அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தமது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஜோடி $10 மில்லியன் டாலர் பெறுமதியான அரிதான தங்க நாணையங்கள் அடங்கிய புதையல் சிக்கியுள்ளது.அதாவது இவர்கள் நடந்து சென்ற பாதையில் ஓரிடத்தில் புதையலை மோப்பம் பிடித்து நாய் குரைக்கவே குறித்த பகுதியினை அந்த ஜோடி தோண்டிப் பார்த்தனர். அதன் போது சுமார் 8 மெட்டல் பாத்திரங்களில் 1400 தங்க நாணயங்கள் இவர்களுக்குக் கிடைத்துள்ளன.இந்தத் தங்க நாணையங்களில் 1847 தொடக்கம் 1894 ஆண்டுக்குள் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்த $5 டாலர், $10 டாலர் மற்றும் $20 டாலர் நாணயங்கள் அடங்கியுள்ளன. இந்தத் தங்க நாணயங்களின் கண்டு பிடிப்பு அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய புதையல் கண்டு பிடிப்பாகக் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் இப்புதையல் சாடிள் றிட்ஜ் (Saddle Ridge) எனப்படும் மலைப் பகுதிக்கு அண்மையில் கண்டு பிடிக்கப் பட்டதால் அதற்கு சாடிள் றிட்ஜ் ஹோர்ட் (Saddle Ridge Hoard) எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.இப்புதையலைக் கண்டு பிடித்த ஜோடி தமது பெயரினை வெளியிடாத நிலையில் இந்த நாணயங்களில் 90% வீதமானவை அமேஷன்.காமின் (Amazon.com) ''Collectibles'' தளத்துக்கு வழங்கப் படவுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire