ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மன்னர் ஆட்சி நடக்கிறது. அங்கு ஷேக் ஷபா அல்-அகமது அல்-சபா மன்னராக உள்ளார். இந்த நிலையில், அல்-அஜ்மி என்ற பெண், மன்னருக்கு எதிராக டுவிட்டர் இணைய தளத்தில் தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில், மன்னர் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முன்வர வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்று திரள வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த கருத்தால் அஜ்மி கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.அதை தொடர்ந்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
குவைத்தில் இது போன்ற குற்றத்துக்காக நீண்ட நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட முதல் பெண் இவர்தான். இதற்கிடையே, இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2 பெண்களுக்கு கோர்ட்டு சாதாரண தண்டனை விதித்தது. பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire