அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனில் மருமகனு்ககு அமெரிக்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா. இதன் தலைவராக இருந்தவர் ஒசாமா பின்லேடன். இந்த தீவிரவாத அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளை ஏற்படுத்த முயற்சிப்பதுடன், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் முக்கிய வர்த்தக மைய கட்டிடமான இரட்டை கோபுரங்களின் மீது விமானத்தை மோதி அல்கொய்தா தற்கொலை படையினர் தகர்த்தனர். இதையடுத்து, அல்கொய்தாவை வேரறுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியது.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் கண்டுபித்து கொன்றனர். இந்நிலையில், பின்லேடனின் 48 வயதுடைய மருமகன் கலைமான் அபு கெய்த் என்பவருக்கு அமெரிக்கா கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு சம்பவத்துக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கெய்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் விசாரித்தது. அமெரிக்கர்களை கொல்ல சதி திட்டம் திட்டியது, அதை செயல்படுத்து உதவியது போன்றவற்றில் கெய்த்துக்கு தொடர்பிருந்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மாவட்ட நீதிபதி லெவிஸ் கேப்லன் கெய்த்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
என் மீது கருணை காட்டும்படி இறைவனைத்தவிர வேறுயாரிடமும் கையேந்த மாட்டேன் என கெய்த் அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire