நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு அஞ்சி முன்னுக்கு வந்து குரல் கொடுக்காததன் மூலம் மகிந்த ராஜபக்ஷவை விட சந்திரிகா பலமுள்ளவர் என்பது தெளிவாகியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மகிந்தவிட சந்திரிகா பலமுள்ளவர் என்றால், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெட்கப்பட வேண்டியவர் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் தேசிய ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்தவின் நிலைப்பாட்டை சமூகமயப்படுத்துவதற்காக சாட்டையாளர்கள் சிலர் வெளியில் குதித்துள்ளனர். அவர்கள் அன்று எங்கிருந்தனர் என்பதை ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும்.
தற்போது ராஜித, வாசு, பீரிஸ் போன்றவர்கள் ரகசியமான முறையில் சந்திரிகாவை சந்திக்கின்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்ஷவிடம் சென்று நாட்டை பிரிப்பதற்கான Nவைகளை இவ்வாறே செய்து வருகின்றனர் எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire