இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்பான மாநாடொன்று புதுடில்லியில் நடைபெற்ற நிலையில் அவசர அழைப்பின் புதுடெல்லிக்கு பயணமானார்கள் த.தே. கூட்டமைப்பினர்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலை 6 மணியளவில் புதுடெல்லிக்கு பயணமானது.
இந்திய
அரசின் அவசர அழைப்பின் பேரில் சென்றுள்ள இந்தக் குழுவில் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ்
பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன்.செல்வராசா ஆகியோர்
இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர்
மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, வெளிவிவகார அமைச்சர்
சல்மான் குர்ஷித், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்
சந்தித்துப் பேசவுள்ளனர்.
குறிப்பாக, 13வது அரசியலமைப்புத்
திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் இலங்கை அரசின் முயற்சிகள் குறித்தே இந்தச்
சந்திப்புகளில் முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை.
புதுடெல்லியின் முக்கிய அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளுடனும், 13வது
திருத்தத்தை பலவீனப்படுத்தும் இலங்கை அரசின் முயற்சிகள் குறித்து
கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
13வது
திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் 19வது அரசியலமைப்புத் திருத்த
சட்டமூலத்தை வரும் 18ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக
அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளது
குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire