mercredi 12 juin 2013

தமிழ்த் தலைவர்களை அசிங்கப்படுத்துவதற்கும், குறை கூறுவதற்காகவுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு நாளிதழான ‘உதயன்;துக்ளக் - 9

uthayan attackபுலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு நாளிதழான ‘உதயன்’ மீது தாக்குதல் நடப்பது இலங்கையில் வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி இந்த நாளிதழின் அலுவலகம், அச்சுக்கூடம், விநியோகஸ்தர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நாளிதழைக் கொளுத்தும் போராட்டமும் அவ்வப்போது நடந்து வருகிறது. “உதயன் நாளிதழ் மீது இதுவரை சுமார் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து ஒவ்வொரு முறையும் போலீஸில் புகார் தருகிறோம். ஆனால், அரசு இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. எனவே இந்தத் தாக்குதல்கள் அரசு ஒத்துழைப்புடனே நடப்பதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது” என்று எங்களிடம் குறிப்பிட்டார் அந்தப் பத்திரிகையின் உரிமையாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யுமான சரவணபவன்.
ஒவ்வொரு முறை, உதயன் மீது தாக்குதல் நடக்கும்போதும், ‘இது சிங்கள வெறியர்களின் செயல். ராணுவத்தினரின் செயல்’ என்றே ‘உதயன்’ குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், அங்கிருக்கும் சிலர் அதை மறுக்கிறார்கள். “கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் சிங்களர்கள் வந்து தாக்குதல் நடத்த வாய்ப்புக் குறைவு. இந்தத் தாக்குதல்கள் தமிழர்களாலேயே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம் - ‘உதயன்’ பத்திரிகை ஆதாரம் ஏதுமில்லாமல், வரம்பு மீறி ஆளுங் கட்சிக் கூட்டணித் தலைவர்களை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
“ராஜபக்ஷ அரசாங்கத்தைக் குறை சொல்வதை விட, அவருக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ் அரசியல்வாதிகளைத் திட்டமிட்டு அசிங்கப்படுத்த முனைவது உதயனின் வழக்கம். இதனால் பல முறை தமிழர் பகுதிகளில், தமிழர்களாலேயே ‘உதயன்’ எரிக்கப்பட்டு இருக்கிறது. தங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் தமிழர் தலைவர்களை அசிங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால்தான், அடிக்கடி அந்தப் பத்திரிகை சர்ச்சைக்குள்ளாகிறது” என்கிறார்கள் அவர்கள்.

“அந்தப் பத்திரிகையை தமிழர் எழுச்சிக்காகவோ, தமிழர் நலனுக்காகவோ அவர்கள் நடத்தவில்லை. பிற தமிழ்த் தலைவர்களை அசிங்கப்படுத்துவதற்கும், குறை கூறுவதற்காகவுமே நடத்துகிறார்கள். முழுக்க முழுக்க வியாபார நோக்கில் செயல்படுகிறது ‘உதயன்’ என்கிறார் ஆனந்த சங்கரி.

இருந்தாலும், வழக்கு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒரு பத்திரிகை அலுவலகத்தை அடிக்கடி தாக்குவது என்பது கண்டிக்கத்தக்க செயலே. அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையே!
பெட்டிச் செய்திகள் 2
ரிஸ்க் எடுத்த ராணுவ வீரர்கள்!
பொதுமக்கள் கொலை குறித்து, ராணுவ அதிகாரி ஒருவரிடம் நாங்கள் பltte suicideேசிய போது அவர் தந்த விளக்கம் இது: “ராணுவ வீரர்கள் எல்லோருமே கொடுங்கோலர்கள் இல்லை. அதிலும் பெரும்பாலானோர் அமைதியை விரும்புகிறவர்கள், பக்திமான்கள், கொலைக்கு அஞ்சுபவர்கள் இருக்கிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரு ஊரைக் கைப்பற்றும்போது, அந்த ஊரில் காலியாகக் கிடக்கும் அத்தனை கட்டிடங்களிலும் ராணுவம் புகுந்து யாரும் இருக்கிறார்களா, ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அப்பகுதியில் இருக்கும் ஹிந்து கோவில்களுக்குள்ளும் அவர்கள் சென்று சோதனையிட வேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... பெரும்பாலான வீரர்கள் வெளியே தங்கள் ஷுக்களை விட்டுவிட்டுத்தான் உள்ளே சென்று சோதனையிடுவார்கள்.
“பயங்கரவாதிகள் மனதளவில் எந்தக் கொடூரத்தைச் செய்வதற்கும், சந்திப்பதற்கும் தயாராக இருப்பார்கள். மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறவும் அவர்கள் தயாராக இருப்பார்கள். ஆனால், ராணுவ வீரர்களிடம் அந்த மனோபாவத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தன்னோடு பணிபுரிந்து வரும் சக ராணுவ வீரர் இறந்து போனால் கூட, ஒரு ராணுவ வீரர் மனம் நொந்து அழத் துவங்கி விடுகிறார். அவருக்கு கௌன்ஸிலிங் கொடுத்துத்தான் சரி செய்ய வேண்டும்.
“தூரத்திலிருந்து சுடுவது வேறு; ஒருவனைப் பிடித்து வைத்து, கையை கட்டி, தலையில் சுடுவது வேறு. இன்டர்நெட்டில் பல வீடியோக்கள் அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளன. இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் பெரும்பாலான வீரர்களுக்கு அந்தளவு மனோபலம் கிடையாது என்பதே உண்மை. அப்படி ஒரு மனித உயிரைப் பறித்தால், அது தெய்வ குற்றமாகி விடும் என்று கருதுபவர்களே அதிகம். காரணம், அவர்கள் எல்லாம் வெறியூட்டப்பட்ட பயங்கரவாதிகள் இல்லை. மாதச் சம்பளத்திற்குப் பணிபுரியும் அரசாங்க ஊழியர்கள். போரின்போது ராணுவத்தை விட்டு ஓடிப்போன வீரர்கள் பலருண்டு.
“பொதுமக்கள் பலரை ராணுவம் கொன்றுவிட்டது என்று தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பவர்கள், ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். புலிகள் கொன்ற ராணுவ வீரர்கள் எத்தனை பேர்? புலிகள் கொன்ற தமிழ்த் தலைவர்கள், மேயர்கள், எம்.பி.க்கள் எத்தனை பேர்? பொது இடத்தில் அவர்கள் வைத்த குண்டுகளில் வெடித்துச் சிதறிய அப்பாவி மக்கள் எத்தனை பேர்? கணக்குப் போட்டுப் பார்த்தால், புலிகளின் சாதனைப் பட்டியல்தான் பெரியதாக இருக்கும். ஒரு நேரம் புலி ஆதரவாளர்கள், ‘நடந்தது ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கும், ராணுவத்திற்குமான மோதல் அல்ல. அது ஈழ நாட்டுக்கும், இலங்கை நாட்டுக்கும் இடையே நடந்த போர்’ என்று சொல்கிறார்கள். மறுநிமிடமே, ‘சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசி அழித்த ஒரே ராணுவம் இலங்கை ராணுவம்தான்’ என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்குச் சாதகமானதை எப்படி வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.
