samedi 22 février 2014

இனப்பிரச்சினைக்கு மொழியே பிரதான காரணமாகும் தமிழ் தாய் மொழியாகும்: வாசுதேவ..!!

இலங்கையில் சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும் எனவே இந்நாட்டில் உள்ள இரண்டு தாய் மொழிகளையும் கற்று சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச கரும மொழிகள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நாட்டில் நிலைகொண்டுள்ள இனப்பிரச்சினைக்கு மொழியே பிரதான காரணமாகும் எனக்குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் தமிழ் மொழியில் சித்தியடைந்த சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியில் உரை நிகழ்த்தியதுடன் 3 தமிழ் பாடல்களுக்கு நடனமாடினர் இருப்பினும் இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் காணப்படவில்லை இதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கான சூழல் அதிகரிக்கப்பட்டது.

மேலும் வடக்கு தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது தெற்கு சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது இதன் காரணமாக நாடு மொழி ரீதியாக இரண்டாக பிளவு பெற்று காணப்பட்டது மாத்திரமின்றி வரலாற்றில் இனப்பிரச்சினை தோன்றியமைக்கும் மொழியே காரணம் என்பது இரகசியமல்ல.

எனவே மொழி ரீதியாக பிளவுபெற்ற இந்நாட்டை அதனூடாக ஐக்கியப்படுத்த வேண்டும் ஆகவே இந்நாட்டை மொழி கலாசார பண்பாடுகளினூடாகவே இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.


இனங்களுக்கிடையே இத்தகைய மாற்றத்தினை பாடசாலையினூடாக ஏற்படுத்தினாலேயே எதிர்காலச் சந்ததியினால் இன ரீதியாக பிளவுபடாமல் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வர்கள் என தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire