mercredi 12 février 2014

500 மில்லியனை பிரபாகரனுக்கு கொடுத்து வென்றவர் எம்மை துரோகி என்கிறார் "– பொன்சேக்கா

"பிரபாகரனுக்கு 500 மில்லியனை கொடுத்து வென்றவர் எம்மை துரோகி என்கிறார் "– பொன்சேக்காபிரபாகரனுக்கு 500 மில்லியனைக் கொடுத்து தமிழ் மக்களை வாக்களிக்காமல் செய்துவிட்டு வெற்றியடைந்த ஒருவர் தம்மை துரோகி என்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்தார். சரத் பொன்சேக்கா தலைமையில் நேற்று அலுத்கம – தர்கா நகரில் கூட்டம் ஒன்று ஒன்று இடம்பெற்றது. கூட்டத்தில் தலமை தாங்கிப் பேசியபோதோ அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
“நாங்கள் பிரபாகரனின் ஆவியெனவும் தேசத் துரோகிகள் என்றும் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டில் பிரபாகரனுக்கு 500 மில்லியன் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டு பிரபாகரன் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார். இதனூடாக, ஒருவர் வெற்றி பெற்றார் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். 
 
அத்துடன் இந்த 500 மில்லியனைக் கொண்டு பிரபாகரன் மலேஷியாவில் கடற்புலிகளுக்கு தேவையான படகுகளை வாங்கினார். அந்த படகுகளைக் கொண்டு வந்து எமது கடற்படையினரையும் இராணுவத்தினரையும் கொலை செய்தனர். இப்போது யார் துரோகியென நீங்கள் கூறுங்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
அதேவேளை ஆட்சியாளருக்கு ஆதரவான அரசியல்வாதிகளே இன்று பிரதேச மற்றும் மாகாண சபை மட்டத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுவதாக சரத் பொன்சேக்கா தெரிவித்தார். அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்

Aucun commentaire:

Enregistrer un commentaire