“புலிகளின் பழக்கமே பொதுமக்களோடு பொதுமக்களாக ஊடுருவி, திடீரென மனித வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதுதான். இந்த நிலையில், நீங்கள் யாரை பொதுஜனம் என்று நினைப்பீர்கள்? யாரை புலிகள் என்று கணிப்பீர்கள்? சரணடையும் பொதுமக்களை ராணுவம் ஏற்பது என்பது எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா? பொதுமக்களை வரிசையில் நிறுத்தி சோதிக்கும்போது, எந்த நிமிடமும் யாராவது ஒருவர் வெடித்துச் சிதறலாம். அதோடு நாங்களும் சேர்ந்து வெடித்துச் சிதற வேண்டும். அப்படி சம்பவங்கள் நடந்தும் இருக்கின்றன. ஆனாலும், நாங்கள் அத்தனை தமிழரையும் கொன்று குவிக்காமல், பல லட்சம் பேரை ரிஸீவ் செய்துள்ளோம். ஒவ்வொருவரையும் சோதித்து முடிக்கும் வரை, எங்களுக்கு உயிர் போய் உயிர் வரும். அந்த அளவுக்கு எங்கள் உயிரைப் பணயம் வைத்துதான், இத்தனை லட்சம் தமிழர்களை இன்று புலிகளிடமிருந்து மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரமாக வாழ வழி செய்து தந்துள்ளோம்.”
பெட்டிச் செய்திகள் 3
குடும்ப ஆதிக்கம்
தமிழர்கள் மட்டுமில்லாமல், சில சிங்களர்களுமே ராஜபக்ஷ மீதுRajapaksha brothersவைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, ‘அவரது குடும்பத்தினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் தலையிடுகிறார்கள், அதன் மூலம் அந்தக் குடும்பத்தில் பணம் கொழிக்கிறது’ என்பதுதான். அடுத்தது ‘மகிந்த ராஜபக்ஷ நடுநிலையானவர் என்பது போல் காட்டிக் கொண்டு, தனது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷ மூலம் தனது இனவாத சிந்தனையைப் பரப்பி வருகிறார்’ என்ற குற்றச்சாட்டு. இதற்கு ஆதரவாக முரட்டுத்தனமான சில பௌத்த அமைப்புகளை கோத்தபய ஆதரித்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘பௌத்தர்களுக்கு மட்டுமே இலங்கை சொந்தமானது’ என்பது போன்ற விஷக் கருத்துகளை விதைக்கும் பௌத்த அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
‘பொதுபல சேனா’ என்ற பௌத்த அமைப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், முஸ்லிம் அமைப்புகள் கொடுத்து வந்த (இறைச்சி வர்த்தகம் தொடர்பான) ‘ஹலால்’ சான்றிதழுக்கு, இலங்கை அரசு தடை கொண்டு வந்திருப்பதை முஸ்லிம் அமைப்புகள் கண்டித்துள்ளன. நாங்கள் இலங்கையில் இருந்த நேரத்தில், ஒரு முஸ்லிம் ஜவுளி தொழிற்சாலை தாக்கப்பட்டதை அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துக் கொண்டிருந்தன.
0000
இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி, செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள், எஸ்.ஜே. இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் இலங்கையில் தாங்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....
இலங்கை அதிபர் ராஜபக்ஷ குறித்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமானது, ‘உலகப் போர் தர்மங்களுக்கு மாறாக ஏராளமான பொதுமக்களை அவர் கொன்று குவித்தார்’ என்பது. நாங்கள் சந்தித்த பொதுமக்களிடம் இது குறித்துக் கேட்டோம்.
விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டபோது, ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் “போர் என்று வந்த பிறகு அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ‘எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, புலிகளை மொத்தமாக அழித்து வன்னியை மீட்டெடுக்க வேண்டும்’ என்று ராணுவம் முடிவெடுத்த பிறகு, நாங்கள் வன்னியை விட்டு வெளியேறி ஓடி விடத்தான் ஆசைப்பட்டோம். ஆனால், புலிகள் மக்களை விடாததுதான் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் அழிவுக்குப் பிரதானமான காரணம்.

“விமானம் மூலம் ராணுவம் குண்டு வீசும்போது, உயிருக்குப் பயந்து பதுங்கு குழிகளில் ஒளிந்த மக்கள், விமானம் போனதும் வெளியே வந்து புலிகளிடம்தான் தங்கள் ஆத்திரத்தைக் காட்டுவார்கள். ‘எங்களை வெளியே செல்ல அனுமதி’ என்று அவர்களிடம் கோபப்படுவார்கள். அவர்களோ, ‘விலகி ஓடு. இல்லையேல் சுட்டு விடுவோம்’ என்று பதிலுக்கு ஆக்ரோஷமாகக் கத்துவார்கள். சிலரை சுட்டும் தள்ளியிருக்கிறார்கள். எனவே ராணுவத்தை விட புலிகள் மீதான ஆத்திரம்தான் வன்னிப் பகுதி மக்களுக்கு அதிகம்” என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தனர்.

ஒரு சாரார் இன்னொரு விதமாகக் கருத்து தெரிவித்தனர். “விடுதலைப் புலிகளை air attack muliivaikal-1ஆதரிக்காத பொதுமக்கள் கூட, புலிகளிடம் பிணைக் கைதிகளாக இருந்தனர். அப்போது ஒரு அரசாங்கம் பொறுமையாகத்தான் செயல்பட்டிருக்க வேண்டும். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும், விமானப் படை மூலம் குண்டு வீசுவது வரம்பு மீறிய செயல். புலிகள் மூன்று லட்சம் சிங்களர்களை இப்படி பிணைக் கைதிகளாக வைத்திருந்தால், ராணுவம் இவ்வளவு ஈஸியாக குண்டுகளை வீசியிருக்குமா? தமிழன்தானே... எவ்வளவு பேர் சாகிறார்களோ, அந்தளவுக்குத் தொல்லை குறையும் என்ற மனோபாவம் அரசுக்கு இருந்ததால்தான், இவ்வளவு தமிழர்கள் அநியாயமாக இறந்து போனார்கள். சுமார் முப்பது ஆண்டுகள் போரைச் சந்தித்த ராணுவம், இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமையாகப் போரிட்டு அப்பாவி மக்களைப் படிப்படியாக வெளியேற்ற முயற்சி செய்திருக்க வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

முன்னாள் பெண் புலிகளிடம் நாங்கள் இதுகுறித்துப் பேசியபோது, “இரு பக்கமும் தீவிரமான போர் அணுகுமுறைகள் இருந்தன. இரு பக்கமும் இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. இதில் யாரைக் குறை சொல்ல முடியும்? நாங்கள் ராணுவத்தைக் குறை சொன்னால், அவர்கள் இயக்கத்தைதானே குறை சொல்வார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

‘ரசாயன குண்டுகளை ராணுவம் வீசியது’ என்ற குற்றச்சாட்டு குறித்து இறுதிப்போரில் உயிர் தப்பியவர்களிடம் விசாரித்தோம். அவர்களுக்கு அது பற்றிய தெளிவில்லை. “குண்டுகள் விழும். சிலர் சாவார்கள். சிலர் உயிர் தப்பிப்போம். அது எத்தகைய குண்டுகள் என்று ஆராயவா நேரமிருக்கும்? இறந்தவனைக் கட்டிக் கொண்டு அழுவதற்கே நேரம் போதாது” என்று கண் கலங்கினர்.

இந்தப் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அடுத்ததாகச் சொல்லப்படும் பெரிய குற்றச்சாட்டு, இன்னும் தமிழர்களை ரீசெட்டில் செய்ய மனமில்லாமல், அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்த முற்படுகிறது இலங்கை அரசு என்பது.

v.Thanabalasingamஇதுகுறித்து சில பிரபலங்களிடம் பேசினோம். தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் இது குறித்து எங்களிடம் பேசினார். “புலிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழர் போராட்டமாகத்தான் பார்த்தன இலங்கை அரசாங்கங்கள். போர்க்குற்றம் என்பது இந்த ஆட்சியில்தான் என்றில்லை. எல்லா ஆட்சிகளிலுமே இருந்து கொண்டுதான் இருந்தன. தற்போது இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் இறந்து போனார்கள் என்பதைத்தான் பெரிதாகப் பார்க்கிறோம். ஆனால், 30 வருட காலத்தில் இறந்து போன தமிழர்களின் எண்ணிக்கை ஏராளம். இன்று ஜெனிவாவில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த அத்தனை நாடுகளுமே, ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க உதவுகிறோம் என்று இலங்கை ராணுவத்திற்கு உதவிய நாடுகளே! சர்வதேச அரசாங்கங்கள் தத்தம் அரசியலை மனதில் வைத்துக் கொண்டுதான் இலங்கை விஷயத்தை அணுகுகின்றன. இது நன்கு தெரிந்தாலும், அவர்களின் நன்மையில் நமக்கும் ஒரு நன்மை கிடைத்தால் நல்லது என்ற கோணத்தில்தான் அவற்றை நாங்கள் வரவேற்கிறோம்.

“அன்று உதவி செய்த நாடுகள்தான் இன்று போர்க்குற்றம், மனித உரிமை என்று இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் சுமத்துகின்றன. இதற்கு என்ன காரணம்? இலங்கை அதிபர், அவர்களுக்கும் உண்மையாயில்லை என்றுதான் யூகிக்க முடிகிறது. 2008-ல் கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றங்களை நடத்தி, ஓரிரு மாதங்களிலேயே அங்கு தேர்தலை நடத்தியது இலங்கை அரசு. ஆனால், போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் வடமாகாணத்தில் இன்னும் ஏன் தேர்தலை நடத்தவில்லை? காரணம் அங்கு ஆளும் கட்சி ஜெயிக்க வாய்ப்புக் குறைவு. 2009-ல் போர் முடிந்து இந்த நான்கு ஆண்டுகளில் தமிழர்களின் மனதை வென்றெடுக்க, ஆளும் அரசு எதையும் செய்து விடவில்லை. ஒரு குறைந்தபட்ச அரசியல் தீர்வுக்குக் கூட அரசு முன்வரவில்லை. நான் ஜெயித்து விட்டேன். இனி நான் சொல்கிறபடிதான் நீ நடக்க வேண்டும் என்ற மனோபாவம்தான் அரசிடம் இருக்கிறது.

“போர் வெற்றியை சிங்கள இன வெற்றியாகக் காட்டிக் கொண்டார் எங்கள் அதிபர். சிங்கள இயக்கங்கள் ஒரு அரசின் வெற்றியை தங்கள் இன வெற்றியாகக் கொண்டாடித் தீர்த்தன. வாக்குகளுக்காக, தமிழனை வீழ்த்தி விட்ட இமேஜை சிங்கள மக்களிடையே விதைக்கிறார் அதிபர். இது பேரினவாதச் சிந்தனை. பொதுபல சேனா என்ற பௌத்த அமைப்பு சமீப காலமாக சர்ச்சைகளில் அடிபடுகிறது. தமிழர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் அந்த அமைப்பு சச்சரவுகளைக் கிளப்புகிறது. அரசாங்கம் அந்த இயக்கத்தை ஆதரிக்கிறது என்று நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஆனால், அந்த இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு உடனுக்குடன் ஏற்றுக் கொள்கிறது. இது நல்லதல்ல.

“இந்தியாவும் இலங்கையும் கலாச்சார, பண்பாட்டு ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வு ரீதியாகவும் பிணைக்கப்பட்ட நாடுகள். தொப்புள் கொடி உறவு உள்ளதால், இந்தியா எந்த நேரமும் தலையிடும் என்ற பயம் இலங்கைக்கு இருக்க வேண்டும். இன்று மன்மோகன் சிங் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருக்கலாம். ஆனால், மீண்டும் இந்திரா, ராஜீவ் மாதிரி ஒரு பவர்ஃபுல் தலைவர் வரும்போது, இந்தியா தலையிட்டு தமிழர்களுக்குச் சம உரிமையையும், அதிகாரப் பகிர்வையும் பெற்றுத் தர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“அதே நேரம் இங்கு இலங்கையில் ஒரு மகாத்மா காந்தி, ஒரு நெல்சன் மண்டேலா போன்ற தன்னலமற்ற நல்ல தலைவர் தமிழனுக்கு அமையாமல் போனது எங்களின் துரதிர்ஷ்டம். புத்திஜீவிகள், கல்விமான்களின் தலைமை கிடைக்காமல், மலட்டுத்தனமான, வீரியமற்ற தலைமைகள் தமிழனுக்கு அமைந்து விட்டன. அதன் விளைவுகளைத்தான் இலங்கைத் தமிழர் அனுபவித்து வருகின்றனர்” என்றார் வீ.தனபாலசிங்கம்.

கொழும்புவில் உள்ள ஆர்.யோகராஜன் எம்.பி.யிடம் இதுகுறித்து நாங்கள் பேசR,Yogarajanினோம். “நான் தொண்டைமான் அவர்களின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில்தான் நீண்ட காலம் இருந்தேன். அவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலை எடுத்ததும், ‘ராஜபக்ஷ என்ற இனவாதியால் தமிழர் விஷயத்தில் நியாயமாகச் செயல்பட முடியாது’ என்று நான் முடிவெடுத்து, 2009-ல் அந்தக் கட்சியை விட்டு வெளியேறி ரனில் விக்ரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தேன். கொழும்பு நகரில் போட்டியிட்டு தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறேன். 2005-ல் தமிழர்கள் எல்லாம் ரனில் கட்சிக்கு வாக்களிக்கும் எண்ணத்தில் இருந்தபோது, புலிகள் தமிழர்களைத் தேர்தல் புறக்கணிப்பு செய்ய வைத்தனர். ராஜபக்ஷ திறமைசாலி இல்லை, அவர் ஜெயித்தால் ஈஸியாய் வீழ்த்தி விடலாம் என்று புலிகள் கணக்குப் போட்டு விட்டனர். 30 ஆண்டுப் போரில் சுமார் 70 ஆயிரம் உயிர்கள் போய் விட்டன. ஆனால், அந்தப் போரினால் பலனேதும் இல்லாமல் போய் விட்டது.

“போர் நடந்த காலத்தில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டு 13- ஆவது சட்ட திருத்தத்தை எப்படி அமல் செய்யலாம் என்று ஆராயப்பட்டது. ஆனால், போர் முடிவுக்கு வந்ததும் அந்தப் பரிந்துரைகளைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டார் ராஜபக்ஷ. சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் வீடுகளை இழந்து விட்டனர். பல நாடுகள் உதவி செய்தும் இன்னமும் அரசாங்கம் துரிதகதியில் வீடுகளைக் கட்டித் தரவில்லை. இன்னும் 1 லட்சத்து 23 ஆயிரம் வீடுகளைக் கட்ட வேண்டும் என்று அரசாங்கமே சொல்கிறது. அரசின் இந்தத் தாமதம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் விவாதித்தேன். ‘30 ஆண்டுகள் போர் நடந்துள்ளது. உடனே சரி செய்து விட முடியாது’ என்று அமைச்சர் குறிப்பிட்டார். பதிலுக்கு நான் ‘30 ஆண்டுகள் போர் நடந்தது என்பதற்காக மீள் குடியேற்றத்துக்கும், 30 ஆண்டுகள் காத்திருக்கச் சொல்ல முடியாது. சில நிமிட சுனாமியில் பேரழிவு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அதைச் சரி செய்து விட முடியாது என்றாலும், மூன்றாண்டுகளுக்குள் மறு கட்டுமானம் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், தமிழர் பகுதிக்கு மட்டும் ஏன் இவ்வளவு நாட்களை எடுத்துக் கொள்கிறீர்கள்’ என்று வாதிட்டேன்.

“இப்போது தமிழர் வேண்டுவதெல்லாம், இந்தியாவில் தமிழ்நாடு உள்ளதுபோல் அதிகாரம் பொருந்திய மாகாணசபை ஒன்றைத்தான். பிற மாகாணங்களில் இருக்கும் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும் சம உரிமை வேண்டும். இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் தேவை” என்றார் அவர்.

வீ.ஆனந்தசங்கரி இதுகுறித்து எங்களிடம் குறிப்பிட்டபோது, “போர் வெற்றியைக் கொண்டாடிய அதிபர் ராஜபக்ஷ, ‘புலிகள் கேட்டதை நான் தராவிட்டாலும், டக்ளஸ் தேவானந்தாவும், ஆனந்த சங்கரியும் கேட்டதையாவது நான் தர வேண்டாமா? அதை நான் நிச்சயம் தருவேன். சிங்கள மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

ஆனால், இன்னும் எதையும் செய்து தர அவர் முன்வரவில்லை” என்று குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஆனால், அப்பாவி பொதுஜனம் பொருளாதார முன்னேற்றமும், நிம்மதியான வாழ்க்கையும் அமைந்தால் போதும் என்ற மனோபாவத்திலேயே கருத்து தெரிவித்தனர்.

புலிகள் ஆதரவாளர்கள், ‘துரோகி’ என்ற முத்திரையை, எத்தனையோ தமிழ் தலைவர்கள் மீது குத்தியிருக்கிறார்கள். அதில் அவர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் புலிப்படையின் முன்னாள் தளபதி கருணா. தற்போது இலங்கையின் நியமன எம்.பி.யாகவும், தமிழர் மீள் குடியேற்ற இணை அமைச்சராகவும் இருக்கும் விநாயக மூர்த்தி முரளிதரனுக்கு, இயக்கம் சூட்டிய பெயர்தான் கருணா. ‘புலிகள் இயக்கத்தில் சேர்ந்தது ஏன்? விலகியது ஏன்?’ என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அடுத்த வாரம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire