வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பாக, அனைத்துலக சமூகத்துக்கு விளக்கமளிக்கும் நோக்கில், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவும், பிரித்தானியத் தமிழர் பேரவையும் இணைந்து பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று இந்த மாநாட்டை நடத்த ஒழுங்கு செய்துள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் லண்டன் சென்றுள்ளனர்.
இந்த மாநாட்டில், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிசும் பங்கேற்பார் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானத்தில், தமிழ் மக்களின் காணி அபகரிப்பு விவகாரமும் முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire