dimanche 30 juin 2013

தென்னாப்பிரிக்க மக்களின் சம உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய நெல்சன் மண்டேலா(94) 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையை ஒபாமா பார்வையிடுகிறார்


தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94). கறுப்பர் இன விடுதலைக்காக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தற்போது இவர் உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.எனவே, அவர் கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார்.
அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் மகாஷிவே, மற்றும் ஷிண்ட்ஷி உள்பட உறவினர்கள் 16 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தான் இறந்ததும் தனது உடலை மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என மண்டேலா கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே அங்குதான் அவரது உடலை புதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அந்த குக்கிராமம் பிரடோரியாவில் இருந்து 600 மைல் தொலைவில் ஒரு மலையோரம் உள்ளது.
இதற்கிடையே ஆப்பிரிக்கா கண்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று தென் ஆப்பிரிக்கா வந்தார். ஜோகன்ஸ்பர்க் வந்த அவர் அதிபர் ஜேக்கப் ஷுவை சந்தித்து பேசினார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கோலத்தில் நெல்சன் மண்டேலாவை நேரில் பார்க்க அவர் விரும்பவில்லை. எனவே மண்டேலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையே ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொவேடோவில் உள்ள பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டக்கார்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ராபென் தீவு சிறையை அமெரிக்க அதிபர் ஒபாமா பார்வையிடுகிறார். ஐ.நா. சபை உலக புகழ்பெற்ற நினைவு சின்னமாக அறிவித்துள்ள இந்த சிறையில் தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளை அரசியல் கைதியாக நெல்சன் மண்டேலா கழித்துள்ளார். மக்களின் விடுதலைக்காக போராடிய மண்டேலாவை கைது செய்த அரசு அவரை சங்கிலியால் கட்டி ராபென் தீவில் உள்ள இந்த சிறைக்கு ஓர் மரக்கலனில் எற்றி அனுப்பி வைத்தது.
கைதி எண் 466/64 என்ற அடையாளத்துடன் இந்த தண்டனையை ஏற்றுக் கொண்ட மண்டேலா, மிக குறுகிய சிறை கொட்டிலில் கட்டாந்தரையில் படுத்து உறங்கி, பகல் முழுவதும் பாறைகளை உடைத்து தண்டனை காலத்தை நிறைவு செய்தார்.
‘எனது பொதுவாழ்வுக்கு தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாதான் முன்னோடி’ என்று பலமுறை வெளிப்படையாக கூறிவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடந்த 2006ம் ஆண்டின் போது ஓர் எம்.பி.யாக மட்டும் இருந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து நெல்சன் மண்டேலாவை சந்தித்தார். அப்போது, ராபென் தீவு சிறையையும் அவர் பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு தற்போது தென்னாப்பிரிக்கா வந்துள்ள ஒபாமா, மீண்டும் இரண்டாவது முறையாக நெல்சன் மண்டேலா 27 ஆண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சிறையை இன்று பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire