dimanche 28 septembre 2014

இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் போதே ஊழல் தடுப்புச் சட்டத்தில்: கைதாகிய முதல் 'முதல்'வர் ஜெயலலிதா

2ஆம் இணைப்பு - முதல்வர் ஜெயலலிதா கைதி 7402 ஆனார் - இரவு உணவு சிறையில் - கண்ணீருடன் ADMK:- காலையில் முதல்வராக பிரதமருக்கு உரிய பாதுகாப்புடன் தனி விமானத்தில் பயனித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மாலையில் கர்நாடகாவின் அக்ரஹாரா சிறைக்கு சிறை வாகனத்தில் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா ஜெயராமிற்கு கைதி எண் 7402 வழங்கப்பட்டு இரவு உணவும் சிறைச்சாலையில் வழங்கப்பட்டது. சிறையின் வெளியே அதிமுக உறுப்பினர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.
சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 கைது எண்கள் வழங்கப்பட்டன.
ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்- உடனடி பிணை  சாத்த்தியம் இல்லை:-
12:24
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர். இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து செல்லவில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறும் வரை இந்த சிறையிலேயு ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒக்டோபர் 5 வரை உயர் நீதிமன்றம்  விடுமுறை! உடனடியாக பிணையில் வெளிவர சாத்த்தியம் இல்லை-

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக பிணை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சிறைக்கு செல்லும் ஜெயலலிதா தரப்பினர் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பிணை கேட்டு மேல்முறையீடு செய்யமுடியும். ஒக்டோபர் 5வரை தசரா விடுமுறை என்பதால் அதன்பின்னரே பிணைமனு மீதான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது. அவரால் உடனடியாக பிணை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பிணை மனு மேன்முறையீடு செய்யமுடியும். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரும் 29ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 5ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒக்டோபர் 5ஆம் திதிக்கு பின்னரே பிணைமனு மீதான விசாரணை நடைபெறும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலும் அவசர வழக்குகளை விசாரிக்கும் வசதியில்லை என்பதால் ஜெயலலிதாவின் பிணை மனுவை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பிணை கிடைக்கும் வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் பதியில் இருக்கும் போதே ஊழல் தடுப்புச் சட்டத்தில்: கைதாகிய முதல் 'முதல்'வர் ஜெயலலிதா:-


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து ஜெயலலிதா சிறப்பு கவனம் பெற்றுள்ளார் .

இதே சட்டத்தின் விளைவாக, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாத்வ் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் தீர்ப்பு வழங்கப்பட்டபோது முதல்வர் பதவியில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.


இந்த அதிரடி தீர்ப்பு அதிமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் மற்றும் விசுவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் தீர்ப்பு வெளியானவுடன் அதிமுகவினர் கதறி அழுதனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire