய வைத்த விஷயம் என்னவென்றால், கிழக்கு ஐரோப்பிய ஆயுத கறுப்புச் சந்தையில் வாங்கப்பட்டவை அனைத்துமே, ரஷ்யாவில் இருந்து ‘எப்படியோ’ கடத்தி வந்து விற்கப்பட்ட ஆயுதங்கள். ஆம், அவை ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்கள்.
சிரியா ராணுவத்துக்கு ரஷ்யாதான் பிரதான ஆயுத சப்ளையாளர். இதனால், சிரியா ராணுவம் யுத்தம் புரிவது ரஷ்ய ஆயுதங்களை வைத்துதான். இப்போது, அந்த ராணுவத்தை எதிர்த்து நிற்கும் போராளி அமைப்பினர் யுத்தம் புரிய தொடங்கியுள்ளதும், ரஷ்ய ஆயுதங்களைதான்!
போராளி அமைப்பினருக்கு ஆயுதம் கொடுப்பதை ரஷ்யா எதிர்க்கிறது. ஆனால் அமெரிக்காவோ, “ஆயுதமும் கொடுப்போம். அதுவும், உங்கள் நாட்டு ஆயுதங்களையே எம்மால் கொடுக்க முடியும்” என்று செய்து காட்டி ரஷ்யாவை சீண்டியது.
இதில் வெகுண்டுபோன ரஷ்யா, விளையாட்டை வேறுவிதமாக விளையாடியதில், இப்போது போராளி அமைப்பினர் அடி மேல் அடி வாங்குகின்றனர்.
சிரியாவின் வடக்கு எல்லையில் உள்ள துருக்கியிலும், தெற்கு எல்லையிலுள்ள ஜோர்தானிலும்தான் சி.ஐ.ஏ. ஆயுதங்களை கொண்டுபோய் இறக்கி வைத்திருக்க, அந்த எல்லைகளை கடந்து வரும் போராளி அமைப்பினர் ஆயுதங்களை பெற்று செல்கின்றனர்.
ரஷ்யா என்ன செய்தது என்றால், துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனுக்கு கொக்கி போட்டது. ரஷ்ய ஜனாதிபதி புடின், துருக்கி பிரதமர் எர்டோகனை எப்படி ‘வழிக்கு கொண்டுவந்தார்’ என்று தெரியவில்லை, ஆனால் எப்படியோ வழிக்கு கொண்டுவந்து விட்டார் என்று தெரியும்.
அதையடுத்து, தமது நாட்டுக்குள் வைத்து ஆயுத சப்பை செய்ய வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறது துருக்கி.
சி.ஐ.ஏ.யால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார்கோ விமானம் ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன், துருக்கியில் இறக்கி வைத்திருந்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு போய், ஜோர்தானில் இறக்கியிருக்கிறது. இதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை.
சி.ஐ.ஏ.யால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார்கோ விமானம் ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன், துருக்கியில் இறக்கி வைத்திருந்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு போய், ஜோர்தானில் இறக்கியிருக்கிறது. இதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை.
சரி. சிரியாவின் வடக்கு எல்லையில்தான் ஆயுத சப்ளை அடைபட்டு விட்டது, தெற்கு எல்லை வழியாக, அதாவது ஜோர்தான் வழியாக ஆயுதங்களை கொடுக்கலாமே? அதில் என்ன சிக்கல்?
அதில் சிக்கல் கிடையாது. ஆனால், அங்குதான் வருகிறது சிரியா ராணுவத்தின் வியூகம் ஒன்று.
மேலேயுள்ள வரைபடத்தை பாருங்கள். இப்போது நண்டை மும்மரமாக நடப்பது, சிரியாவின் வடக்கு நகரமான அலீபோவில். அமெரிக்கா கொடுக்கும் ஆயுதங்கள், தெற்கு எல்லையில் உள்ள போராளி அமைப்பினரின் கைகளில் போய் சேருகிறது.
சிரியா ராணுவம் என்ன செய்திருக்கிறது என்றால், தெற்கு எல்லைக்கு அருகேயுள்ள தலைநகர் ஜோர்தானுக்கு வடக்கேயுள்ள வேகப் பாதையை, போராளிகள் கையில் இருந்து கைப்பற்றி விட்டது. இப்போது அந்தப் பாதை, சிரியா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதனால், அதிகம் சண்டை நடக்காத தெற்கு நகரங்களில் போராளி அமைப்பினர் கை நிறைய ஆயுதங்களுடன் உள்ளார்கள். சண்டை நடக்கும் அலீபோ நகரில், போராளிகள் கைகளில் ஆயுதம் தட்டுப்பாடு. இங்கிருந்து ஆயுதங்களை அங்கே கொண்டுபோக முடியாதபடி, இடையே ராணுவம்!
இதனால், போராளிப் படையினர் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்தின் கைகளில் விழுகின்றன.
சில தினங்களுக்கு முன் சிரியா – லெபனான் எல்லை நகரமான அல்-குசையிர், போராளி அமைப்பினரிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 16 நாட்கள் நடந்த யுத்தத்தின் பின், போராளி அமைப்பினர் அந்த நகரத்தை இழந்து பின்வாங்கினர்.
இலீபோ நகரம் அவ்வளவு சுலபமாக விழாது. ஆனால், அங்குள்ள போராளி அமைப்பினருக்கு ஆயுத சப்ளை போய் சேராவிட்டால், 40-50 நாட்கள் யுத்தத்தின் பின் விழ சான்ஸ் உள்ளது.
ஜோர்த்தானில் அமெரிக்கப் படைகள் கொண்டுபோய் இறக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஏவுகணைகளும் ரெடி. விமானப்படை விமானங்களும் உள்ளன. சி.ஐ.ஏ.வின் ஆயுத ஸ்டாக்கும் உள்ளது.
இந்த ஆயுதங்களை எப்படியாவது அலீபோ வரை எப்படி கொண்டு போய் கொடுப்பது என்பதே, அமெரிக்காவின் ஒரே கவலை. தெற்கில் இருந்து வடக்கே செல்லும் பாதைகளில் அமெரிக்க விமானப்படை தாக்கி கிளியர் செய்து வழி ஏற்படுத்த நினைக்கலாம்.
அதற்காகதான், மேற்கு எல்லையில் உள்ள மெடடரேனியன் கடலில், ரஷ்ய போர்க்கப்பல்கள் வந்து நிற்கின்றன.
எப்படி இந்த ராணுவ வியூகம்?
படித்தது பிடித்திருந்ததா? இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும். நாம் முன்பே குறிப்பிட்டபடி, இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. ஆனால், மற்றொரு கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Embraer Executive Jets are entering the Chinese business jet market
Embraer Executive Jets are entering the Chinese business jet market. Embraer announced yesterday that a Phenom 300 light executive jet will join the fleet of China’s Erdos