கறுப்பு இன மக்களின் உரிமைக்காக போராடி 27ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கறுப்பர்களின் மகாத்மாவாக போற்றப்படும் நெல்சன் மண்டேலா கடந்த 10நாட்களுக்கும் மேலாக நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு போராடிய நிலையில் பிரிட்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இழப்பு ஏற்க முடியாத அளவுக்கு இந்நாட்டு மக்கள் இவர் மீது பாசம் வைத்துள்ளனர். இவர் உயிர் பிரியக்கூடாது என்றும் இவருக்கும் இன்னும் ஆயுள் கொடு என்றும் மக்கள் பல தரப்பினரும்,ஆங்காங்கே உள்ள ஆலயங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.மண்டேலா வீடு மற்றும் அவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பாக பள்ளி சிறுவர்,சிறுமிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.பிரார்த்தனை பாடல்கள் பாடியும்,வண்ண பலூன்கள் பறக்கவிட்டும் ஆங்காங்கே சிறார்கள் குழுமியுள்ளனர். நகர முக்கிய வீதிகளில் இவரது உருவபடங்கள் தொங்க விடப்பட்டுள்ளன,
மண்டேலா இந்நாட்டின் விடுதலைக்கு பின்னர் முதல் கறுப்பர் இன அதிபர் ஆனவர்.27ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து 1990ல் விடுதலை செய்யப்பட்டார்.தொடர்ந்து 1994ல் அந்நாட்டின் முதல் அதிபர் ஆன கறுப்பர் இனத்தவர்.இவரது போராட்டம் ஒரு இன போராட்டமாக இருந்து வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர்.இதனால் இந்நாட்டு மக்கள் இவரை தந்தையாக பாவிக்கின்றனர். இவருக்கு தற்போது வயது (94).
அதிபர் ஷூமா தகவல்:தற்போதைய அந்நாட்டு அதிபர் ஷூமா மண்டேலா நலம் குறித்து ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தார்.பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,மண்டேலா விரைவில் குணமடைவார்.நமது இனிய தலைவருக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வதன் மூலம் மக்கள் அவரோடு இருக்கின்றனர் என்றார்
Aucun commentaire:
Enregistrer un commentaire