குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு தோஷம் கழித்து குழந்தை பெற்று கொடுப்பதாக கூறி, அவர்களை துஷ்பிர யோகம் செய்த பூசாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து திரும்பிய மாத்தறையை சேர்ந்த பூசாரியே (வயது 32) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிங்கிரிய அந்தபன்கொடையை சேர்ந்த திருமணம் முடித்த பெண்கள் இருவருக்கு குழந்தை பேறு தருவதாக கூறி, அவ்விருவரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பூசாரிக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைபாடு தொடர்பில் பொலிஸார் மேற் கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire