மிகக் குறைந்த செலவில் செவ்வாய் சுற்று வட்டப் பாதையில் இணைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து புதியதொரு படத்தை அனுப்பி உள்ளது. அப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் புழுதிப் புயல் வீசும் காட்சி தென்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 74,500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, மங்கள்யான் இப்படத்தை எடுத்துள்ளது.
மங்கள்யான் விண்கலத்தில் சக்தி வாய்ந்த கேமரா, மீத்தேன் வாயுவைக் கண்டறிவதற்கான கருவி உள்பட 5 முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் மங்கள்யானின் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire