அரசினால் உச்ச கட்டமாக கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளின் மூலம் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவது இல்லை. ஊவா மக்கள் எமது கட்சிக்கு அளித்த வாக்குகள் அனைத்தும் அரச தரப்பினரின் சூழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைக்க உள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஜனநாயக கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
எமது கட்சிக்கு ஊவா மக்களினால் அளிக்கப்பட்ட 45000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் அரசின் சூழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எமது கட்சி வேட்டபாளர்கள் தேர்தலின் போது மக்களின் விருப்பத்தினால் பெற்ற வாக்குகளின் மூலம் பாரிய வெற்றிகளை பெற்றிருந்தனர். அவ்வாறே ஊவா மாகாண மக்களும் எமது கட்சியை ஆதரித்து எமது தேர்தல் பிரச்சாரங்களின் போது எமது கட்சிக்கு பாரிய ஆதரவை வழங்கி எமது கட்சியை வெற்றி பெற செய்வதாக உறுதியளித்தனர். அவ்வாறே மக்களும் எமக்கான வாக்குகளை அளித்தனர்.
எமது கட்சி கடந்த காலங்களில் மக்களின் பேராதரவை பெற்று எம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தனர். இதனை கண்டு அரசு பயந்ததன் காரணமாகவே எமது கட்சியை இல்லாமல் ஒழிக்க கடந்த காலங்களில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலேயே ஊவா தேர்தலில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை இந்த அரசாங்கம் சூறையாடியுள்ளது.
எமக்கு வாக்களித்த ஊவா மக்கள் இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டியது இல்லை. நாம் எப்பொழுதுமே உங்களுடன் இருப்போம் எமது கட்சியின் சார்பில் மக்களுக்கான சேவை எப்பொழுதுமே இடம்பெறும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire