பிள்ளையான் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வது அல்லது அதில் திருத்தங்களை ஏற்படுத்துவது என்பது தற்போதுள்ள அமைதியான சூழ்நிலையை மீண்டும் எரியூட்டுவதாகும் எனவும் இதனால் அதில் திருத்தங்களையோ, மாற்றங்களையோ செய்வதற்கு ஆதரவளிக்க போவதில்லை.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசியல் நிரோட்டத்தில் இணைந்து கொண்டது. நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போது, மாகாணத்தை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் சென்றேன். இந்த அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாகவே அதற்கான சந்தர்ப்பம் கிடைத்து எனவும் பிள்ளையான் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire