மாவை தமிழ்ச்சமூகத்துக்குத் தேவையா?
இப்பிடியொரு கேள்வியை இண்டைக்குப் பலரும் கேட்கத் தொடங்கியிருக்கினம்.
ஏனெண்டால், அண்மைய நாட்களில் மாவை பேசிக்கொண்டு திரியிற பேச்சைக் கேட்டால் புத்தியுள்ள எவருக்கும் விசர்தான் பிடிக்கும்.
அந்த அளவுக்குக் கோமாளித்தனமாக பினாத்திக்கொண்டிருக்கிறார் மாவை.
'போர்த்துகிற பொன்னாடைகள் எல்லாம் போர் ஆடைகளே' எண்டும் 'இறுதி வெற்றி கிட்டும்வரையில் போராட்டம் ஓயாது' எண்டும் 'இலக்கை நோக்கி நகரும்வரை தூங்கக்கூடாது' எண்டும் பெரிய கதையெல்லாம் கதைக்கிறார்.
'போர்ப்பலத்தோட இருந்த பிரபாகரனே இப்பிடி ஒருக்காலும் பெரிய பிரகடனங்களைச் செய்ததில்லை. வெறுங்கையோட நிக்கிற மாவைக்கு ஏனிந்தப் பொல்லாப்பெல்லாம்' எண்டு மாவையை ஆதரிச்ச ஆட்களே கேட்கினம்.
வெறும்வாயைச் சப்பிறதுக்கும் ஒரு எல்லையிருக்கு.
நொந்து நூலாகிப்போயிருக்கிற சமூகத்துக்குத் தலைமை தாங்குகிற தலைவர்கள் எப்பிடியிருக்கோணும்.
போரால பாதிக்கப்பட்ட சனங்கள் இன்னும் அந்தப் பாதிப்பில இருந்து மீள முடியாமல் தவிச்சுக்கொண்டிருக்குதுகள்.
தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேணும். நாடு வேணும். உரிமை வேணும் எண்டு உண்மையாகவே போராடிய போராளிகள் எல்லாம் தெருவில் நிக்கிறார்கள்.
விடுதலைப்போராட்டத்தில உயிரைக் குடுத்த போராளிகளின்ரை குடும்பங்கள் எல்லாம் உரிய நிவாரணமும் இல்லாமல், பிள்ளைகளும் இல்லாமல், விடுதலையும் இல்லாமல் தத்தளிக்குதுகள்.
ஆனால், இந்தச் சனங்களின் வாக்குகளைக் கெஞ்சிக் கேட்டு வாங்கிய மாவை குறூப்போ 'கொமடி' பண்ணி விளையாடிக்கொண்டிருக்குது.
'இறுதி வெற்றி கிட்டும்வரை போராட்டம் ஓயாது' எண்டால்.....
அந்த இறுதி வெற்றி என்ன?
தனிநாடா? சமஸ்டியா? அதிகாரப்பரவலாக்கமா? அதிகாரப்பகிர்வா?
இதைப்பற்றி மாவையும் சொல்லப்போவதில்லை. சனங்களும் கேட்கப்போவதில்லை. மாவையின்ரை கையாட்களுக்கும் தெரியாது. ஆதரவாளர்களும் இதைப்பற்றி யோசிக்கப்போவதில்லை.
எல்லாரும் இந்தக் கொமடியை விளங்காமல கொஞ்ச நாட்களுக்குச் சொல்லிக்கொண்டு திரியப்போகினம். அவ்வளவுதான்.
மாவை சொல்லிற மாதிரியோ, எண்ணுகிற மாதிரியோ காரியங்கள் நடக்கப்போவதில்லை.
ஏனெண்டால்.... அகிம்சைப் போராட்;டம் எண்ட பேரில நடத்தின சத்தியாக்கிரங்களே செல்லாக் காசாகிப் போனது வரலாறு.
பிறகு நடத்தின ஆயுதப்போராட்டமும் தோல்வியில் முடிச்சது முழு உண்மை.
இப்ப நடக்கிற சர்வதேசத்தின்ரை தலையீடு, சர்வதேச ஆதரவு எண்ட பம்மாத்துகளும் ஒண்டுக்கும் உதவாதவை.
இந்தியாவின்ரை செல்வாக்கால தீ;வு கிடைக்கும் எண்டது பகல் கனவு.
இதையெல்லாம் அனுபவமாகவே அறிஞ்சாப்பிறகும் மாவை இப்பிடி மொக்குத்தனமாகவே கதைச்சிருக்கிறாரெண்டால்......
இதை என்னெண்டு சொல்லிறது....?
மாவையின்ரை கதையை நம்பி எடுபடுகிற ஆட்களை எப்பிடிச் சொல்லிறது....?
இறுதி இலக்குவரை போராட்டம் ஓயாது எண்டால், அந்தப் போராட்டத்தை எப்பிடி நடத்திறது? ஆர் நடத்திறது? அதால வாற லாப நட்டங்களுக்கு ஆரெல்லாம் முகம் குடுக்கிறது?
இதாலதான் மாவையின்ரை இந்தப் பேக்கதையைக் கேட்ட ஆட்கள் 'மாவை தமிழர்களுக்குத் தேவையா?' எண்டு கேட்க வெளிக்கிட்டிருக்கினம்.
மாவையோ நடைமுறை யதார்த்தத்தைப்பற்றியே சிந்திக்காத ஒரு பாரம்பரியத்தில இருந்து வந்த ஆள்.
அவர் அப்பிடித்தான் கதைப்பார்.
அப்பிடிக் கதைச்சுத்தான் அவர் கட்சியின்ரை தலைமைப்பதவிக்கு வந்தவர். அப்பிடிக் கதைச்சுத்தான் அவர் அரசியல்ல ஐம்பது வருசமாகக் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருக்கிறார். மன்னிக்கோணும். ஐம்பது வருசமாக புரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
மாவை எங்களுக்குத் தேவையா எண்டெல்லவா சனங்கள் கேட்குதுகள்....

Aucun commentaire:
Enregistrer un commentaire