கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் மாங்கல்ய மந்திரங்கள் எதுவும் ஓதாமல், திருக்குறள் சொல்லி நடத்தப்பட்ட திருமண வைபவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் ஐயர் இல்லை. சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் எதுவும் ஓதப்படவில்லை.
ஆனால், திருக்குறள்கள் சொல்லப்பட்டு, சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது.
திருமணத்தை கிளிநொச்சி தமிழ் சங்க தலைவரும் மணமகளின் தந்தையுமான வே.இறைபிள்ளை தலைமையேற்று நடத்தியதுடன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆசியுரையினையும் வழங்கினார்.
இந்த திருமண நிகழ்வில், திருவள்ளுவருடைய திருவுருவப் படம் வைக்கப்பட்டு திருக்குறள் ஓதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire