இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரன்க்பர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
மேலும் மத்திய அரசு 3 நாட்களுக்குள் தமது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் இந்திய அரசமைப்புச் சட்டம் 432இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமா அதிபர் உள்ளிட்டோருடன் தமிழக அரசின் முடிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசாரன் ஆஜராகி, தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோர் மீது ஆயுதச் சட்டம், தடா சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை சட்டப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுதான் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அப்படி அனுமதி பெறவில்லை என்று கூறினார்.
ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றிதான் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுவிக்க தமிழகத்துக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கிறது. ஆனால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும் தமிழக அரசு எந்த அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது என்பதை 2 வாரத்துக்குள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் இனத்திற்கு கிடைத்த வெற்றியாம்........தமிழ் இனம் என்ன கொலைகார இனமா?
சட்டம் தான் தூக்கில் தொங்கி விட்டது. நாதியற்று போனது தேசம்.
இந்த நாட்டின் தலைவரை சதி செயல் மூலம் கொன்றவர்களுக்கு இந்த நாட்டு தலைவர்கள் தரும் ஆதரவை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது. வேறெந்த நாட்டிலும் காண முடியாத அலங்கோலம் இது.
இக்கொலைகாரர்கள் நாளை வேறு தலைவரை போட்டு தள்ளுவார்கள். இறந்த அப்பாவிகள் குடும்பங்களை பற்றி அவர்களுடைய தற்பொழுதைய வாழ்க்கையை அலசினார்களா?
அவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. தண்டனையைத்தான் குறைத்திருக்கிறது. அதுவும் கருணை மனுக்களை பரிசீலிக்க அளவுக்கு அதிகமான அவகாசம் எடுத்து கொண்டதால் இந்த விபரீதமான தீர்ப்பு இப்போது வந்திருக்கிறது. 'சதிச்செயல் செய்தவன் புத்திசாலி.அதை சகித்து கொண்டிருந்தவன் குற்றவாளி' என்றுதான் சொல்லவேண்டும்.குற்றவாளிகளுக்கு இவ்வளவு ஆதரவு என்றால் இந்த நாடு உருப்படுமா? தேசதலைவரை கொலை செய்த பாவிகளின் பாதக செயலை. உச்ச நீதி மன்றம் மன்னித்தாலும் தேசம் மன்னிக்காது .போலி இலங்கை ஆதரவாளர்களின் களியாட்டமே அவர்களது பினனணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஆனால், கிளைமாக்ஸ் இனித்தான் உள்ளது… ஈரானின் அரேபிய மக்கள் முன் பொது இடங்களில் தூக்கு
ஈரானில் குற்றவாளிகள் என்று அரசால் கருதப்படுபவர்கள் பொது இடத்தில் தூக்கிலிடப்படுகிறார்கள். குற்றவாளியின் கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்டு, அவர் கிரேனால் தூக்கப்படுவார். சில இடங்களில் தூக்குமேடைகளும் அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, போன வாரம் 13-ம் தேதி அன்று இரு குற்றவாளிகள் ஷிராஸ் நகரில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள். இன்றைய ஈரானின் அரசு ஒரு மிதமான அரசு என்று சொல்லப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த அரசுதான் ஒரு கவிஞனைத் தூக்கிலிட்டிருக்கிறது. பொதுஇடத்தில் அல்ல, ரகசியமாக. இந்த சம்பவத்தைப் பற்றி அதிகம் பேசப்படாதது ஆச்சரி யத்தை அளிக்கிறது.ஷபானிக்குத் தான் உயிரோடு திரும்ப வர மாட்டோம் என்பது தெரிந்தி ருக்கிறது. அவரது கவிதை இது:

நான் இறக்க வேண்டும் என்பதற்கு ஏழு காரணங்கள்:
ஏழு நாட்கள் அவர்கள் ஓங்கிய குரலில் சொன்னார்கள்
நீ இறைவனுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிறாய் என்று
சனிக் கிழமை – நீ ஓர் அரேபியன்
ஞாயிற்றுக்கிழமை – நீ ஓர் அஹ்வாசியன்
திங்கள்கிழமை – நீ ஓர் ஈரானியன் என்பதை நினைவில் வைத்துக்கொள்
செவ்வாய்க்கிழமை – நீ புனிதப் புரட்சியைக் கேலிசெய்கிறாய்
புதன்கிழமை – நீ மற்றவர்களுக்குத் துணையாகக் குரல்கொடுக்கவில்லையா?
வியாழக்கிழமை – நீ ஒரு கவிஞன், பாடகன்
வெள்ளிக்கிழமை – நீ ஒரு மனிதன் – இது போதாதா இறப்பதற்கு? ஆனால் இந்திய ராஜீவ் காந்தியின் கொலை தமிழ் இனத்திற்கு கிடைத்த வெற்றியாம்........தமிழ் இனம் என்ன கொலைகார இனமா? கிளைமாக்ஸ் இனித்தான் உள்ளது…
Aucun commentaire:
Enregistrer un commentaire