குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேனும் தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் குறிப்பாக எண்ணற்ற சத்துக்களை கொண்ட வாழைப்பழத்தில் பல வகை உண்டு அவற்றில் சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதுடன் இது அதிகளவில் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா விலேயே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்குகிறது என்பதுடன் செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் காணப்படுகிறது எனவே இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கின்றது என்பதுடன் இதில் வைட்டமின் ‘சி’, ஆண்டி ஆக்ஸிடென்ட், 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
எனவே கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாக காணப்படுகிறது எனவே கண் பார்வை குறைய ஆரம்பித்தால் நீங்கள் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவடைவதுடன் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் இரவுச்சாப்பாட்டுக்கு பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழைப்பளம் சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
இது மட்டுமல்லாது பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
Aucun commentaire:
Enregistrer un commentaire