அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய மேவன் விண்கலம் சுமார் ஓர் ஆண்டு பயணத்திற்கு பின்னர் செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நுழைந்துள்ளது.
ஆய்வு இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வேகத்தை அதிகரித்து செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததாக நாஸா அறிவித்துள்ளது. விண்கலத்தின் கட்டுப்பாட்டு அறை அடுத்த ஆறு வாரங்களில் மேர்வன் சுற்றுவட்டப்பாதையின் உயரம் மற்றும் அதனது விஞ்ஞான உபகரணங்களை சரிபார்க்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேவன் விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். இதன்போது பு+மியின் அயல் கிரகமான செவ்வாய் பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஈரலிப்பு மற்றும் வெப்பமான நிலையில் இருந்து தற்போது குளிர் மற்றும் உலர் நிலைக்கு மாறியது குறித்து நாஸா விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தவுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.
அமெரிக்காவின் கெனவெரல் ஏவுதளத்தில் இருநது கடந்த நவம்பரில் இந்த விண்கலம் ஏவப்பட்டது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைய இந்த விண்கலம் தனது வேகத்தை மணிக்கு 10,000 மைல்களுக்கு மேல் அதிகரித்தது. சுமார் அரை மணிநேரம் கொண்ட இந்த செயல்முறையின் முடிவு 12 நிமிடங்கள் கழித்தே உலகுக்கு கிடைத்தது. இரு கிரகங்களுக்கும் இடையில் 138 மில்லியன் மைல்கள் தூரம் இருப்பதால் விண்லத்தில் இருந்து அனுப்பப்படும் செய்தி உலகுக்கு கிடைக்க தாமதம் ஏற்படுகிறது.
இது செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்கா அனுப்பும் 10ஆவது ஆய்வு இயந்திரமாகும். இதில் மூன்று முயற்சிகள் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்காவின் இரு விண்கலங்களும் ஐரோப்பாவின் ஒரு விண்கலமும் செவ்வாய்க் கிரகத்தை வலம்வருகின்றன. அதேபோன்று இந்தியா அனுப்பி யிருக்கும் மாங்கல்யான் விண்கலம் நாளை புதன்கிழமை செவ்வாய்க் கிரக சுற்றுவட்டப்பாதையை எட்டவுள்ளது.
செவ்வாயில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகளைக் கொண்டு அந்த கிரகத்திற்;கு 2030களில் மனிதனை அனுப்ப நாஸா எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire