2நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று மேடைகளில்முழக்கமிட்டஅ.தி.மு.க.வினர் அதிலிருந்து சற்று இறங்கி வர தொடங்கியுள்ளனர். போட்டியிடும் அனைத்து தொகுதிகளில் வெற்றிபெற்றால்கூட, 40 சீட்கள் கிடையாது, 36 மட்டுமே என்பதேதற்போதைய நிலை.
இது 34 ஆக குறையலாம் என்பதற்கு ஒரு (மைல்ட்) பாஸிபிளிட்டியும் உண்டு!
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்பிய இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சீய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தற்போது கூட்டணி பேரத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டன. சில பைனல் ‘டச்’சுகள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், “அ.தி.மு.க. கொடுத்த தொகுதிகள் போதாது” என, தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள், செந்தோழர்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பரதன், தேசியப் பொதுச் செயலாளர் சுதாகர், மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியத் தலைவர் பிரகாஷ் கரத், மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர்.
இரு கட்சிகளும் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால், எந்தக் கட்சிகளுக்கு எத்தனை சீட்கள், எந்தெந்த தொகுதிகள் என்பது மட்டும் அறிவிக்கப்படவில்லை.
இவர்களது தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் என்ன நடந்தது?
அ.தி.மு.க. வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, மார்க்சிஸ்ட் கட்சி, முதலில் 5 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஜெயலலிதா ‘லேசாக சிரித்தாராம்’. “ரியாலிட்டியை பேசுவோம்” என்றாராம்.
அதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி, “குறைந்தபட்சம் 2009 தேர்தலில் வழங்கிய 3 சீட்கள் கொடுத்தால்கூட போதும்” என்ற நிலைக்கு போனதாம். அம்மாவோ, “இரண்டுக்கு மேல் எப்போதும் இல்லை” என்று சொல்லிவிட்டு, எழுந்து போய்விட்டாராம்.
கிட்டத்தட்ட அதே போலதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தையும் முடிந்தது. கடந்த தேர்தலைப்போல 3 சீட் கொடுத்தால் போதும் என்று அவர்கள், கூறியிருந்தனர். அம்மா இரட்டை விரலை காட்டிவிட்டு, எழுந்து போய்விட்டார்.
அம்மா காட்டிய இரட்டை விரல்கள், ‘இரட்டை இலை சின்னமா?’ ‘V for Victory-யா?’ அல்லது, “இரண்டு தொகுதிகள் மட்டும்தானா” என்று தோழர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.
இரு கட்சியினரும், “இன்னும் ஒன்று போட்டுக் கொடுங்கம்மா” என்ற கோரிக்கை வைத்துவிட்டு, சாதகமான பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
கார்டனில் செல்வாக்கு உள்ள ஒருவரிடம் கேட்டபோது, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டும் என தலா 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அம்மா முடிவு செய்துவிட்டார். விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், 40 தொகுதிகளிலும், நாமே போட்டியிடுவோம் என்று அம்மா சொல்லி விட்டார்” என்றார்.
அட, இதை கம்யூனிஸ்ட்டுகளிடம் அழுத்தி சொல்லி விடுங்களேன். தேவையில்லாமல் கார்டன் பக்கமாக சுற்றிக்கொண்டு இருக்காமல், தத்தமது சோலியை பார்க்க போவார்கள்.
சரி. தலைக்கு இரண்டு சீட்கள் மட்டும்தான் என்று வைத்துக் கொண்டாலும், இவர்களுக்கு எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும்? அம்மாவின் பிளான் என்ன?
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிவகங்கை, தென்காசி ஆகிய தொகுதிகளை ஒதுக்கி கொடுங்கள்” என்று அம்மா சொல்லிவிட்டாராம். இந்த தொகுதிகளில், சிவகங்கை தொகுதியை, தா.பாண்டியன் விரும்பிக் கேட்டு பெற்றுக் கொண்டாராம். தா.பாண்டியன், கடந்த லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்று வருகிறது. இதனால், சிவகங்கையை தா.பாண்டியன் ஜெயலலிதாவிடம் கேட்டதாக தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைமை என்ன?
மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சியிடமிருந்து, அ.தி.மு.க. எடுத்துக் கொள்ள போகிறதாம். மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, நாகர்கோவில் ஆகிய இரு தொகுதிகளை ஒதுக்குவதே, அம்மாவின் பிளான் என்கிறார்கள்.
இவற்றை மார்க்சிஸ்ட் கட்சியி ஏற்றுக்கொண்டால் (வேறு வழி?), இந்த இரு தொகுதியில்கூட நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்குள்ள தொகுதி. 2009-ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மார்க்சிஸ்ட் கட்சியோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
எப்படியோ, கன்னியாகுமரி தொகுதியை மார்க்சிஸ்ட் வசமே தள்ளிவிட்டு, “திறமை இருந்தால், ஜெயித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்துவிடுவார்கள்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் 4 தொகுதிகள் போக எஞ்சிய 36 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும்.
அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றால்?
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஒப்பு கொண்டுள்ளனவாம்…
(விறுவிறுப்பு)

Aucun commentaire:
Enregistrer un commentaire