இந்தியாவில் வடக்கு நகரான விரிந்தாவனிலிருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சொந்த நகரான கொல்கத்தாவுக்கு வந்துசேர்ந்துள்ள விதவைப் பெண்கள் தங்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கணவன்மார் உயிரிழந்த பின்னர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களே இந்தப் பெண்கள்.
ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் தங்களின் குடும்பத்தவர்களுக்கு சுமையாக இருப்பதாகவும் துரதிஷ்டத்தைக் கொண்டுவருவதாகவும் கூறி கைவிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வடக்கு நகரான விரிந்தாவனில் வசிக்கும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் விதவைப் பெண்கள் பிச்சை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா திரும்பியுள்ள விதவையர்கள் மேற்குவங்க ஆளுநரிடம் உதவி கோரவுள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire