vendredi 28 février 2014

கூகுள் கண்ணாடி அணிந்து புதுப் படத்தை ரிக்கார்ட் செய்ய முயற்சி? பாய்ந்து வந்தது போலீஸ்!!

`தலைவர்’ படத்தையும் ரிக்கார்ட் பண்ணுமா இது?
`தலைவர்’ படத்தையும் ரிக்கார்ட் பண்ணுமா இது?
கம்ப்யூட்டர் கண்ணாடி (computer-in-eyeglass) என கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள கூகுள் கண்ணாடியை அணிந்து சென்ற ஒருவரை, சந்தேகத்தின் பெயரில் விசாரித்துள்ளனர் அமெரிக்க போலீஸ் அதிகாரிகள். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள சினிமா தியேட்டரில் நடந்தது, இந்த சம்பவம்.
சினிமா தியேட்டருக்கு கூகுள் கண்ணாடி அணிந்து செல்வது குற்றமா? அப்படியெல்லாம் கிடையாது. ஆனால், கூகுள் கண்ணாடியில், எதிரே தெரிவதை ரிக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது. இதனால், கண்ணாடி அணிந்து வந்த நபர், தியேட்டரில் இருந்தபடி திரைப்படத்தை ரிக்கார்ட் செய்கிறாரோ என்ற சந்தேகம், தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்டதில், அவர்கள் போலீஸூக்கு தகவல் தெரிவித்துவிட்டார்கள்.
கொலம்பஸ் நகரில் உள்ள ஏ.டிம்.சி. தியேட்டரில், இந்த வாரம் ரிலீஸான புதிய ஆங்கிலப்படம் Jack Ryan: Shadow Recruit பார்த்துக்கொண்டிருந்த நபரே, கூகுள் கண்ணாடி அணிந்திருந்தார்.
தகவல் அறிந்து பாய்ந்து வந்த ஓஹியோ போலீஸ் இந்த நபரை விசாரித்தபோது, அவர் தாம் அணிந்திருந்த கூகுள் கண்ணாடி வெறும் கம்யூட்டர் கண்ணாடி மட்டுமல்ல, தூரப்பார்வை குறைபாட்டுக்காக அணியும் பிரிஸ்கிரிப்ஷன் கண்ணாடியும்கூட என்று தெரிவித்தார். அத்துடன் அவரது கூகுள் கண்டாடியில் ரிக்கார்டிங் செய்யும் வசதியும், டீஅக்டிவேட் செய்யப்பட்டுள்ளதையும் காட்டினார்.
இதையடுத்து வெறும் கையுடன் திரும்பிச் சென்றது ஓஹியோ போலீஸ்.
இதுகுறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் காலித் வால்ஸ் கருத்து தெரிவிக்கையில், “கூகுள் கண்ணாடி அணிந்திருந்தவர், தாமாகவே முன்வந்து தகவல் தெரிவித்தாரே தவிர, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை” என்றார். கண்ணாடி அணிந்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை                                                          நன்றி விறுவிறுப்பு

வைக்கோ சட்டப்படி குற்றவாளிய அல்லது இந்தியாவின் உளவாளியா?

புலிகள் இயக்கம் சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின் அதிலும், குறிப்பாக இந்தியாவில் ராஜீவ்காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின். பிரபாகரனும் சக உறுப்பினர்களும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பின். வைக்கோ  வன்னிக்காட்டில் தலைமறைவாக இருந்த பிரபாகரனையும் அவரின் சக கூட்டாளிகளையும் சந்தித்து விட்டு இந்தியா வந்தபின் வைக்கோ வை ஏன் இந்தியா அரசு கைது செய்யவில்லை.?
இன்று வரையும் இவர் மீது இந்தியா அரசால் விசாரனையும் செய்யவிலை, வைக்கோ சட்டப்படி குற்றவாளிய அல்லது இந்தியாவின் உளவாளியா?
tamilmakkalkural_blogspot_compottuvaiko prabha
                                                                                                                                                                                                                                                                                                                                                                               

பிரபல நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.பி. விஜயசாந்தி.
டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் உடன் இருந்தார்.
மக்களவை உறுப்பினர் விஜயசாந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஆசி பெற்றதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறும்போது, "தெலங்கானா விவகாரத்தை எழுப்பிய முதல் நடிகையான விஜயசாந்தி, காங்கிரஸில் இணைய முடிவு செய்ததை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சோனியா காந்தியிடம் அவர் ஆசி பெற்றார்.
தெலங்கானாவுக்கான தனது போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸில் இணைந்ததாக விஜயசாந்தி கூறியிருக்கிறார்" என்றார் திக்விஜய் சிங்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேடாக் எம்.பி. விஜயசாந்தி, காங்கிரஸுடன் கட்சியை இணைப்பதற்கு தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தலைமை விரும்பாததை தாம் ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டார்.
முன்னதாக, தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தமது டி.ஆர்.எஸ். இணைந்துவிடும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அத்தகைய யோசனை தம்மிடம் இல்லை என்று சந்திரசேகர ராவ் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடித்து ஈராக்கில் 35 பேர் பலி

ஈராக்கில் இருந்து கடந்த 2008–ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு தினசரி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாக்தாத் அருகேயுள்ள சதர் சிட்டி மாவட்டத்தில் பழைய மோட்டார் சைக்கிள்களை விற்கும் மார்க்கெட் உள்ளது. நேற்று அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 25 பேர் அதே இடத்தில் பலியாகினர். 45 பேர் காயம் அடைந்தனர்.மேலும், சதர்சிட்டியில் ஒரு மினிபஸ்சில் குண்டு வெடித்தது. அதில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயம் அடைந்தனர்.
இவை தவிர வடக்கு ஷாப் பகுதியில் மற்றொரு மினி பஸ்சில் குண்டு வெடித்தது. அதில் 5 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த 3 சம்பவங்களிலும் மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க வில்லை. ஆனால் சன்னிபிரிவு தீவிரவாதிகள் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

உக்ரைன் அதிபர் இன்று தொலைக்காட்சியில் உரை

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் இன்று ரஷியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளார். அந்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களை ரஷ்ய ஆதரவு படைகள் கைப்பற்றி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன.  அந்நாடுகள் ரஷ்யாவிடம் உக்ரைனில் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யாவில் பேட்டியளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் உக்ரைனில் கடந்த மூன்று மாதங்களாக நிகழ்ந்து வரும் அசாதாரணமான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர தங்கள் நாட்டு ராணுவத்தை அனுப்ப தயார் என்று கூறியுள்ளார். இவ்வாறு ரஷ்ய படைகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவது ராணுவ அத்துமீறலாக தான் கருதப்படவேண்டும் என இடைக்கால உக்ரைன் அதிபர் ஒலக்சாண்ட்ர் டர்ச்சினோவ் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை ரஷ்ய தனது படைகளை அங்கு அனுப்புமானால், மிகப்பெரிய மோதல் நிகழ வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் கருதுகின்றன.
பிராந்தியத்தின் தலைநகரான சிம்ஃபெரொபோலின் அருகேயுள்ள வேறொரு விமான நிலையத்தை ரஷ்ய ஆதரவு ஆயுதக்குழு ஒன்று கைப்பற்றியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழ் தேசிக்கூட்டமைப்பு மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன? பிழைப்பு பிணத்தை வைத்து நடக்கின்றது .

இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கோபிதாஸ் எனும் பருத்திதுறையை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் இறந்திருந்தார். இவரது மரணம் இயற்கை மரணம் என்பது தெட்டத்தெளிவாக நிரூபணமாகியிருந்த நிலையிலும் இவ்விடயம் அரசியல் மயமாக்கப்பட்டு பல்வேறு வகையான வதந்திகள் பரப்பப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

தமிழ் அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் குறித்த நபரை ஓர் அரசியல் கைதி எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர் அரசியல் கைதியா அன்றில் குற்றவாளியா என்ற விடயம்கூட இங்கு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. கோபிதாஸ் மரணித்தபோது, அவர் ஓர் அரசியல் கைதி அல்ல என்பதும் அவர் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி என்பதும் தெட்டத்தெளிவான உண்மை. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்காக தடைசெய்யப்பட்ட சில தொலைத்தொடர்பு சாதனங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டு சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இவ்விடயம் தொடர்பில் இலங்கைநெட் ற்கு மகசின் சிறைச்சாலையில் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தகவல் தருகையில் : குறித்த நபர் நீதிமன்றின் ஊடாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 5 வருட கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர் என்றும், இவர் சிறைச்சாலையில் இருந்த காலத்தில் தனது தவறினை உணர்ந்து செயற்பட்டு வந்தவர் என்றும் சிறைச்சாலையின் சலவை பிரிவில் கடமையாற்றி வந்தார் என்றும் தெரிவித்த அவர் இவ்விடயம் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளால் தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் ஆனால் கோபிநாத் சிறைச்சாலையில் இருந்த காலத்தில் சிறைச்சாலை நிர்வாகத்துடன் மிகவும் ஒத்துழைப்பாகவும் ஒழுக்கமாகவும் இருந்தாகவும் கூறினார். 

பிணத்தை வைத்து பிழைப்பு நாடாத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் வக்கீல்களும் குறித்த நபர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தபோது எங்கிருந்தார்கள், இவர் ஒர் நிரபராதி என நிருபிக்க இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையாது? இவர் சிறைச்சாலையில் தவறாக வழி நடாத்தப்பட்டிருந்தால் அன்றில் அவர் மிது பாரபட்சம் காட்டப்பட்டிருந்தால் வக்கீல்களால் நிரப்பப்பட்டிருக்கும் தமிழ் தேசிக்கூட்டமைப்பு மேற்கொண்ட ஆக்கபுhர்வமான நடவடிக்கை என்ன?

jeudi 27 février 2014

ஏப்ரலில் யாழ். கிளிநொச்சி – பளை ரயில் சேவை மார்ச் 04ல் உத்தியோகபூர்வ பயணம்

Train_3
23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வட பகுதிக்கான ரயில் பாதை துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இந்திய உயர் ஸ்தானிகர் சிங்ஹா ஆகியோர் ரயில் சேவையை ஆரம்பித்து வைக்க உள்ளனர்.பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையும் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வடபகுதி ரயில் பாதை நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர் லியோ பெர்ணாந்து தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை பயணிக்க உள்ளதோடு யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான நிர்மாணப் பணிகள் ஜூனில் பூர்த்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான ரயில் சேவை கடந்த வருடம் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டது.வட பகுதிக்கான ரயில் பாதை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் தெற்கிலிருந்து மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

யாழ்ப்பாணத்திற்கும் தென் இந்தியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவை வேண்டும்

த.தே.கூ புலம் பெயர்ந்தோர் மற்றும் விடுதலை புலி சார்ந் தோரின் ஆசைகளை நிறைவேற்ற செயற்படாமல் வடக்கு மக்களுக்கு உதவிசெய்யவேண்டும் எனவும் அரசியல் அமைப்பின் வரையறைகளை மீறி செயற்பட்டுவரும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நன்றாக வாசித்து அதனை விளங்கிக் கொள்ள வேண்டுமென வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
'யாழ்ப்பாணத்திற்கும் தென் இந்தியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவை வேண்டுமெனவும் வட மாகாண ஆளுநரையும் பிரதம செயலாளரையும் அகற்றிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட கூடியவர்களை நியமிக்க வேண்டுமெனவும் அவர் விரும்புகின்றார். ஆனால் மத்திய அரசாங்கத்தின் ஆதரவும் அங்கீகாரமும் இன்றி இவற்றில் எதையும் சாதிக்க முடியாதென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.' என தயாசிரி கூறினார்.இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதியும் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான விக்னேஸ்வரன் இவ்வாறு பேசுவதை தன்னால் நம்ப முடியாது உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளருடன் பேசிய போது ஜய சேகர இவ்வாறு தெரிவித்தார்.சகல முதலமைச்சர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் ஜனாதிபதி நியமித்த ஆளுநருடன் ஒத்துழைக்க வேண்டும்;: முதலமைச்சர்கள் விரும்பும் உத்தியோகதர்களை அவர்களால் எப்போதும் பெற முடிவதில்லை எனவும் அமைச்சரவை அமைச்சர்கள் கூட தாம் விரும்பும் பிரதியமைச்சரையோ அமைச்சு செயலாளரையோ பெற முடிவதில்லை. வடமாகாண சபை அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்த்தால் மோதல் கொள்கையை கைவிட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும்  அல்லது 13 ஆவது திருத்தத்தை நன்றாக வாசித்து அதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

நளினி உள்ளிட்ட நான்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடை

 தமிழக அரசின் இந்த முடிவுக்கு மார்ச் 6-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நளினி உள்ளிட்ட 4 குற்றவாளிகளை தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து பெப்ரவரி 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இந்த உத்தரவு அளிக்கப்பட்டது.
கடந்த வாரம் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. அந்த இடைக்கால தடை உத்தரவுடன் சேர்த்து இந்த நான்கு குற்றவாளிகளின் விடுதலைக்கும் இடைக்காலத் தடை அளிக்கப்படுவதாக இந்தியத் தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் தேதி அன்று தீர்ப்பளித்திருந்தது.

அதனை தொடர்ந்து பெப்ரவரி 19 ஆம் தேதி அன்று இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்துவிடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் நடவக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த்து.
முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவரை விடுவிக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கும் ஆட்சேபணைகள் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, அந்த வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனு, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மட்டும் பொருந்தும் என்பதால் மீதம் உள்ள நளினி உள்ளிட்ட 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வேறு ஒரு மனு தாக்கல் செய்தது. எனினும் இந்த இரண்டு மனுக்களையும் ஒரே விசாரணையாக உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.

கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் பூமியில் தான் வாழ்கிறோம்.எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை! - உமா சக்தி


ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது.

ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள் இவற்றை எல்லாம் எளிதில் புறக்கணித்துவிடலாம். பொறாமைகள், வேலையில் கிடைக்கும் வெற்றியை வேறு விதமாக விமர்சிப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு போக வேண்டுமானால் வீட்டில் பர்மிஷன் கேட்க வேண்டும். எங்கே திரும்பினாலும் தடைக்கற்கள். ஆனாலும் சளைத்தவளல்ல. நினைத்தவற்றை முடிக்கும் உறுதியும் தெளிவும் அவளிடம் மேலதிகமாகவே உள்ளது. ஒன்பது மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மெல்ல தளர்ந்து பெண்கள் வீடு திரும்பும் நேரம் வேலை முடியும் நேரமாக மாறிக் கொண்டிருக்கும் சமயங்களில் தான் அவளின் பாதுகாப்பு பிரச்னைகள் இப்படி கேள்விக்குரியதாகிவிடுகிறது.

பெண்ணை உடலாகவும் போகப் பொருளாக மட்டுமே நினைக்கும் வக்கிர மனம் படைத்த மனிதர்களுக்கு அவள் படித்தவளா வேலைக்குபோகிறவளா என்றெல்லாம் யோசிக்க எங்கே நேரம். பயன்படுத்தி தூக்கி எறிய நினைக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் பூமியில் தான் வாழ்கிறோம். எவ்வளவு பாதுகாப்பாற்ற நிலையில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து செல்கிறார்கள் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதற்கான முயற்சியோ அப்படி என்ன வேலைக்குப் போய்த் தான் ஆகணுமா…என்ற கேள்வியையும் தான் எதிர்க் கொள்ள வேண்டியுள்ளது..

நானே ஒரு பத்திரிகையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஷிப்ட் சிஸ்டம் மாற்றினார்கள். புற நகர்ப் பகுதியில் இருக்கும் என் வீட்டருகே அடிக்கடி பல குற்றங்கள் நிகழ்வதுண்டு. மதியம் இரண்டு மணிக்கு வேலைக்குச் சென்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்பும் பெண்ணை தெருவில் இருக்கும் நாய்கள் கூட குரைத்துத் தான் வரவேற்றன. சற்று வேலை நேரத்தை மாற்றித் தாருஙக்ள் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தும் முடியவில்லை. பெண்கள் பாதுகாப்பைப் பற்றி, அது இல்லாமல் கொடூரமாக மரணம் அடைந்தவர்களைப் பற்றி அதே பத்திரிகைகளில் கட்டுரை எழுதுகிறோம், ஆனால் வேலைக்கு வரும் பெண்களுக்கு குறைந்த பட்சம் வாகன ஏற்பாடாவது செய்து வீடு வரை விடமாட்டோம். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்று கை கழுவி விட்டுப் போகும் மன நிலையில் நீங்கள் எழுதி என்ன, பத்திரிகை நடத்தி என்ன? மனம் வெறுத்துவிட்டது… சில கார்ப்பரேட் பத்திரிகைகள், ஐடி நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் விஷயங்களைப் பார்த்து, பாதுகாப்பு போன்ற விஷயங்களை அலட்சியம் செய்கின்றன‌. உங்கள் அலுவலகத்தை மற்றொரு வீடாக நினைத்துத்தான் ஒவ்வொரு பெண்ணும் வேலைக்கு வருகிறாள். பணமோ பதவியோ அவை அடுத்த விஷயங்கள். பெண்களை எப்போது சக உயிராக மதித்து அவளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையான மனப் பூர்வமாக எப்போது செய்கிறோமா அப்போது தான் நிர்ப்பயாக்களும் உமா மகேஸ்வரிகளும் வித்யாக்களும் மீண்டும் மீண்டும் சாக மாட்டார்கள்.

தொங்கு தசை உருத்ரகுமாரின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு

நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை ஏற்குமாறு தொங்கு தசை விஷ்வநாதன் ருத்ரகுமார் விடுத்த கோரிக்கையை தென் ஆபிரிக்கா நிராகரித்துள்ளதோடு, இலங்கை எந்த நாடு கடந்த முயற்சிக்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைக்காது என தென் ஆபிரிக்க தலைவர்கள் தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தனது தென் ஆபிரிக்க விஜயத்தின்போது பல தென் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்ததாக கூறிய அவர், இலங்கை மக்கள் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்படுவதை காண்பதே தங்களது எதிர்பார்ப்பு என அவர்கள் குறிப்பிட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு தென் ஆபிரிக்காவின் ஆதரவை பெறுவதற்காக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தலைமையிலான குழு தென் ஆபிரிக்கா பயணமானது. நாடு திரும்பியுள்ள அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தனது தென்ஆபிரிக்க விஜயம் குறித்து பெந்தர - எல்பிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.இலங்கை குறித்து தென் ஆபிரிக்காவுக்கு பெரும் கெளரவம் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புலிகளின் பிம்பம் சர்வதேச மட்டத்தில் குழப்பி வருகிறது என்றும் கூறினார்.
எமது நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுத்தவும் நாம் அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தியை குழப்பவும், தமக்கு தேவையானவாறு ஆட்டக்கூடிய பொம்மை அரசாங்கமொன்றை உருவாக்கவுமே மேலைத்தேய நாடுகள் முயல்கின்றன. தேசிய நோக்கின் அடிப்படையில் செயற்படுவதாலே சில சர்வதேச நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை.
மேலைத்தேய நாடுகளின் முன் தலை சாய்ப்பதற்கு அவர் தயாராக இல்லை. சர்வதேச விசாரணை கோருமளவிற்கு எமது நாட்டில் என்ன தவறு நடந்தது? யுத்தத்தின்போது பயங்கரவாதிகளால் படைவீரர்கள் கொல்லப்படுவர். படை வீரர்களினால் பயங்கரவாதிகள் கொல்லப்படுவர். இதில் எதற்கு விசாரணை நடத்துமாறு கோருகின்றனர். எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவரும் அதே நபர்கள்தான் ஜெனீவாவில் எமக்கு எதிராக விசாரணை நடத்த உள்ளனர். அரசியல் நோக்கமே இதன் பின்னணியில் இருக்கிறது.
பிரபாகரனின் பயங்கரவாத சவாலுக்கு அன்று நாம் ஒன்றிணைந்து ஒரே இனமாக முகம் கொடுத்தோம்.
இந்த சர்வதேச சவாலையும் நாம்ஒரே இனமாக ஒன்றுபட்டு வெற்றி கொள்ள வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாத காரணத்திற்காக மேலைத்தேய சதிகாரர்கள் யுக்ரேனை பழிவாங்குகின்றனர். அந்த நாட்டு எதிர்க் கட்சியை கைக்குள் போட்டுக்கொண்டு மக்களை தூண்டி விடுகின்றனர். இது தான் மனித உரிமை குறித்து எமக்கு கற்பிக்கும் நாடுகளுடைய அரசியல்பாடமாக உள்ளது.
எம்மைப் போன்று சுயமாக எழுந்து நிற்கும் நாட்டையும் அதன் தலைவர்களையும் அழிப்பதற்காக சர்வதேச சக்திகள் நாட்டிற்குள் குழப்பம் செய்கின்றன.
கடந்த தேர்தலைவிட ஒரு வாக்காவது மேலதிகமாக வழங்கி நாட்டு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதை உலகத்திற்கு காண்பிக்க வேண்டும். எம்மை காலால் இடிக்கும் மேலைத்தேய நாடுகளுக்கு இது நல்ல பதிலாக அமையும் என்றார்.

$10 மில்லியன் பெறுமதியான புதையலைக் கண்டு பிடித்த அதிர்ஷ்ட ஜோடி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தமது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஜோடி $10 மில்லியன் டாலர் பெறுமதியான அரிதான தங்க நாணையங்கள் அடங்கிய புதையல் சிக்கியுள்ளது.அதாவது இவர்கள் நடந்து சென்ற பாதையில் ஓரிடத்தில் புதையலை மோப்பம் பிடித்து நாய் குரைக்கவே குறித்த பகுதியினை அந்த ஜோடி தோண்டிப் பார்த்தனர். அதன் போது சுமார் 8 மெட்டல் பாத்திரங்களில் 1400 தங்க நாணயங்கள் இவர்களுக்குக் கிடைத்துள்ளன.இந்தத் தங்க நாணையங்களில் 1847 தொடக்கம் 1894 ஆண்டுக்குள் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்த $5 டாலர், $10 டாலர் மற்றும் $20 டாலர் நாணயங்கள் அடங்கியுள்ளன. இந்தத் தங்க நாணயங்களின் கண்டு பிடிப்பு அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய புதையல் கண்டு பிடிப்பாகக் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் இப்புதையல் சாடிள் றிட்ஜ் (Saddle Ridge) எனப்படும் மலைப் பகுதிக்கு அண்மையில் கண்டு பிடிக்கப் பட்டதால் அதற்கு சாடிள் றிட்ஜ் ஹோர்ட் (Saddle Ridge Hoard) எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.இப்புதையலைக் கண்டு பிடித்த ஜோடி தமது பெயரினை வெளியிடாத நிலையில் இந்த நாணயங்களில் 90% வீதமானவை அமேஷன்.காமின் (Amazon.com) ''Collectibles'' தளத்துக்கு வழங்கப் படவுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

படையினர் ஒரு போதும் அகற்றப்பட மாட்டார்கள்;கோட்டாபய ராஜபக்ஷ

வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து ஒரு போதும் அகற்றப்பட மாட்டார்கள் எனவும் யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தும் மேற்கு சக்திகளை திருப்திப்படுத்த அரசாங்கம் ஒரு போதும் தயாரில்லை என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் படையினரை நிறுத்துவதும் ஆயுதங்களை மீட்பதும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாமென ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் அப்பகுதியில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவது உட்பட் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் அப்பகுதிகளில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இடம்பெறும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாதென பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பிக்கும் அமெரிக்கா அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் தேவைகளை மாத்திரமே கவனத்திற் கொண்டு செயல்படுகின்றது. யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான படையினர் வடக்கில்குவிக்கப்பட்டிருந்தனர். தற்போது மிக குறைந்த தொகையினரே அங்குள்ளனர். இதனை தெளிவாக புரிந்து கொண்டுள்ள அமெரிக்கா இலங்கையிளன் இராணுவத்தினரை வடபகுதியிலிருந்து அகற்றுமாறு கூறுகின்றது.

இலங்கையில் ஆட்கள் இல்லாத ஆனையிறவில் புகையிரத நிலையம்?

elepahnatpass-1
elephantpass saltட்கள் இல்லாத ஆனையிறவில் அமைக்கப்படுகிறது ஒரு பென்னாம்பெரிய புகையிரத நிலையம்.
எதற்காக இந்த புகையிரத நிலையம்?
யாருக்காக இதை இப்படிக் கனங்காத்திரமாக கட்டுகிறார்கள்?
சத்தியமா எனக்குத் தெரியாது? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.
இந்தப் புகையிரத நிலையத்தைக் கட்டுவது கல்வி அமைச்சு என்று தகவல். இதற்காக அது நாடுமுழுவதிலும் இருந்து பாடகாலைப் பிள்ளைகளிடம் காசு சேர்த்திருக்கிறது. 
முன்னர் மன்னர்களும் மந்திரிகளும் குளங்களையும் கோயில்களையும்தான் கட்டினார்கள். இப்ப புகையிரத நிலையங்களையும் கட்டுகிறார்கள்.
சனங்களுக்குத் தேவை என்றால் யாரும் எதையும் செய்யலாம். எதெண்டாலும் நன்றாக நடந்தால் சரி.
முன்பு ஒரு காலம் ஆனையிறவில் உப்பளம் இருந்தது. உப்பளத்திற்காக அலுவலகமும் இருந்தது. அங்கே வேலை செய்யும் ஆட்களும் இருந்தார்கள். உப்பளைத்தைச் சுற்றி ஊர்மனையும் இருந்தது. சந்தையும், பள்ளிக்கூடமும், கடைதெருக்களும் இருந்தன.இப்பொழுது ஒன்றுமேயில்லை.
ஆக மிஞ்சியிருப்பது, புலிகளால் கைவிடப்பட்ட இராணுவ கனரக வண்டி ஒன்றும்elepahnt salt companyஅந்த வண்டியை தாக்கிச் சேதமாக்கியபொழுது பலியாகிய படைச்சிப்பாயின் நினைவுச் சிலை ஒன்றுமே.
இதைவிட வேறொன்றுமே அங்கே இல்லை.
இந்தச் சீரில்தான் புகையிரத நிலையத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக அங்கே கட்டுகிறார்கள்.
உண்மையில் அங்;கே அவசரமாகச் செய்திருக்க வேண்டியது, உப்பளத்தை சீர்ப்படுத்தி மீண்டும் இயங்க வைப்பதையே.
உப்பளம் இயங்கினால் உள்ளூர் மூலவளம் ஒன்று உற்பத்திப் பெறுமானத்தைப் பெற்றிருக்கும்.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியிருக்கும்.
உப்பளம் இயங்கினால் ஆனையிறவு முழுவதும் சனப்புழக்கம் ஏற்பட்டிருக்கும். கடையும் தெரும் ஊரும் சிறந்திருக்கும்.
இதெல்லாம் நடக்கும் போதே புகையிரத நிலையத்திற்கும் அர்த்தம் இருக்கும்.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் யாருக்குக் கவலை?
உலக நாடுகள் காசை அள்ளிக் கடனாகக் கொட்டுகின்றன. போருக்குப் பிந்திய இலங்கையைக் கட்டியெழுப்புங்கள் என்று வட்டியோடு கொடுக்கும் பணத்தை இப்படித் தண்ணியாகச் செலவழிக்கிறார்கள்.
அவசியமாகச் செய்யவேண்டிய ஆயிரம் வேலைகள் இருக்கும்போது இந்த மாதிரித் தேவையில்லாக் காரியங்கள் பலவும் நடக்கின்றன.
அபிவிருத்தி என்பது அவசியமான ஒன்று. வாழ்வின் அடிப்படைக்கு அது மூலாதாரம். ஆனால் அவை திட்டமிட்டு, பொருத்தப்பாட்டுடன் செய்யும்போதே அபிவிருத்திக்கான அர்த்தம் கிட்டும். அதுவே முறையான அபிவிருத்தி ஆகும். மக்களுக்குத் தேவையான, அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசியமான திட்டங்களுக்காகத்  தாராளமாக செலவழிக்கலாம். அதனால்தான் சனங்களுக்கும் நன்மை, நாட்டுக்கும் நன்மை.  
ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் இயங்க வையுங்கள் என்று ஆண்டு நான்கிற்கும் மேலாக மக்கள் வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கோடையிலும் உப்பு விளைந்து ஒவ்வொரு மாரியிலும் வீணாய்க் கரைந்து போகிறது.
மக்களின் அபிலாசையும் இப்படி உப்புக் கரைவது போல கரைந்துதான் போகுமா?
இன்னும் ஒரு கேள்வி, ஆட்களில்லாத ஊரில் புகையிரதம் நிற்குமா? அப்படி நின்றால் அதில் ஏறுவது யார்? இறங்குவது யார்?
நாளைக்கு இந்தக் கேள்விகளை காசு சேர்த்துக் கொடுத்த பிள்ளைகள் கேட்கத்தான் போகின்றன. அரசாங்கத்தின் விசித்திரத்தை அவர்கள் அறியத்தான் போகிறார்கள்.               ....  வடபுலத்தான்

ஊடகங்களின் மூலம் இனி புரட்சிகளை ஆட்சி மாற்றங்களை நடத்த முடியும் .இது தகவல் யுகம். நாம் இனிப் பின்னோக்கிச் சென்று வாழமுடியாது.

facebookஇது தகவல் யுகம் என்கிறார்கள். ஊடகங்களின் மூலம் இனி புரட்சிகளை ஆட்சி மாற்றங்களை நடத்த முடியும் என்கிறார்கள். டுனீசியாவில் ஆரம்பித்து இப்போது உக்ரைன் அதிபர் தப்பியோடியிருப்பது வரை உதாரணம் சொல்கிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் மக்களை ஒருங்குதிரட்டுவதில் பாரிய பங்களிப்பினை நல்கி வருவது ஒருபுறம் நடந்தாலும், பாதகமான செய்திகளும் அவ்வப்போது தலைகாட்டுகின்றன. ஃபேஸ்புக்கால் சமீப காலத்தில் மூன்றாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
க.பொ.த. சாதாரண தரத்தில் படித்த 16 வயது மாணவியொருவரே பிந்தியதாகத் தற்கொலை செய்துகொண்டவராவார். காதல் மறுக்கப்படுதலே காரணமாய் அமைந்திருக்கிறது. மக்களை இணைக்கின்ற ஊடகம், சிலரது வாழ்வைப் பிரித்துவிடவும் காரணமாவது துர்ப்பாக்கியமானதுதான்.
இதற்காக, உலகத்தை ஒரு கிராமமாகச் சுருங்கச் செய்துவருகிற ஊடகப் பெருக்கத்தையும், கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியையும் நிறுத்திவைத்துவிட முடியாது. மனிதர்களுக்கு எப்போதும் முன்னோக்கிய பாய்ச்சல்தான். மலரும் பழைய நினைவுகள் இனிக்கின்றன என்பதற்காக நாம் இனிப் பின்னோக்கிச் சென்று வாழமுடியாது.

mardi 25 février 2014

இலங்கை படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டம்: வைகோ அறிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை நடக்கும் ஈழ படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: முத்துக்குமார் தீக்குளித்த ஐந்தாவது நினைவு நாளான ஜனவரி 29ல் நெதர்லாந்து நாட்டிலிருந்து புறப்பட்டு ஈழ தமிழர்கள் ஜெனீவா நோக்கி செல்கின்றனர். முருகதாசன் தீக்குளித்து இறந்த மார்ச் 10ம் தேதி ஜெனீவாவின் மனித உரிமைகள் ஆணைய கட்டிடத்துக்கு எதிரே திரளும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களோடு அவர்கள் சங்கமித்து நீதி கேட்டு எழுப்பும் முழக்கம் விண்முட்ட எழும். 

அதற்குக் கட்டியம் கூறும் வகையில் பிப்ரவரி 26ல் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் நீதிக்கான போர் முழக்கத்தை எழுப்புவோம். சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் பிப்ரவரி 26 புதன்கிழமை காலை 11 மணிக்கு சாதி, மதம், கட்சி எல்லைகள் கடந்து நீதி கேட்கும் பட்டயங்கள் ஏந்தி ஆர்ப்பரித்து முழக்கமிட அழைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த விஜித தேரர் தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வருவதாக‌ தகவல் வெளியிட்டுள்ளார்

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வரும் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் இந்நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினரின் உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இருக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான விஜித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த எனக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் என்றுகூட பார்க்காது பொது பலசேனா கொலை அச்சுறுத்தல் விடுத்தது. இந்த அச்சுறுத்தலுக்கு பயந்து சுமார் 6 மாத காலமாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றேன்.
எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகக் கூறி பொது பல சேனாவுக்கெதிராக மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறைப்பாடொன்றை செய்ததுடன் அவ்வமைப்பை தடைசெய்யுமாறு கோரி மனுவொன்றையும் கையளித்தேன். ஆனால், இதுவரை காலமும் இதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸாரிடம் தஞ்சமடைந்தேன். என்னைப் பொறுத்தவரை இந்நாட்டில் சிறுபான்மையினருக்காக குரல் குடுப்பவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஆளுக்கட்சி உறுப்பினராக இருந்தும்கூட பொதுபலசேனாவுக்கு அஞ்சி சுமார் 6 மாத காலமாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றேன்.
எனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஜனாதிபதியிடமும் முறையிட தொடர்புகொள்ள முயற்சித்தபோது அதற்கான சரியான தருணம் எனக்கு அமையவில்லை. எனவே,இது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி பொது பலசேனா போன்ற இனவாத அமைப்புகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.


lundi 24 février 2014

இலங்கயில். அடங்குமுறைகளுக்கு எதிரான சனநாயக அமைப்பு . சத்தியாக்கிரகப் போராட்டம்-

thampi..வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு நான்காவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இங்கு இணைக்கப்படுகின்றது:-
வலி வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் தற்போதைய தேவை நிவாரணமும், மீள்குடியேற்றமும், வேலைவாய்ப்புமே. இவற்றைக்கூட நிறைவுசெய்ய முடியாத அரசு எமது மக்களுக்கு எந்த உரிமைகளை எப்படித் தரப்போகின்றது? எமது பிரதேசத்தில் கடந்த முப்பது (30) வருட காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக எமது மக்கள் அளவு கடந்த துன்பங்களுக்கு மத்தியிலும் பல தடவைகள் இடம்பெயர்ந்து இன்றும் அகதி முகாம்களிலும் நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியபொழுது எமது மக்களும் பரம்பரை பரம்பரையாக தாங்கள் சேர்த்து வைத்திருந்த பொருட்களையும், தளபாடங்களையும், வசித்துவந்த வீடுகளையும் கைவிட்டுவிட்டு கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தாங்களும் விடுதலைப் புலிகளுடன் தென்மராட்சியூடாக வன்னியை நோக்கி நகர்ந்தார்கள்.
இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களை அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தத்தமது காணிகளை அடையாளம் கண்டு தத்தமது வீடுகளில் மீள்குடியேறுவதற்கு வசதியாக பலாலியை நோக்கி தமது நிலைகளை முன்னகர்த்திய பொழுது மக்கள் தத்தமது வீடுகளில் குடியேறி தமது விளைநிலங்களில் பயிர்ச்செய்கையையும் ஆரம்பித்திருந்தார்கள்.
யுத்தம் முடிவக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து (5) வருடஙங்களாகிவிட்ட தற்போதைய சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்திருந்த எமது மக்கள் தமது உறுதிக் காணிகலேயே மீள்குடியேற முடியாது இன்றும் முகாம்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கி எமது சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சனாதிபதி அவர்கள் இறுதி யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது ‘இறந்தவர்களை மட்டும் என்னால் மீட்டுத்தர முடியாது அதற்கு மாற்றீடாக தமிழ் மக்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன்’ என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஆனால் கௌரவ சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சில அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பு தொடர்பாக பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் ’13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சனாதிபதி தயாரில்லை’என்று தெரிவித்திருந்தார்.
அண்மையில் வட மாகாணத்திற்கு வருகை தந்திருந்த கௌரவ காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை எக்காரணம் கொண்டும் அரசாங்கம் கையகப்படுத்தாது என்று உறுதி கூறியிருக்கின்றார். அத்துடன் யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் திரு. உதய பெரேரா அவர்களும் இடம்பெயர்ந்து இருக்கின்ற வலிவடக்கு மக்களை அவரவர் சொந்த இடங்களில் மிக விரைவில் மீள்குடியேற்றுவதாக வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கத்திடம் உறுதி கூறியிருக்கின்றார்.
அந்நிய இராணுவம்போல் எமது மக்களின் வாழ்விடங்களையும் விளைநிலங்களையும் அரச படைகள் ஆக்கிரமித்து இன்றுவரை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கின்றது.
இராணுவம் தனது மனோநிலையை மாற்றி தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கின்ற வலிவடக்கு பிரதேச மக்களின் வீடுகளிலிருந்தும் விளைநிலங்களிலிருந்தும் விலகி தனது நிலைகளை எமது மக்களின் மீள்குடியேற்றத்திற்காகவும் நடேசுவரா கல்லூரியை மீண்டும் சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்காகவும் பலாலி இராணுவ முகாமை நோக்கி முன்னகர்த்துவதன் மூலம் வழிசமைத்து அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு மிக விரைவாக ஆவன செய்ய வேண்டுமென்றும்,
அதேபோல கடற்படையும் தனது மனோநிலையை மாற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்ற சம்பூர் பிரதேச மக்களின் நகர மையத்திலிருந்தும் வீடுகளிலிருந்தும் விளைநிலங்களிலிருந்தும் விலகி தனது நிலைகளை எமது மக்களின் மீள்குடிறே;றத்திற்காக வெளிச்சவீட்டை நோக்கியும் கடற்கரையை நோக்கியும் நகர்த்துவதன் மூலம் வழிசமைத்து அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு மிக விரைவாக ஆவன செய்ய வேண்டுமென்றும்,
ஏற்கனவே உறுதிமொழி வழங்கப்பட்ட உலர் உணவு கொடுப்பனவுகளை வலிவடக்கு சம்பூர் கிராம மக்களுக்கு மிக விரைவாக வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரியும்,
அத்துடன் ஏற்கனவே வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பாதயாத்திரையின்போது முன்வைக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விரைவான விடுதலைக்கும், காணாமற் போனவர்கள் சம்பந்தப்பட்ட விரைவான நீதியான விசாரணைக்கும், அவர்களின் விடுதலைக்கும், கடந்த கால போராட்ட சூழ்நிலையில் அங்கவீனர்கள் ஆக்கப்பட்ட எமது மக்களின் மேம்பாட்டிற்கும் நிறைவானதும், நியாயமானதுமான கொடுப்பனவுகளுக்கும், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் பாதுகாப்பிற்கும், அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவுகள், அரச வேலை வாய்ப்புகளுக்கும், மாகாணசபையை எந்தவொரு இடையூறுமின்றி இயங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மத்திய அரசாங்கத்தையும், சனாதிபதியையும் கோரி அரசியல் கட்சிகளுடனும், வெகுஜன அமைப்புக்களுடனும், ஒன்றிணைந்து அடக்கு முறைகளுக்கு எதிரான சனநாயக அமைப்பு எமது மக்கள்மீதும் அவர்களது நல்வாழ்விலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அனைத்து தமிழ் மக்களின் ஆதரவுடன் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை 2014ஆம் ஆண்டு மாசி மாதம் 21ஆம் திகதியன்று ஆரம்பித்து இன்றுடன் நான்காவது நாளாகவும் நடாத்தி வருகின்றது.
தம்பி.க.மு.தம்பிராசா,
தலைவர்,
அடங்குமுறைகளுக்கு எதிரான சனநாயக அமைப்பு,
தொடர்புகட்டு: 0777382343

அரசியலுக்காக நீதியை தூக்கிலிடுவதா? வாசுதேவ நாணயக்கார

ராஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை விடுவிக்கும் ஜெயலலிதாவின் செயற்பாடானது  அவர் இந்தியக் குடிமகனா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இச்செயல் கொலைகளுக்கு அனுமதி வழங்குவதாகவுள்ளதென்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீர்மானம் பிழையானது.
இது கொலை செய்வதற்கு அனுமதி வழங்கும் பிழையான முன்னுதாரணமாகும். இதனை தமிழகத்திலுள்ள தமிழர்கள் மட்டுமல்ல வட இந்தியர்களும் எதிர்க்கின்றனர். தனது சுயலாபத்திற்காக தேர்தலின் போது விடுதலை புலி ஆதரவாளர்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கான அரசியல் தீர்மானமாகும்.

அரசியலுக்காக நீதியை தூக்கிலிடுவதா? இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவேதான் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று அமைச்சர் வாசு தெரிவித்தார்.

dimanche 23 février 2014

பளை வரை பயணம் யாழ் தேவி புகையிரதம்

யாழ் தேவி புகையிரதம் கிளிநொச்சியிலிருந்து பளை வரை இன்று பரீட்சார்த்தமாக பயணத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலைய பொதுமுகாமையாளர் தலைமயில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதிமுதல் யாழ் தேவி பளைவரை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.