இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இரா.சம்பந்தன் இன்று 81வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்ச இன்று தொலைபேசி மூலம் இரா.சம்பந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவசியம் சந்தித்துப் பேச வேண்டியுள்ளதாகவும் அழைப்பு விடுத்துள்ளார்.
சம்பந்தன் நாடு திரும்பியதும் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு இடம்பெறும் என்றும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையிலேயே, இரா.சம்பந்தனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire