சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ இழுத்தடித்த ஜெயலலிதா, தம் மீதான தீர்ப்பு மிகக் கடுமை காட்டக் கூடிய ஒரு நீதிபதியிடம் சிக்கும் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டு 18 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த வழக்கை இழுத்தடித்தது ஜெயலலிதா தரப்பு.
ஒவ்வொருமுறையும் சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாற்றி மாற்றி வழக்குப் போட்டு இழுத்தடித்துப் பார்த்தார். அட தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட எத்தனையோ மனுக்களைத் தாக்கல் செய்துப் போட்டுவிட்டார். உச்சநீதிமன்றத்தில் நேற்றும் கூட ஒரு வழக்கைப் போட்டு தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பார்த்தது ஜெயலலிதா தரப்பு.
ஆனால் எதுவும் நடைபெறவில்லை. இத்தனை போராட்டத்துக்கும் இழுத்தடிப்புக்கும் பயனில்லாமல் ஊழல் வழக்குகளில் மிகக் கடுமையான தீர்ப்பளிக்கக் கூடிய நீதிபதியிடம் போய் தானே சிக்கி, தற்போது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.........சொதத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகத் தீர்ப்பு வெளியானதும், விஜய்யின் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகிவிட்டார்கள். இந்தத் தீர்ப்பை அவர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள்.இந்த சூழலில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் கத்தி படத்தை வெளியிடும் சூழலை ஜெயலலிதா அரசு உருவாக்கித் தருமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து, அவர் சிறைக்கும் போகிறார். இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலையைக் கொடுத்திருக்கிறது. பலரும் தங்கள் மேலிடத்துக்கு போன் போட்டு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்களாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire