கலந்துரையாடல் ஒன்றின் போது சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், பொது வேட்பாளர்கள் எமக்கு தேவையில்லை. எமது தலைவரை நாங்கள் வேட்பாளராக நிறுத்த போகிறோம். எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட எவரும் எம்முடன் இணைய முடியும். ஆனால் நிபந்தனைகளை விதிக்க முடியாது. தேவையற்ற பொது சின்னங்கள் தேவையில்லை.கட்சியின் தலைவர் யானைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும். அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்தவர்களை இணைத்து கொண்டு முன்னணியை ஏற்படுத்த தேவையில்லை.
சிங்கள பௌத்த வாக்குகளின் ஒரு பகுதியை பிரித்தெடுத்தால் போதுமானது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும்.
அப்படியிருக்கும் போது முன்னணிகள் எதற்கு?. அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை கட்சியில் இருந்து துரத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire