நாட்டு மக்களின் செல்லங்களான மக்கள் பிரதிநிதிகளுக்கு விமான நிலையங்களில் வழங்கப்பட்ட வி.வி.ஐ.பி சலுகையை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வி.வி.ஐ.பி.க்களுக்கு வரவேற்பு கொடுக்கிறேன் என்ற போர்வையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள அரசு, இனி மக்கள் பிரதிநிதிகளையும் சாதாரண பிரஜை போல் நடத்தவேண்டும் என்று கூறியுள்ளது. தனது உத்தரவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரியான அசோக் கஜபதி ராஜுவே அதற்கு முன் மாதிரியாக விளங்குகிறார்.
தான் எந்த ஒரு விமான நிலையத்திற்கு வந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள் மட்டும் தன்னை வரவேற்றால் போதும் என்று ராஜு உத்தரவிட்டுள்ளார். எனினும் இயல்பான பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயம் என்பதால் அவற்றை பின்பற்றவும் அவர் அனுமதி அளித்துள்ளார். எந்த காரணத்திற்காகவும் பொது மக்களுக்கு இடையூறோ, அசௌகரியமோ ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு ராஜு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire