முதலமைச்சர் 'எங்கள் தங்கம் சிவசிவா' விக்கினேஸ்வரன் சொல்லியிருக்கிறார்.
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வந்திறங்குகிறவை தங்கட சுய லாபத்துக்காகவும், சுய தம்பட்டத்துக்காகவும் செய்யிற அரசியல் கூத்துகள் தமிழ் மக்களுக்கு பயன்படாது எண்டும் விக்கியர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
இப்பிடி விக்கியர் சொன்னது போனகிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பஷில் ராஷபக்ஷவை மனசில வைச்சுத்தான்.
பஷில் வந்தபோது, வரவேற்று சேர்ந்து நிண்டு, நாடா வெட்டி, படம் எடுத்து, ஒண்டாக தேத்தண்ணீ குடிச்சு, சாப்பிட்டு, சிரிச்சுப்பறைஞ்சு செய்யிறதெல்லாம் செய்து, கேட்கவேண்டியதல்லாம் கேட்டுப்போட்டு இப்ப திடீர் எண்டு அண்ண ஒரு குத்துக்கரணம் அடிச்சிருக்கிறார்.
போனகிழமை பேப்பர்களை பாத்தவைக்குத் தெரியும் பஷிலும், விக்கியரும் என்ன மாதிரி நெருக்கமாக, கலகலப்பாக ஒண்டா நிண்டவை எண்டு.
அப்பிடி ஒண்டாக நிக்கும்போது வடக்கு மாகாண அபிவிருத்தியைப் பற்றியும், மாகாண சபைக்கு அரசாங்கம் போடுகிற முட்டுக்கட்டையைப் பற்றியும் கொஞ்சம் கதைச்சிருக்கலாமல்லோ.
ஆனால், அப்ப வாயை மூடிக்கொண்டு இருந்திட்டு இப்ப அண்ண முழங்கித்தள்ளுகிறார்.
இப்பிடித்தான் இவயின்ர வாடிக்கை.
ஜனாதிபதியையோ, பஷிலையோ அல்லது வேற அமைச்சர் மாரையோ கண்டால் குழைஞ்சு குழைஞ்சு கதைப்பினம்.
மெல்லமாக காதுக்குள்ள தங்கட தனிப்பட்ட தேவைகளைப் பற்றி குசுகுசுத்து காரியங்களையும் வலு கெட்டித்தனமாக பாத்துக்கொள்ளுவினம்.
ஆனால், சனங்களோட சம்பந்தப்பட்ட அபிவிருத்தி அல்லது அரசியல் பிரச்சினைகள் எண்டால் அதைப் பற்றி வாயே திறக்க மாட்டினம்.
நல்லாயிருக்கடா ராமா! இந்த ட்றாமா.
இப்பிடியே, தமிழ்ச் சனங்களை ஏமாத்தி ஏமாத்தி, அதுகளுக்கு பொய்யைச் சொல்லிச் சொல்லி முட்டாள் சமூகமாக தமிழர்களை மாத்தி வைச்சிருக்கினம்.
இவை மற்ற தமிழ் அரசியல்வாதிகளைப் போல இப்ப விக்கி அண்ணையும் செய்யிறதுதான் கவலையான விசயம்.
நெத்தியில திருநீறு, குங்குமப்பொட்டு. பாதிச்சாமியார் கோலம். பட்டு வேட்டி சால்வை. காலையிலும், மாலையிலும் பயனை.
இப்பிடி ஒரு அலங்காரத்தை செய்துகொண்டு நீதியரசராகவும், பெரிய மனிசனாகவும் இருக்கிற விக்கியர் சின்னத்தனமாக நடக்கக்கூடாது. பொய்புரட்டு பேசக்கூடாது.
விக்கியர் இப்ப சாதாரண ஆளில்ல.
தமிழ் மக்களின்ர சார்பான ஒரு முதலமைச்சர்.
இவரே இப்பிடி தில்லுமுள்ளுகளும், குத்துக்கரணங்களும் அடிச்சால் அது எல்லாருக்கும்தான் மானக்கேடு.
நாக்குக் கூசாமல் பொய்யை சொல்லுவதற்கு எப்படி ஒரு துணிச்சல் வேணும்?
என்ன பொய்யைச் சொன்னாலும் தமிழ்ச் சனங்களை அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள் எண்ட துணிச்சல்தான் இதுக்கெல்லாம் காரணம்.
தமிழ் அரசியல் எண்டால் இப்பிடித்தான். சுத்துமாத்தும், ஏமாத்தும், புலுடாவும், பொறுப்பின்மையும் ஒண்டுமே செய்யாமல் வாயடிப்பதும் எண்ட பண்பாட்டில் விக்கியரும் சேர்ந்துவிட்டார்.
வாழ்க விக்கியர். வளர்க உம் தமிழ்த் தேசியத் தொண்டு. ஓங்குக உங்கள் பொய்யும் புரட்டும். உயர்க உம் சொந்த நலன்.
தமிழர்கள் நம்பிக்கொண்டேயிருக்கட்டும், எங்கட தலைவர்கள் தங்கத் தாம்பாளத்தில தமிழீழத்தை வைச்சு வெல்லக்கட்டியோட தரப்போகினம் எண்டு. - ....... வடபுலத்தான்

Aucun commentaire:
Enregistrer un commentaire