பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்த செலவை யார்? எப்படிக் கொடுப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் போடப்பட்ட வழக்கு 2004ஆம் ஆண்டு பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
mardi 30 septembre 2014
இதுதான் சினிமா;
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இதில், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், சரவணன், குண்டு கல்யாணம், மனோபாலா, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, ஆதிராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப்ராகிம் ராவுத்தர், ராதாகிருஷ்ணன், கில்டு ஜாகுவார் தங்கம், சவுந்தர், சுப்பையா, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளார்கள்
மதிய 1 மணி நிலவரம்
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் யாரும் இதுவரை கலந்து கொள்ளவில்லை. கார்த்தி மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மிகக் குறைந்த செலவில் செவ்வாய் சுற்று வட்டப் பாதையில் இணைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம்,
மிகக் குறைந்த செலவில் செவ்வாய் சுற்று வட்டப் பாதையில் இணைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து புதியதொரு படத்தை அனுப்பி உள்ளது. அப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் புழுதிப் புயல் வீசும் காட்சி தென்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 74,500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, மங்கள்யான் இப்படத்தை எடுத்துள்ளது.
மங்கள்யான் விண்கலத்தில் சக்தி வாய்ந்த கேமரா, மீத்தேன் வாயுவைக் கண்டறிவதற்கான கருவி உள்பட 5 முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் மங்கள்யானின் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
lundi 29 septembre 2014
காலை 7 மணி முதலே டிக்கட்டுக்களுக்காக அலை..நியு யோர்க் நகரில் பிரமாண்ட மேடையில் மோடி உரை
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் (Madison Square Garden) பிரமாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சுழலும் மேடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகின்றார்.
சுமார் 18 ஆயிரம் இந்திய- அமெரிக்கர்கள் இந்த மைதானத்தில் கூடியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமான திரைகளில் நரேந்திர மோடியின் உரை மொழிபெயர்ப்பு வாசகங்களுடன் காண்பிக்கப்படுகின்றது.
ஐநா பொதுச்சபை அமர்வில் இந்தியப் பிரதமர் சனிக்கிழமை உரையாற்றினார்.
மாடிஸன் சதுக்க மைதானத்தில் ராக் ஸ்டார்ஸ் என்று வர்ணிக்கப்படுகின்ற உலகப் பிரபலங்களுக்குரிய ஏற்பாடுகளுடன் நரேந்திர மோடியின் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எல்விஸ் பிரெஸ்லி, எல்டன் ஜான், முஹமது அலி போன்ற உலகப் பிரபலங்களின் நிகழ்வுகளே இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் நடந்துள்ளன.
இந்தியப் பிரதமரின் நிகழ்வு இங்கு முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதலே ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வரிசைகளில் நின்று டிக்கட்டுக்களுக்காக அலைமோதியதாக நியு யோர்க்கில் உள்ள பிபிசி செய்தியாளர் பிரஜேஷ் உபத்யாய் தமிழோசையிடம் கூறினார்.
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 10 ஆண்டுகளாக அமெரிக்கா வீசா அனுமதி மறுத்திருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுக்களை மோடி மறுத்திருந்தார்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அவர் மீதான வீசாத் தடையை அமெரிக்கா தளர்த்தியது.

கோபாலசாமியின் அமெரிக்க கனவு பலித்தது மகிந்தவும் மோடியும் சந்திப்பு
ஐநா பொதுச்சபை கூட்டத் தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சினேகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, இருநாட்டு நலன்கள் சார் விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாகவும், இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்தின் இணையதளம் கூறியுள்ளது.
வடக்கு மாகாணசபைக்கு இலங்கை அரசாங்கம் செய்துவரும் நிதியுதவிகள் குறித்தும், ஒன்றரை பில்லியன் ரூபா நிதி இதற்காக இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ நரேந்திர மோடியிடம் விளக்கமளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மீனவர் பிரச்சனை தொடர்பில் பேசிய இருநாட்டுத் தலைவர்களும், இந்தப் பிரச்சனையை மிகக் கவனமாக கையாள்வதற்கு இணங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜெனிவாவிலுள்ள ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கைக்கு அளித்துவரும் ஆதரவுக்காகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காகவும் மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு நன்றி கூறியதாகவும் இலங்கை அரசாங்கத்தின் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
'நாம் சேர்ந்திருக்க வேண்டும், அதனால் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்' என்று நரேந்திர மோடி கூறியதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

dimanche 28 septembre 2014
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியற் பயிற்சிப் பாசறை
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியற் பயிற்சிப் பாசறை 27.09.2014 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியற் பயிற்சிப் பாசறை கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் 27.09.2014 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்றது.
வரலாற்று நோக்கும் சமகால அரசியலும் எனும் தொணிபொருளில் இடம் பெற்ற இச் செயலமர்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்,பிரதித் தலைவர் க.யோகவேள், தேசிய பொருளாளர் ஆ.தேவராஜ்,தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா, கொள்கைபரப்புச் செயலாளர் எம்.எம்.எம்.ஹன்ஷீர், உப செயலாளர் ஜெ.ஜெயராஜ், உப செயலாளர் (நிருவாகம்) ஆ.ஜோர்ச்பிள்ளை உள்ளீட்டபலரும் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானுக்கு மோடி பதிலடி
பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து கொண்டு, அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.ஐ.நா., பொதுசபையின் 69வது ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பிரதமராக உங்கள் முன்பாக முதன்முறையாக பேசுகிறேன். நான் இந்திய மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நன்கு அறிந்தவன். அதே சமயம் இந்த உலகம் 125 கோடி மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் உணர்ந்துள்ளேன். ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென ஒரு தத்துவம் உள்ளது. நான் கருத்துக்களை சொல்லவில்லை. இந்த தத்துவம் ஒவ்வொரு நாட்டையும் வழிநடத்தும். இந்தியாவின் தத்துவம் "வாஷூதெய்வ குடும்பகம்". இந்தியா பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விரைவாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஐ.நா., அலுவலகத்தில் 193 நாடுகளின் கொடிகள் பறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறோம். இந்தியா எப்போதும், நீதிக்காகவும், கவுரவத்திற்காகவும், வாய்ப்புகளுக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளது. இந்த உலகில் தற்போது ஜனநாயக அலை வீசிவருகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் நடந்த அதிகார மாற்றம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதே போல், நேபாளத்தில் வலுவான ஜனநாயகம் அமைந்துள்ளது.
இந்தியா உலகத்தை ஒரு குடும்பமாக பார்க்கிறது. பன்நோக்கு தன்மையில் இந்தியாவிற்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த நான் தயாராக உள்ளேன். ஆனால் அவை பயங்கரவாதத்தின் நிழலில் அமையக்கூடாது. பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை பாகிஸ்தான் தான் உருவாக்க வேண்டும். பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், இந்தியா உதவி செய்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம், அதன் அண்டை நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதன் காரணமாகவே, எனது அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து அண்டை நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டி வருகிறோம். தற்போது பயங்கரவாதம் புதிய வடிவில் உருவெடுத்துள்ளது. உலகில் உள்ள எந்த ஒரு நாடும் அதில் இருந்து தப்ப முடியவில்லை. பயங்கரவாதத்தை எதிர்க்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எதுவும் எடுத்துள்ளனவா? இந்த அமைப்பில் பிரச்னைகளை எழுப்புவது மட்டும், அதற்கு தீர்வாக அமைந்து விடாது. இந்தியா அதன் வெற்றியைப் பெற, அமைதியான சூழல் தேவைப்படுகிறது. பிரச்னைகளை களைய கடல், வான்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸ் ஆகியவற்றில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நல்ல பயங்கரவாதம் மற்றும் கெட்ட பயங்கரவாதம் என நாம் எப்போது பேச ஆரம்பிக்கிறோமோ, அது பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நோக்கம் குறித்த கேள்விகளை ஏற்படுத்தி விடுகிறது. பல ஆண்டுகளாக, இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது தான் இதை உலகம் உலகளாவிய பிரச்னையாக பார்க்க ஆரம்பித்துள்ளது. நாம் எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஐ.நா., தான். உலகளாவிய அரங்காக ஐ.நா., இருக்கும் போது நமக்கு எதற்காக ஜி4, ஜி7, ஜி 20 என பல்வேறு ஜி அமைப்புகள் உள்ளன?
அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். உலகில் உள்ள மக்களில் 6ல் ஒருவர் இந்தியராக உள்ளனர். அமைதியை நோக்கிய பயணத்திற்காக நம்மை நாமே மாற்றிக்கொள்வோம். 21ம் நூற்றாண்டில் உலகம் வேகமாக மாறி வருகிறது. ஐ.நா., அமைதிப்படைக்கு இந்தியா முழு வலிமையை அளித்துள்ளது. வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களது பொறுப்புகளை அளிக்க வேண்டும். சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, ஒருவர் மற்றவரின் கவலைகளையும், அக்கறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உலகில் பல கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. உலக யோகா தினத்தை அனுசரிப்போம். உடல்நலத்தைப் பற்றி பேச வேண்டுமானால், நாம் பின்னோக்கி அடிப்படைக்கு செல்ல வேண்டும். அதற்கு குறிப்பாக யோகாவைப் பற்றி கூற விரும்புகிறேன். அடுத்த ஆண்டு ஐ.நா., அதன் 70 ஆண்டை கொண்டாட உள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு ஐ.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். நாம் தனியாக வளர்ச்சி அடைய முடியாது. இந்த உலகம் ஒருங்கிணைந்தே வளர்ச்சியடைய முடியும். இவ்வாறு மோடி பேசினார்.

ஜெ.,வின் நம்பிக்கைக்குரிய ஓ. பன்னீர் செல்வம் செல்வம் தேர்வு 21ம் தேதி முதல்வராக பதவியேற்றார்
மதுரை: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் தேனி மாவட்டத்தை சேர்ந்தவரும் ஜெ.,வின் நம்பிக்கைக்குரியவருமான ஓ.பன்னீர்செல்வம் இக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று சென்னையில் நடந்த அ.தி.மு.க,. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும். இவர் நாளை கவர்னர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் முல்வராக பதவியேற்பார் என தெரிகிறது. இவரது வாழ்க்கை வரலாறு விவரம் வருமாறு:
கட்சியின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜன., 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவர் 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2001 சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து, முதன்முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 19ம் தேதி, ஜெ., தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார். பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி, பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து செப்., 21ம் தேதி முதல்வராக பதவியேற்றார். 2002 மார்ச் 1ம் தேதி வரை பதவியில் இருந்தார். பின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றவுடன் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின் 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது. இத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்தார். 2011 சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்ட்டார். இம்முறை நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் இவர் மாலையில் கவர்னரை சந்திப்பார். தொடர்ந்து அவர் நாளை ( திங்கட்கிழமை) கவர்னர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த முதல்வர் யார் ?
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி
எழுந்துள்ளது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 பேரின் பெயர்கள்
பரிசீலிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001ல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தார். இந்த முறையும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததும், நீதிமன்ற அறையில் இருந்த ஒ.பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி உறுதி என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன், அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக அதிமுக தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பின், இவர்கள் நாளை காலை சென்னை திரும்ப உள்ளனர்.
அதிமுக உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கூடி புதிய முதல்வர் பெயரை இறுதி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (28.09.14) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவர் முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார். அதன் பிறகு இது குறித்த தகவல் கவர்னர் ரோசையாவுக்கு தெரிவிக்கப்படும். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் யார், யார் என்ற பட்டியல் அறிவிக்கப்படும். அமைச்சரவை பட்டியலில் ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு அதே இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, சிலர் புதிதாக அமைச்சரவை பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. நாளை கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் சென்னை விரைந்துள்ளனர்.
இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் போதே ஊழல் தடுப்புச் சட்டத்தில்: கைதாகிய முதல் 'முதல்'வர் ஜெயலலிதா
காலையில் முதல்வராக பிரதமருக்கு
உரிய பாதுகாப்புடன் தனி விமானத்தில் பயனித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
ஜெயராம் மாலையில் கர்நாடகாவின் அக்ரஹாரா சிறைக்கு சிறை வாகனத்தில் சிறை
அதிகாரிகளின் பாதுகாப்பில் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா ஜெயராமிற்கு கைதி எண் 7402 வழங்கப்பட்டு இரவு உணவும் சிறைச்சாலையில் வழங்கப்பட்டது. சிறையின் வெளியே அதிமுக உறுப்பினர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.
சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 கைது எண்கள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்- உடனடி பிணை சாத்த்தியம் இல்லை:-
12:24
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர். இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து செல்லவில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறும் வரை இந்த சிறையிலேயு ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒக்டோபர் 5 வரை உயர் நீதிமன்றம் விடுமுறை! உடனடியாக பிணையில் வெளிவர சாத்த்தியம் இல்லை-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக பிணை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சிறைக்கு செல்லும் ஜெயலலிதா தரப்பினர் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பிணை கேட்டு மேல்முறையீடு செய்யமுடியும். ஒக்டோபர் 5வரை தசரா விடுமுறை என்பதால் அதன்பின்னரே பிணைமனு மீதான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது. அவரால் உடனடியாக பிணை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பிணை மனு மேன்முறையீடு செய்யமுடியும். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரும் 29ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 5ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒக்டோபர் 5ஆம் திதிக்கு பின்னரே பிணைமனு மீதான விசாரணை நடைபெறும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலும் அவசர வழக்குகளை விசாரிக்கும் வசதியில்லை என்பதால் ஜெயலலிதாவின் பிணை மனுவை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பிணை கிடைக்கும் வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் பதியில் இருக்கும் போதே ஊழல் தடுப்புச் சட்டத்தில்: கைதாகிய முதல் 'முதல்'வர் ஜெயலலிதா:-
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து ஜெயலலிதா சிறப்பு கவனம் பெற்றுள்ளார் .
இதே சட்டத்தின் விளைவாக, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாத்வ் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் தீர்ப்பு வழங்கப்பட்டபோது முதல்வர் பதவியில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த அதிரடி தீர்ப்பு அதிமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் மற்றும் விசுவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் தீர்ப்பு வெளியானவுடன் அதிமுகவினர் கதறி அழுதனர்.
samedi 27 septembre 2014
சொத்துக்குவிப்பு வழக்கில் நான் வென்றுள்ளதையும் பார்த்து ஜெயலலிதா மகிழ்ச்சியடைய வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமி
டிவிட்டரில் சில நாட்களுக்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு சிறை என்று டிவிட் செய்தவர் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி. இதற்காக அவர் மீது அவதூறு வழக்கு ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே பத்திரிகைகளில் அளித்த பேட்டிக்காகவும் சுப்பிரமணியன் சுவாமி மீது ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மதியம் 1.46 மணியளவில், சுப்பிரமணியன் சுவாமி ஒரு டிவிட் செய்துள்ளார். அதிலும் ஜெயில் ஃபார் ஜெயலலிதா=ஜெ.ஜெ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்த தகவல் வெளிவராத அந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு டிவிட்டை வெளியிட்டு அதிமுகவினரை சீண்டி பார்த்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. மற்ற சில டிவிட்டுகளில், 14.06.1996ம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தேன். அதன்பிறகு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அதை அரசு சார்பில் நடத்த அனுமதி கேட்டார். நானும் அனுமதியளித்தேன். இப்போது வழக்கு தீர்ப்பால் கிடைக்கும் பெயரை கருணாநிதி பெற முயலுவார். 2ஜி வழக்கில் எனது வழக்கு வெற்றி பெற்றால் அப்போது ஜெயலலிதா மகிழ்ச்சியடைவார். அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் நான் வென்றுள்ளதையும் பார்த்து ஜெயலலிதா மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறு டிவிட் செய்துள்ளார்.
கடுமையான நீதிபதியிடம் தானே மாட்டிக் கொண்ட ஜெயலலிதா விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலை
சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ இழுத்தடித்த ஜெயலலிதா, தம் மீதான தீர்ப்பு மிகக் கடுமை காட்டக் கூடிய ஒரு நீதிபதியிடம் சிக்கும் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டு 18 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த வழக்கை இழுத்தடித்தது ஜெயலலிதா தரப்பு.
ஒவ்வொருமுறையும் சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாற்றி மாற்றி வழக்குப் போட்டு இழுத்தடித்துப் பார்த்தார். அட தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட எத்தனையோ மனுக்களைத் தாக்கல் செய்துப் போட்டுவிட்டார். உச்சநீதிமன்றத்தில் நேற்றும் கூட ஒரு வழக்கைப் போட்டு தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பார்த்தது ஜெயலலிதா தரப்பு.
ஆனால் எதுவும் நடைபெறவில்லை. இத்தனை போராட்டத்துக்கும் இழுத்தடிப்புக்கும் பயனில்லாமல் ஊழல் வழக்குகளில் மிகக் கடுமையான தீர்ப்பளிக்கக் கூடிய நீதிபதியிடம் போய் தானே சிக்கி, தற்போது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.........சொதத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகத் தீர்ப்பு வெளியானதும், விஜய்யின் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகிவிட்டார்கள். இந்தத் தீர்ப்பை அவர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள்.இந்த சூழலில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் கத்தி படத்தை வெளியிடும் சூழலை ஜெயலலிதா அரசு உருவாக்கித் தருமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து, அவர் சிறைக்கும் போகிறார். இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலையைக் கொடுத்திருக்கிறது. பலரும் தங்கள் மேலிடத்துக்கு போன் போட்டு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்களாம்.
வருமானத்துக்கு மீறிய குற்றவாளி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு தீர்ப்பு
வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
தனது 1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், இன்று ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தத் தகவலை சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் சில ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார். பின்னணி
ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவரது வருமானத்துக்கு மீறி, சுமார் 66.65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் இன்று சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
ஜெயலலிதாவுடன் சேர்த்து அவரது தோழி சசிகலாவும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனும் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
தற்போது பாஜகவில் இருக்கும் சுப்ரமணிய சாமியின் புகாரை அடுத்து, தமிழக ஊழல் ஒழிப்புத் துறையால் போடப்பட்ட இந்த வழக்கு, தமிழக நீதிமன்றத்திலிருந்து , திமுக பொதுச்செயலர் அன்பழகனின் வழக்கை அடுத்து 2003ல் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இந்த குற்றவாழி பணம் கொடுத்து தப்புவதற்காகவே அம்மா உணவம்.அம்மா தியட்டர் அம்மா என்ற பெயருடன் அத்தனை வேலைகளும் தமிழ் நாட்டில் அரங்கேறுகின்றன என்ற அச்சம் மக்கள் மத்தியில் துலிர் விடும் நாள் நெரிங்கி விட்டதாகவே தோன்றியுள்ளது

vendredi 26 septembre 2014
இந்தியாவில் விதவைப் பெண்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் வடக்கு நகரான விரிந்தாவனிலிருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சொந்த நகரான கொல்கத்தாவுக்கு வந்துசேர்ந்துள்ள விதவைப் பெண்கள் தங்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கணவன்மார் உயிரிழந்த பின்னர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களே இந்தப் பெண்கள்.
ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் தங்களின் குடும்பத்தவர்களுக்கு சுமையாக இருப்பதாகவும் துரதிஷ்டத்தைக் கொண்டுவருவதாகவும் கூறி கைவிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வடக்கு நகரான விரிந்தாவனில் வசிக்கும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் விதவைப் பெண்கள் பிச்சை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா திரும்பியுள்ள விதவையர்கள் மேற்குவங்க ஆளுநரிடம் உதவி கோரவுள்ளனர்.

மோடிக்கு அமெரிக்கா நீதிமன்றம் அழைப்பாணை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தனது விஜயத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை ஒன்றை அனுப்பியிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற கலவரங்களில் அவர் ஆற்றியதாகக் கூறப்படும் பங்கு தொடர்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது
மோடி இன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் வந்து ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறர். அவர் பின்னதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் சந்திக்கவிருக்கிறார்.
அமெரிக்க நீதிமையம் என்ற மனித உரிமை அமைப்பும் குஜராத் கலவரங்களில் உயிர்தப்பியோர் இருவரும் சேர்ந்து இந்த வழக்கைத் தொடுத்திருக்கின்றனர்.
மோடியை இந்திய நீதிமன்றங்கள் இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றமற்றவர் என்று கூறி தீர்ப்பளித்திருக்கின்றன.
இந்தக் கலவரங்களில் மோடிக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு காரணமாக, சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் அவரது பெரு வெற்றிக்கு முன்னதாக, அமெரிக்க விசா அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது.
சி.சந்திரகாந்தன் தலைமையில் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக்கூட்டம்
மண்முனை வடக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக்கூட்டம் 25.09.2014 பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவரும்,ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் முதலமைச்சரும் ஆகிய சி.சந்திரகாந்தன் தலைமையில் மண்முனை வடக்கு “டேபா” மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ. தவராஜாவின் வரவேற்புரையுடன் நடைபெற்றது
இங்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமான நிதி ஒதுக்கீடுகளின் வேலைத்திட்டத்தின் நடைமுறைகள்,பாடசாலை அபிவிருத்திச்செயற்பாடுகள் ,வாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.இந்நிகழ்வில் முன்னாள் மகாணசபைஉறுப்பினர் பூ.பிரசாந்தன், பொருளாதார அபிவிருத்தி இணைப்பாளர்களும்,கிராமசேவகர்களும்,வாழ்வின் எழுச்சித்திட்ட அதிகாரிகளும் ,திணைக்கள தலைவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தீவிரவாதிகள் மீது குண்டு வீசிய அரபு நாட்டு பெண் விமானி அல்– மன்சூரி
ஈராக்கை தொடர்ந்து சிரியாவில் இஸ்லாமிய தேசம் பகுதியில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் மிது அமெரிக்கா தலைமையில் விண்வெளி தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த பெண் விமானியும் இந்த குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளார். அவரது பெயர் மேஜர் மரியம் அல்– மன்சூரி (35).
இவர் கடந்த 2007–ம் ஆண்டில் அபுதாபியில் உள்ள கலிபாபின் ஷயத் விமான பயிற்சி கல்லூரியில் படித்து விமானி பட்டம் பெற்றவர். அதை தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளின் விமான படையில் முதல் பெண் விமானியாக பணியில் சேர்ந்தார்.
கடந்த 23–ந்தேதி நடந்த குண்டு வீச்சில் இவர் பங்கேற்றார். இத்தகவலை அவரது ஆதரவாளர்கள் படத்துடன் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். அவரது சேவையை பாராட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் பழமைவாதிகள் இவரது செயலை எதிர்த்துள்ளனர். இது கிரிமினல் நடவடிக்கை என கூறியுள்ளனர்.
சீனாவும், ரஷ்யாவும் அறிக்கையை நிராகரிக்கிறது இந்தியா அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்தியுள்ளது.பிரான்ஸ் ஐரோப்பிய சில நாடுகளே ஆதரவான நிலைப்பாடு
மனித உரிமைகள் நிலை குறித்து ஐ நா மனித உரிமை ஆணையரால் அளிக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட ஒரு சில நாடுகளே மனித உரிமை ஆணையரின் அறிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.
சீனாவும், ரஷ்யாவும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளன.
அரசியல் தீர்வு குறித்து இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை நிலவரம் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் ரா’அத் செயித் அல் ஹூசேன் சமர்பித்த அறிக்கை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில் நடைபெற்றது.
இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் மீது அரசாங்க அமைப்புக்களாலும், அரசு சாரா அமைப்புக்களாலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ நா மனித உரிமை ஆணையர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணையம் கோரியது போல ஒரு சர்வேத விசாரணை நடைபெறுவதை சிக்கலாக்கும் நோக்கிலேயே ஒரு அச்சமூட்டக் கூடிய சூழல் இலங்கையில் உருவாக்கப்படுவதாகவும் ஆணையரின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் இலங்கை அரசோ சர்வதேச விசாரணை என்பதை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இது தொடர்பாக எவ்வித ஒத்துழைப்பையும் தாம் தரப்போவதில்லை என்றும் கூறியுள்ளது.
"குறையுள்ள அணுகுமுறை, தவறான உதாரணம்"
ஜெனிவாவில் இருக்கும் ஐ நா அமைப்புகளுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசிங்க இது குறித்து பேசுகையில் ”இலங்கை அரசு, அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 25, 1ஐயும்,
ஐ நா மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதையும் முழுமையாக நிராகரிக்கிறது. இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைக்கப் போவதில்லை என்பதையும் இலங்கை தெளிவுபடுத்திவிட்டது. இந்த நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுபவர்களுக்கு நான் மரியாதையுடன் சொல்லிக் கொள்வது என்னவென்றால் குறையுள்ள ஒரு அணுகுமுறையை சரி என்று காட்டவும், ஒரு தவறான முன் உதாரணத்தை உருவாக்கவும் இலங்கை அரசு விரும்பவில்லை", என்றார்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும் கூட்டத்தில் பேசிய நாடுகளில் பிரதிநிதிகள் பலர் இலங்கை அரசின் நிலைப்பாட்டையே ஆதரித்தனர்.
பிரன்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் பிரதிநிதிகள் மட்டுமே மனித உரிமைகள் நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
அதே நேரம் இலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் ஆணையம் காட்டும் சிறப்பு கவனம், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இலங்கை குற்றம்சாட்டியது.
ரவிநாத ஆரியசிங்க பேசுகையில், " ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அரசியல் ரீதியானது, இந்த நடவடிக்கை ஒரு நாட்டின் இறைமையையும, சுதந்திரத்தையும் பாதிக்கிறது. ஒரு நாட்டின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் வாய்ப்புக்கள் வழியாகவே பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளையும் இது மீறுவதாக உள்ளது. இலங்கைக்கு உதவுவதுபோல ஐ நா மனித உரிமை அமைப்பு காட்டிக் கொண்டாலும், இதனுடைய நடவடிக்கைகள் இலங்கையில் மீளிணக்கப்பாடு உருவாவதை தடுக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது" என்றார்.
சீனாவும், ரஷ்யாவும் இலங்கைக்கு ஆதரவாக பேசின.
அரசியல் தீர்வை வலியுறுத்தும் இந்தியா
இந்தியப் பிரதிநிதி பேசுகையில், "குறித்த நாடு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் இந்த விசாரணையை எப்படி மேலெடுத்துச் செல்வது என்பது குறித்து மனித உரிமை ஆணையர் ஏதும் சொல்லவில்லை என்பதை நாங்கள் கரிசனையுடன் குறித்துக் கொள்கிறோம். யார் இந்த விசாரணைக் குழுவில் இருப்பார்கள், இது எப்படி வேலை செய்யும், இதற்கான நிதி ஆதாரங்களை எப்படி வரப்போகிறது என்பது போன்ற தகவல்களும் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களுடன் பகிரப்படவில்லை. இந்த அறிக்கையின் நம்பகத் தன்மையை உறுதிசெய்ய இதுபோன்ற தகவல்களை கொடுக்குமாறு நாங்கள் கேட்கிறோம். இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவது ஒரு அரசியல் தீர்வை நோக்கி செல்ல வழிவகுக்கும். ஒரு கால எல்லைக்குள் நல்லிணக்க ஆணையக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் 13 ஆவது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை உருவாக்க பாடுபட வேண்டும்" என்றார். ஐநாவின் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ள சிலரது தீய நோக்கத்துடனான திட்டங்களால் துரதிர்ஸ்ட வசமாக பாதிக்கப்பட்ட ஒரு
நாடாக இலங்கை இருக்கிறது என்று அவர் அங்கு கூறியுள்ளார்.
நாடாக இலங்கை இருக்கிறது என்று அவர் அங்கு கூறியுள்ளார்.
ஒரு 5 வருடகாலத்துக்குள்ளேயேபுனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம்ஆகியவற்றில்இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அத்தகையவர்கள் கவனத்தில் கொள்ளாது தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் தனது நாடு இன்று இலக்கு வைக்கப்படும் முறையில் ஒரு நடுநிலை இல்லாமையும் பாரபட்சமும் காணப்படுகின்றது என்றும் அவர் அங்கு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய இடங்களில் மனித நேய அவசர நிலைகள் கையாளப்பட்ட முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கை விடயத்தில் நிறைய வித்தியாசங்கள், பாரபட்சம் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐநாவின் நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் நிலைமைகளை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களை ஒரு சமரசமான வகையில் கையாள வழிவகைகளை கண்டாக வேண்டும் என்றும் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கடுமையான யுக்திகளுக்கு பதிலாக தேசிய நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் ஐநா அமைப்புக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு வன்செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பாலஸ்தீனம் என்ற நாடு இஸ்ரேலுக்கு அருகருகாக அமைதியுடன் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்த நாட்டுக்கு ஐநாவின் முழு உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆப்பிரிக்காவில் பரவும் உயிர்கொல்லி நோய்களை ஒழிக்க ஐநா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கையும் உதவும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச பயங்கர்வாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய கருத்துக்களை இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் அமெரிக்காவின் சலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் இலங்கை குறித்த ஆய்வாளருமான கீதபொன்கலன்.
jeudi 25 septembre 2014
பின்லேடன் மருமகனுக்கு ஆயுள் தண்டனை அமெரிக்காவில்
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனில் மருமகனு்ககு அமெரிக்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா. இதன் தலைவராக இருந்தவர் ஒசாமா பின்லேடன். இந்த தீவிரவாத அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளை ஏற்படுத்த முயற்சிப்பதுடன், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் முக்கிய வர்த்தக மைய கட்டிடமான இரட்டை கோபுரங்களின் மீது விமானத்தை மோதி அல்கொய்தா தற்கொலை படையினர் தகர்த்தனர். இதையடுத்து, அல்கொய்தாவை வேரறுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியது.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் கண்டுபித்து கொன்றனர். இந்நிலையில், பின்லேடனின் 48 வயதுடைய மருமகன் கலைமான் அபு கெய்த் என்பவருக்கு அமெரிக்கா கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு சம்பவத்துக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கெய்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் விசாரித்தது. அமெரிக்கர்களை கொல்ல சதி திட்டம் திட்டியது, அதை செயல்படுத்து உதவியது போன்றவற்றில் கெய்த்துக்கு தொடர்பிருந்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மாவட்ட நீதிபதி லெவிஸ் கேப்லன் கெய்த்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
என் மீது கருணை காட்டும்படி இறைவனைத்தவிர வேறுயாரிடமும் கையேந்த மாட்டேன் என கெய்த் அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறை தண்டனையாம்! பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால்
பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொந்தரவு செய்பவர்களை சிறையில் அடையுங்கள்' என, போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பீகார் மாநிலத்தில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொல்லை தரும் போக்கு அதிகரித்துஉள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அம்மாநில உயர் போலீஸ் அதிகாரி அரவிந்த பாண்டே, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு, மொபைல்போன் மூலமாக தொல்லை கொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, பல சட்டவிரோத செயல்களுக்கு காரணமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்களை அடையாளம் கண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறைத் தண்டனை வாங்கித் தர வேண்டும். ஓரிரு முறை, 'மிஸ்டு கால்' கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது இல்லை. கவனக்குறைவு காரணமாக கூட, இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம்.இவ்வாறு, அவர், அதில் அறிவுறுத்தியுள்ளார்.
mercredi 24 septembre 2014
பெண்களை துஷ்பிரயோகம் செய்த பூசாரி ....
குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு தோஷம் கழித்து குழந்தை பெற்று கொடுப்பதாக கூறி, அவர்களை துஷ்பிர யோகம் செய்த பூசாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து திரும்பிய மாத்தறையை சேர்ந்த பூசாரியே (வயது 32) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிங்கிரிய அந்தபன்கொடையை சேர்ந்த திருமணம் முடித்த பெண்கள் இருவருக்கு குழந்தை பேறு தருவதாக கூறி, அவ்விருவரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பூசாரிக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைபாடு தொடர்பில் பொலிஸார் மேற் கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண தேர்தல் முடிவுகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவது இல்லை: பொன்சேகா
அரசினால் உச்ச கட்டமாக கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளின் மூலம் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவது இல்லை. ஊவா மக்கள் எமது கட்சிக்கு அளித்த வாக்குகள் அனைத்தும் அரச தரப்பினரின் சூழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைக்க உள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஜனநாயக கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
எமது கட்சிக்கு ஊவா மக்களினால் அளிக்கப்பட்ட 45000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் அரசின் சூழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எமது கட்சி வேட்டபாளர்கள் தேர்தலின் போது மக்களின் விருப்பத்தினால் பெற்ற வாக்குகளின் மூலம் பாரிய வெற்றிகளை பெற்றிருந்தனர். அவ்வாறே ஊவா மாகாண மக்களும் எமது கட்சியை ஆதரித்து எமது தேர்தல் பிரச்சாரங்களின் போது எமது கட்சிக்கு பாரிய ஆதரவை வழங்கி எமது கட்சியை வெற்றி பெற செய்வதாக உறுதியளித்தனர். அவ்வாறே மக்களும் எமக்கான வாக்குகளை அளித்தனர்.
எமது கட்சி கடந்த காலங்களில் மக்களின் பேராதரவை பெற்று எம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தனர். இதனை கண்டு அரசு பயந்ததன் காரணமாகவே எமது கட்சியை இல்லாமல் ஒழிக்க கடந்த காலங்களில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலேயே ஊவா தேர்தலில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை இந்த அரசாங்கம் சூறையாடியுள்ளது.
எமக்கு வாக்களித்த ஊவா மக்கள் இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டியது இல்லை. நாம் எப்பொழுதுமே உங்களுடன் இருப்போம் எமது கட்சியின் சார்பில் மக்களுக்கான சேவை எப்பொழுதுமே இடம்பெறும்.
மாவை பேச்சைக் கேட்டால் புத்தியுள்ள எவருக்கும் விசர்தான் பிடிக்கும்.- வடபுலத்தான்
மாவை தமிழ்ச்சமூகத்துக்குத் தேவையா?
இப்பிடியொரு கேள்வியை இண்டைக்குப் பலரும் கேட்கத் தொடங்கியிருக்கினம்.
ஏனெண்டால், அண்மைய நாட்களில் மாவை பேசிக்கொண்டு திரியிற பேச்சைக் கேட்டால் புத்தியுள்ள எவருக்கும் விசர்தான் பிடிக்கும்.
அந்த அளவுக்குக் கோமாளித்தனமாக பினாத்திக்கொண்டிருக்கிறார் மாவை.
'போர்த்துகிற பொன்னாடைகள் எல்லாம் போர் ஆடைகளே' எண்டும் 'இறுதி வெற்றி கிட்டும்வரையில் போராட்டம் ஓயாது' எண்டும் 'இலக்கை நோக்கி நகரும்வரை தூங்கக்கூடாது' எண்டும் பெரிய கதையெல்லாம் கதைக்கிறார்.
'போர்ப்பலத்தோட இருந்த பிரபாகரனே இப்பிடி ஒருக்காலும் பெரிய பிரகடனங்களைச் செய்ததில்லை. வெறுங்கையோட நிக்கிற மாவைக்கு ஏனிந்தப் பொல்லாப்பெல்லாம்' எண்டு மாவையை ஆதரிச்ச ஆட்களே கேட்கினம்.
வெறும்வாயைச் சப்பிறதுக்கும் ஒரு எல்லையிருக்கு.
நொந்து நூலாகிப்போயிருக்கிற சமூகத்துக்குத் தலைமை தாங்குகிற தலைவர்கள் எப்பிடியிருக்கோணும்.
போரால பாதிக்கப்பட்ட சனங்கள் இன்னும் அந்தப் பாதிப்பில இருந்து மீள முடியாமல் தவிச்சுக்கொண்டிருக்குதுகள்.
தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேணும். நாடு வேணும். உரிமை வேணும் எண்டு உண்மையாகவே போராடிய போராளிகள் எல்லாம் தெருவில் நிக்கிறார்கள்.
விடுதலைப்போராட்டத்தில உயிரைக் குடுத்த போராளிகளின்ரை குடும்பங்கள் எல்லாம் உரிய நிவாரணமும் இல்லாமல், பிள்ளைகளும் இல்லாமல், விடுதலையும் இல்லாமல் தத்தளிக்குதுகள்.
ஆனால், இந்தச் சனங்களின் வாக்குகளைக் கெஞ்சிக் கேட்டு வாங்கிய மாவை குறூப்போ 'கொமடி' பண்ணி விளையாடிக்கொண்டிருக்குது.
'இறுதி வெற்றி கிட்டும்வரை போராட்டம் ஓயாது' எண்டால்.....
அந்த இறுதி வெற்றி என்ன?
தனிநாடா? சமஸ்டியா? அதிகாரப்பரவலாக்கமா? அதிகாரப்பகிர்வா?
இதைப்பற்றி மாவையும் சொல்லப்போவதில்லை. சனங்களும் கேட்கப்போவதில்லை. மாவையின்ரை கையாட்களுக்கும் தெரியாது. ஆதரவாளர்களும் இதைப்பற்றி யோசிக்கப்போவதில்லை.
எல்லாரும் இந்தக் கொமடியை விளங்காமல கொஞ்ச நாட்களுக்குச் சொல்லிக்கொண்டு திரியப்போகினம். அவ்வளவுதான்.
மாவை சொல்லிற மாதிரியோ, எண்ணுகிற மாதிரியோ காரியங்கள் நடக்கப்போவதில்லை.
ஏனெண்டால்.... அகிம்சைப் போராட்;டம் எண்ட பேரில நடத்தின சத்தியாக்கிரங்களே செல்லாக் காசாகிப் போனது வரலாறு.
பிறகு நடத்தின ஆயுதப்போராட்டமும் தோல்வியில் முடிச்சது முழு உண்மை.
இப்ப நடக்கிற சர்வதேசத்தின்ரை தலையீடு, சர்வதேச ஆதரவு எண்ட பம்மாத்துகளும் ஒண்டுக்கும் உதவாதவை.
இந்தியாவின்ரை செல்வாக்கால தீ;வு கிடைக்கும் எண்டது பகல் கனவு.
இதையெல்லாம் அனுபவமாகவே அறிஞ்சாப்பிறகும் மாவை இப்பிடி மொக்குத்தனமாகவே கதைச்சிருக்கிறாரெண்டால்......
இதை என்னெண்டு சொல்லிறது....?
மாவையின்ரை கதையை நம்பி எடுபடுகிற ஆட்களை எப்பிடிச் சொல்லிறது....?
இறுதி இலக்குவரை போராட்டம் ஓயாது எண்டால், அந்தப் போராட்டத்தை எப்பிடி நடத்திறது? ஆர் நடத்திறது? அதால வாற லாப நட்டங்களுக்கு ஆரெல்லாம் முகம் குடுக்கிறது?
இதாலதான் மாவையின்ரை இந்தப் பேக்கதையைக் கேட்ட ஆட்கள் 'மாவை தமிழர்களுக்குத் தேவையா?' எண்டு கேட்க வெளிக்கிட்டிருக்கினம்.
மாவையோ நடைமுறை யதார்த்தத்தைப்பற்றியே சிந்திக்காத ஒரு பாரம்பரியத்தில இருந்து வந்த ஆள்.
அவர் அப்பிடித்தான் கதைப்பார்.
அப்பிடிக் கதைச்சுத்தான் அவர் கட்சியின்ரை தலைமைப்பதவிக்கு வந்தவர். அப்பிடிக் கதைச்சுத்தான் அவர் அரசியல்ல ஐம்பது வருசமாகக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருக்கிறார். மன்னிக்கோணும். ஐம்பது வருசமாக புரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
மாவை எங்களுக்குத் தேவையா எண்டெல்லவா சனங்கள் கேட்குதுகள்....

ஓர் ஆண்டு பயணத்திற்கு பின்னர் விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந்தது
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய மேவன் விண்கலம் சுமார் ஓர் ஆண்டு பயணத்திற்கு பின்னர் செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நுழைந்துள்ளது.
ஆய்வு இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வேகத்தை அதிகரித்து செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததாக நாஸா அறிவித்துள்ளது. விண்கலத்தின் கட்டுப்பாட்டு அறை அடுத்த ஆறு வாரங்களில் மேர்வன் சுற்றுவட்டப்பாதையின் உயரம் மற்றும் அதனது விஞ்ஞான உபகரணங்களை சரிபார்க்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேவன் விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். இதன்போது பு+மியின் அயல் கிரகமான செவ்வாய் பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஈரலிப்பு மற்றும் வெப்பமான நிலையில் இருந்து தற்போது குளிர் மற்றும் உலர் நிலைக்கு மாறியது குறித்து நாஸா விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தவுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.
அமெரிக்காவின் கெனவெரல் ஏவுதளத்தில் இருநது கடந்த நவம்பரில் இந்த விண்கலம் ஏவப்பட்டது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைய இந்த விண்கலம் தனது வேகத்தை மணிக்கு 10,000 மைல்களுக்கு மேல் அதிகரித்தது. சுமார் அரை மணிநேரம் கொண்ட இந்த செயல்முறையின் முடிவு 12 நிமிடங்கள் கழித்தே உலகுக்கு கிடைத்தது. இரு கிரகங்களுக்கும் இடையில் 138 மில்லியன் மைல்கள் தூரம் இருப்பதால் விண்லத்தில் இருந்து அனுப்பப்படும் செய்தி உலகுக்கு கிடைக்க தாமதம் ஏற்படுகிறது.
இது செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்கா அனுப்பும் 10ஆவது ஆய்வு இயந்திரமாகும். இதில் மூன்று முயற்சிகள் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்காவின் இரு விண்கலங்களும் ஐரோப்பாவின் ஒரு விண்கலமும் செவ்வாய்க் கிரகத்தை வலம்வருகின்றன. அதேபோன்று இந்தியா அனுப்பி யிருக்கும் மாங்கல்யான் விண்கலம் நாளை புதன்கிழமை செவ்வாய்க் கிரக சுற்றுவட்டப்பாதையை எட்டவுள்ளது.
செவ்வாயில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகளைக் கொண்டு அந்த கிரகத்திற்;கு 2030களில் மனிதனை அனுப்ப நாஸா எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
lundi 22 septembre 2014
ஸ்ரீநிவாசு மாண்டலின் என்ற வாத்திய பிறவிக்கலைஞனுக்கு அஞ்சலி
தமிழ்த் திரையிசையில் மாண்டலின் என்ற வாத்தியம் பெரிதாகக்
கோலோச்சாததாலோ என்னமோ அந்த வாத்தியத்தை தமிழ்த் திரியிசையில், கேட்டு
ரசித்த அனுபவ பெரிதளவில் எனக்கில்லை. ஆனால் மாண்டலினைப்பற்றிய செய்திகள்
ஏதாவதை எப்போதாவது பார்க்கும் போதெல்லாம் அங்கே ஸ்ரீநிவாசின் பெயரும்
இடம்பெற்றிருக்கும். அதனால் மாண்டலினென்றால் ஸ்ரீநிவாசும் அவரின் முகமும்
சேர்ந்தே என் நினைவில் வருவதுண்டு. . ஒருமுறை அவரின் ஆல்பம் ஒன்றை சிடிக்
கடையொன்றில் கண்டு வாங்கியிருந்தேன் ஆனால் அது கர்னாடக இசை ஆல்பமாக இருந்ததால் பெரிதாக அதைக் கேட்டு ரசிக்க முடியவில்லை.
தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் இடம்பெற்ற புதிய பூவிது பூத்தது என்ற
பாடலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தப்பாடலின் ஒலிப்பதிவன்று வயிலின்
கலைஞர்களால் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம்.
ஆனால் அந்தப்பாடலைப் படம்பிடிப்பதற்காக வெளியூர் சென்றுவிட்ட இயக்குனர்
ஸ்ரீதருக்கு பாடலை அனுப்பியே தீரவேண்டிய கட்டாயாம் மேஸ்ட்ரோவுக்கு.
அதனால் அந்தப்பாடலில் வயிலின்களைப் பாவிப்பதற்குப் பதிலாக ராஜா
மாண்டலின்களைப் பாவித்திருப்பாராம். அந்தப்பாடலின் பின்னணியிசையை உற்றுக்
கேட்டால் அந்தச் சூட்சுமம் புரியும்.
அந்தப்பாடலுக்குப் பின்புதான் மாண்டலினைப்பற்றிய விளக்கமான அனுபவம் எனக்குக் கிடைத்ததென்றால் அது மிகையல்ல.
அதன்பின் எனக்குள் ஒரு வினாவும் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. மேஸ்ட்ரோ ஏன் மாண்டலின் ஸ்ரீநிவாசை தனது பாடல்களில் ஒருமுறையேனும் பாவிக்கவில்லையென்ன்பதும் ஒருமுறையாவது பாவிக்க வேண்டுமென்பதே அது. ஸ்ரீநிவாஸ் மட்டும் மேஸ்ட்ரோவின் இசையில் ஒரு பாட்டுக்காவது மாண்டலின் வாசித்திருந்தால் கடைக்கோடி தமிழ் ரசிகனுக்கும் மாண்டலின் என்ற வாத்தியமும் அதன் இசையும் இன்னும் அருகில் சென்றிருக்கும். ஆனால் அதுதான் இறுதிவ்வரை நடக்காமல் போய்விட்டதே..
இப்போ மாண்டலின் என்ற வாத்தியம் ஒரு சாதாரண தமிழ் ரசிகனுக்கு இன்னும் அன்னியமாக... தொலைதூரம் போய்விட்டது.
மறைந்துவிட்ட அந்தப் பிறவிக்கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் இவ்வேளையில் மனதில் ஒரு எண்ணம் பளிச்சிடுகின்றது ..
உலகத் தரம் வாய்ந்த கர்னாடக சங்கீதக் கலைஞர்கள் தமிழ்த் திரையிசையில் பயன்படுத்தப்பட வேண்டும். அது திரையிசையில் இன்னும் பல புதிய பரிமாணங்களின் அறிஉகத்துக்கு வழியமைக்கும். அது
இசையமைப்ப்பாளர்களுக்கும்..
கலைஞர்களுக்கும்..
கடைக்கோடி ரசிகனுக்கும்,,
தமிழ்த் திரையிசைக்கும் மிக நல்லது !! Kalaichelvan Rexy Amirthan

dimanche 21 septembre 2014
யாழை நோக்கிய யாழ் தேவியின் பயணமானது இலங்கையின் வரலாற்றின் பக்கங்களில் மீண்டும் எழுதப்படுகின்றது
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓமந்தை, பளை, கிளிநொச்சி வரை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் வரை சேவை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை விஸ்தரிக்கும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு, இன்று (21) பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு பளையிலிருந்து ஆரம்பமாகும் பரீட்சார்த்த புகையிரதம், 10.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும் என புகையிரத திணைக்களம் தெரிவித்தது.
தொடர்ந்து ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்தது.

தமிழ் பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது
யாழ். காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையுடன் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி என்பவற்றில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படைத்தலைமையகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரொ ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவப் படையணியின் நாய்களின் சாகச நிகழ்ச்சி, இராணுவ பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி, பொறியில் பிரிவினரின் செயல்திறன் செயல்பாடுகள், பெண்கள் படையணியினரின் கராத்தே கண்காட்சி மற்றும் இராணுவ பாண்ட் அணியினரின் பாண்ட் இசை அணிவகுப்பு நிகழ்ச்சி என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மத குருமார்கள், யாழ். மாவட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கிராம அலுவலர்கள், பல ஆயிரக்கணகான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குடு லாலிதவின் சொத்துக்கள் அரசுடமை!
அத்துருகிரிய, ஒருவல பகுதியில் வைத்து கடந்த 5ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 'குடு லாலித' என்றழைக்கப்படும் விதான முதியன்சலாகே லாலித்ய கௌசல்யவின் 685 இலட்சம் ரூபாய் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
போமிரிய, கொரதொட்ட மற்றும் தலங்கம பிரதேசங்களிலுள்ள அதி சொகுசுவாய்ந்த வீடுகள், ரணாலையில் உள்ள காணி, 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார், 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு வாகனங்கள் என்பன இந்த சொத்துக்களில் அடங்குகின்றன.

ஊவா மாகாணசபை தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது
பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் பிரகாரம்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 349,906 வாக்குகள் 51.25 சதவீதம் (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 19 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 274,773 வாக்குகள் 40.24 சதவீதம் ( 13 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி 36,580 வாக்குகள 5.36 சதவீதம் ( 2ஆசனங்கள்)
2009 ஆம் ஆண்டு இறுதி முடிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 418,906 72.39 (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 25 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 129,144 வாக்குகள் சதவீதம் 22.32 சதவீதம் ( 7 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகள 2.53 சதவீதம் ( 1ஆசனம்)
மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகள 1.59 சதவீதம் ( 1ஆசனம்)

தீவிரவாதிகள் சுட்டதில் 23 பேர் சாவு நைஜீரியாவில் மார்க்கெட்டில்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவிக்கின்றனர். வட கிழக்கு நைஜீரியாவில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள மைனோக் என்ற நகருக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மார்க் கெட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
உடனே மக்கள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களும் பதிலுக்கு சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. எனவே, அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பொதுமக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகினர். அவர்களில் 23 பேர் பொது மக்கள்.
மீதமுள்ள 13 பேர் தீவிரவாதிகள் ஆவர். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு பகுதியில் உள்ள போர்னோ, யோப், அதமாவா ஆகிய மாகாணங்களில் கடந்த ஆண்டு முதல் அதிபர் குட்லக் ஜோனாதன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
கள்ள ஒட்டு மோசடி! பிரிட்டனின் பித்தலாட்டம் ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில்!!
இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள
ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக"
மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது. ஸ்காட்லாந்து பொது
வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக,
கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு
எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்!
ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், "இல்லை" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.
ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, "இல்லை" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல "ஆம்" ஓட்டுகள், "இல்லை" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு
மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில்,
நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து
கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில்
வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால்,
முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி
சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும்
போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு
வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க
ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான்
உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.
உலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை
உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம்
மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து
சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத்
தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "ஆம்"
என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில்
பெரும்பான்மையினர் "இல்லை" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை
உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில்,
கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.
மேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன்
முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள
முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம்.
அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை
கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.
இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான
சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில்
அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. "இல்லை" என்று வாக்களித்தால், மாநில
சுயாட்சியும், அதிகாரப் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய
உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான
இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான
அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள
எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.
சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம்
இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற
அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். "தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக்
காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை
உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன்
மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்." புலிகள் அமைப்பின் அரசியல்
பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி
யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப்
பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக்
கொண்டிருந்தார். ..... கலையகம்
Inscription à :
Articles (Atom)