இந்த நிலையில் அங்குள்ள மைனோக் என்ற நகருக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மார்க் கெட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
உடனே மக்கள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களும் பதிலுக்கு சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. எனவே, அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பொதுமக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகினர். அவர்களில் 23 பேர் பொது மக்கள்.
மீதமுள்ள 13 பேர் தீவிரவாதிகள் ஆவர். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு பகுதியில் உள்ள போர்னோ, யோப், அதமாவா ஆகிய மாகாணங்களில் கடந்த ஆண்டு முதல் அதிபர் குட்லக் ஜோனாதன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire