இராணுவ மயப்பட்ட சர்வாதிகார ஆட்சிமுறைகள் நியாயப்படுத்தப்படவும் , சகித்துக் கொள்ளப்படவுமான மோசமான நிலைமைகள் காணப்படுகின்றன. ஊழல் , சட்டம் ஒழுங்கு நீதித்துறை ஸ்தம்பிதம் ,சுயாதீனமின்மை போன்றன பெரும் பிரச்சனைகளாக உருவாகியிருக்கின்றன. அதிகாரங்களை மையத்தை நோக்கி குவிப்பது-படை மயமாக்கல் என்பது மக்களின் ஜனநாயக, மனித உரிமைகளை இழிவு படுத்துவதாகவும் - அலட்சியம் செய்வதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கிறது சமூக மட்டத்தில் குரோதமும், விரோதமும் இன-மத ரீதியாக தூண்டி விடப்பட்டுள்ளன.பெரும்பான்மையினரின் கலாச்சார திணிப்பு- மேலாதிக்கம-; கீழ்ப்படிவுள்ள சமூகங்களாக சிறுபான்மைச் சமூகங்கள் வாழவேண்டும் என்பது போன்ற நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும். இயல்பாக தமது சமூக கலாச்சார பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் இயக்கங்கள் விலைவாசி உள்ளிட்ட தமது அக்கறைகளை ஜனநாயக ரீதியில் வீதிக்கு வந்து வெளிப்படுத்தும் போது அதனை நியாயமான முறையில் எதிர்கொள்ளாமல் அதனை சதி என்பதும் அதனை தோற்கடிப்பதில் பெருமை பேசுவதும் அதிகார மட்டத்தில் காணப்படுகிறது. மத இன வெறுப்பாளர்கள் போசிக்;கப்படுகிறார்கள். தீய சத்திகள் அதிகார மட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. ஏற்கனவே நிலவுகின்ற மாகாண அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பை ஒரேயடியாக உருச்சிதைப்பதற்கான வீதி நாடகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரவலாக வெறுப்பும் ,குரோதமும் விசுறப்பட்டுக்- கொண்டிருக்கின்றன. அண்டை அயலருடன் ,உலகத்துடன் வேண்டாத பகை வளர்க்கப்படுகிறது. இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும?;
ஐ.தே.க அரசியலமைப்பு சீhதிருத்தத்திற்கான சில யோசனைகளை முன்வைத்துள்ளது. சில நம்பிக்கை தரும் வார்த்தைகளும் இருக்கின்றன. ஆனால் கடந்தகால அனுபவங்கள் திகிலூட்டுபவை, வறட்சியானவை. சந்தேகங்களை ஏற்படுத்துபவை. எனவே நம்பகரமான விதத்தில் வெளிப்படுத்தல்கள் அமைய வேண்டும். முக்கியமாக அதிகார வர்க்கமும் சமூக வாழ்வும் என்ற விடயம் பொருட்படுத்தப்படுவதில்லை. பொலிஸ் அல்லது சிவில் நிர்வாகம் மக்களுடன் காலம்காலமாக மேற்கொண்டு வரும் அணுகு முறை பொருட்படுத்தப்படுவதில்லை.
ஊழலும், இழிவும், சாதாரண மனிதருக்கு அவமரியாதையும் தான் மிச்சமாகிறது. அவர்கள் கூனிக்குறுகிப் போகிறார்கள். அவமானத்தில் சுருங்கிப்போகிறார்கள். சேவை செய்யவேண்டும் என்பதை விட மக்கள் மேல் அதிகாரம் செலுத்தவேண்டும் என்ற அகங்காரமே பரவலாக காணப்படுகிறது. ஜனநாயக உணர்வு மிக மிக குறைந்த மட்டத்திலேயே இருக்கிறது. இந்த கட்டமைப்பு காலாவதியாகவேண்டும் . சாதாரணமக்களை அரவணைப்பதற்கான, வரவேற்பதற்கான, நம்பிக்கை அளிப்பதற்கான கட்டமைப்பு தேவைப்படுகிறது.
எமது மனிதர்களில் எத்தனை பேர் நீதிமன்றம் செல்ல, பொலிஸ் நிலையம் செல்ல விரும்புகிறார்கள்? நியாயம் கிட்டும் என்று நம்புகிறார்கள் ? இது எளிமையான உண்மை. சுயாதீனமான பொலிஸ் நீதிச் சேவை பொதுநிர்வாக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். அது சரி. ஆனால் புரிதல் எப்படி இருக்கிறது. அதிகாரமா? சேவையா? இதுதான் இங்கு பிரச்சனை. சமூகத்தின் பொதுவான பிரச்சனைகளான இன-மத-பால் ,சமூக சமத்துவம் இவைபற்றிய புரிதல்கள் இவர்களுக்கு இருக்கிறதா. இவர்களுக்கான கல்வி முறையில்தான் இவை அடங்கி இருக்கின்றனவா. மக்களுக்கு நட்பான நிர்வாக யந்திரம் தேவை.
அதிகார போதை பாடசாலை, பல்கலைக்கழகம், சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை அன்றாட வாழ்வில் சந்திக்கும் எல்லா இடங்களிலும் ஊறிக்கிடக்கிறது. கிராம சேவகருக்கும் மக்களுக்குமிடையோன உறவு சுமுகமாக இருக்கிறதா. தமது காரியங்களை இலகுவாக ஆற்றலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? இறைமை மக்களுடையது என்று சொல்லப்படுகிறது. மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் அரசு யந்திரத்தை இயக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
உண்மையில் என்ன நடைபெறுகிறது.
வாக்களிப்பதுடன் காரியம் முடிவடைகிறது. மற்றும்படி மக்களுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. கணிசமான மக்கள் இந்த இழிநிலை பற்றி எந்தப்பிரக்ஞையும் இல்லாமல் இருக்கிறார்கள். தம்மை கேவலமாக நடத்துபவர்களை மீண்டும் மீண்டும் தெரிவு செய்யவும் செய்கிறார்கள். அரச மட்டதிலிருந்து சாமானிய மக்களின் மட்டம் வரை எலலாமே செல்லரித்துப்போய்க் கிடக்கிறது. இந்த அமைப்பு முறையில் மாற்றம் வேண்டாமா? இன மத வெறுப்புணர்வுகள் பால் நிலை மேலாதிக்கம், தீண்டாமை உள்ளிட்ட சமூ அநீதிகள் புரையோடிப் போய்கிடக்கின்றன. ஐரோப்பாவும் -வட அமெரிக்காவும் கணிசமான காலனிகளை வைத்திருந்தன. இன்றும் எண்ணெய் வளங்களை கையகப்படுத்துவதற்காக அறமற்ற வழிகளில் செயற்படுகின்றன.
உலகின் வளங்களை ,அருகிப்போகும் மூலப்பொருட்களை கையகப்படுத்துவதற்கான கெடுபிடியுத்தங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஐரோப்பிய -வட அமெரிக்க நாடுகளில் நிலவும் மனித உரிமை ஜனநாயகம் எமது நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாதவை. எம்மவர்கள் ஐரோப்பிய -வட அமெரிக்க -அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்கு வெறுமனே பொருளாதார காரணிகள் மாத்திரமல்ல. அங்கு நிலவும் ஜனநாயக சூழலும் எமது நாட்டின் ஜனநாயக இடைவெளி குறைவான அவல நிலையும் காரணம். மக்களை அடக்கி வைத்துக் கொண்டு வார்த்தை ஜாலங்களை உதிர்ப்பவர்கள் எமது அதிகார வர்க்கத்தினர்.ஆழமான பொருள் கொண்டதாக மக்களுக்கு அர்ப்பணிப்பு கொண்ட வார்த்தை ஜாலங்கள் இருக்கும். நடைமுறை சுமையாகவும் கெடுபிடியானதாகவும் இருக்கும்.உலகளாவிய அளவில் சமூக அரசியல் இயக்கங்கள் மனித வாழ்வை செழுமைப்படுத்தி வந்திருக்கின்றன.
இது காலாதிகாலமாக நிகழ்வது.
அநீதியான சமூக அமைப்பு பற்றி அதனை மாற்ற வேண்டியதன் தவிர்க்கமுடியாத விதி பற்றி மார்க்ஸ் -ஏங்கல்ஸ் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே எடுத்தியம்பினார்கள். இன்று வரை உலகளாவிய அளவில் மாற்றத்திற்கான ,சமூக அநீதிகளுக்கெதிரான இயக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காந்தியடிகள் காட்டிய அறிநெறி- சுதந்திர இயக்கம் ஆபிரிக்க- அமெரிக்க கண்டங்களில் நிறவெறிக்கெதிரானதும்- சுதந்திரத்துக்குமான இயக்கங்களுக்கு வழிகாட்டியுள்ளது. இலங்கையிலும் சமூக அநீதிகளுக்கெதிரான இடதுசாரி இயக்கமும், காந்தியடிகளைப ;பின்பற்றிய யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும் 1930களில் தோற்றம் பெற்றன. நடேசையர் அவர்களின் அரசியல்-தொழிற் சங்க செயற்பாடுகளும் மலையகத்தில் தீவிரம் பெற்றிருந்தன. ஆனால் கடந்து வந்த காலங்களில் அறஉணர்வுகள் சிதைந்த அரசியல் சமூக கட்டமைப்பே எஞ்சியிருக்கிறது. அதிருப்திகள் 1970களில் 80களில் கிளர்ச்சிகளாகவும,; நீண்ட 3 தசாப்தகால யுத்தமாகவும் மாறியது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு பதிலாக தீவிரமடைவதற்கான நிலைமைகளே தக்க வைக்கப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாத்ததை ஒடுக்கிவிட்டோம் என்ற ஆரவாரம் மாத்திரமே காதைப் பிளக்கிறது. வெறுப்பும் ,குரேதமும், மேலாதிக்க அகங்காரமும் தலைதூக்கி நிற்கின்றன. படிப்பினைகளை கருத்திற்கெடுத்து சமூக நல்லுறவை ஏற்படுத்துவதற்கு, இலங்கையின் பல்லினப்பங்கை ஏற்றுக் கொள்வதற்கான மனோநிலை ஏற்படவில்லை. மதச் சார்பின்மை, சுதந்திரமன சமூக பெருளாதார சமூக அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடமில்லை சூறையாடல் -வரம்பற்ற சூறையாடலுக்கான வழி திறக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களின் சேமிப்பு எல்லாம் கரைந்து நுகர்வு கலாச்சாரத்தால் கடனாளிகளாக மாறும் நிலை கணப்படுகிறது. சேவை என்பதை விட வசூல் அதிகமாக நடைபெறுகிறது. ‘லீசிங்’ இலகு கடன் என வௌ;வேறு பெயர்களில் இது நடந்து கொண்டிருக்கிறது. பங்குச் சந்தை தான் பொருளாதார வளர்ச்சியின் அளவீடாகிறது. சூறையாடல் இயல்பானதே என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வைத்தியமும், கல்வியும் மிகுந்த லாபம் தரும்; வியாபாரங்களாக மாறியுள்ளன.
உணவு, இருப்பிடம், கல்வி ,சுகாதாரம், போக்குவரத்து என்பன குறைந்த செலவில் கிட்டுவதாக இருக்க வேண்டும். இராணுவ பிரசன்னமும், நில அபகரிப்பும் சமுகங்களின் வாழ்வின் மீதான- அந்தரங்க வாழ்வின் மீதான தலையீடுகள் வளர்ச்சியையோ, சமூகப் பாதுகாப்பையோ நோக்கமாக கொண்டவை அல்ல. பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்திருப்பதற்கும் எந்த நியாயமும் கிடையாது மேலாதிக்கம், சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்துவது, ஜனநாயக எதிர்பியக்கங்களை நசுக்குவது, அதிகாரவர்க்கத்தின் பிடியை இறுக்குவது என்பனவே இவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. நாட்டின் வாழ்வு என்பது மக்களின் இருப்பு, வௌ;வேறு சமூகங்களின் இருப்பு, நலிவுற்றவர்களின் இருப்பு என்பவற்றில் தானே அடங்கியிருக்கிறது.
மக்களிடையே நம்பிக்கையை கட்டி எழுப்புவதில் தானே ஒரு நாடு உயிர்க்கிறது. ஆனால் அதிகார போதை இங்கு கிறங்கடிக்கிறது. இந்த நிலை மாறினால் தான் நாட்டின் வளங்களை மக்களிடையே சிறந்த முறையில் பகிர முடியும். சேவைத்துறைகள் உண்மையான அர்த்தத்தில் செயற்படமுடியும் இன சமூகங்களிiயே நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும் . அரச முறையில் அனைத்து சமூகங்களையும் பங்கு பற்றவைக்கமுடியும் . அச்சமற்ற -எழிலார்ந்த- சுதந்திர வாழ்வொன்றை ஸ்தாபிக்க முடியும். ஜனநாயக மாற்றத்துக்கான நாடுதழுவிய மக்களியக்கத்தின் வரலாற்றுத்தேவை உருவாகியிருக்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire