
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 18 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது குறித்தப் பெண்கள் மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, கொடவல பகுதியில் உள்ள ஆற்றில் மூன்று ஆண்களுடன் சேர்ந்து குறித்தப் பெண்கள் நிர்வாண கோலத்தில் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்தப் பெண்கள் கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாடும் இப்பகுதிகளில் நிர்வாண கோலங்களில் இருக்க முடியாது என கூறி, மதுபோதையில் இருந்த குறித்தப் பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire