யாழின் தற்போதைய பால்மா பிரச்சனையை
மையக்கருவாக கொண்டு, வீண்விரையமாகும் விடயங்களுக்கு குறியீடாக பசுப்பாலினை
உள்வாங்கி எடுக்கப்பட்டிருந்த பாற்காரன் குறும்படம் இணைய நண்பர்களுக்காக
இன்று வெளியிடப்படுகின்றது. இந்தப்படத்தின் கதாநாயகனாக பேராசிரியர்
சிவச்சந்திரனின் மகன் பாரதி நடித்துள்ளார்.
குறும்பட விமர்சனம்
பால் எப்படியெல்லாம் வீணாக்கப்பட்டு,
இறுதியில் சேரவேண்டிய இடத்துக்கு சேராமல் போகின்றது என்ற ஒரு வரியினூடாக
குறும்படத்தை நகர்த்தியிருக்கிறார் முகிலன்.
எங்களிடம் இருக்கும் வளங்கள் எல்லாமே
சரியாகத்தான் சேரவேண்டிய இடத்தை சேர்கின்றனவா? இல்லை, பண பலத்தால் அவை
குறித்த இடங்களிலேயே தேங்கிவிடும் அவலம் காலகாலமாக நடந்துகொண்டுதான்
இருக்கிறது. இப்படி விரயமாக்கப்படும் வளங்களை “பால்” மூலம்
காட்சிப்படுத்திய முகிலனின் இயக்கத்திற்கு பாராட்டுக்கள். குறும்படத்தினை
சுருக்கமாக பார்த்தால், ஒரு பாற்காரனிடம் இருந்து வரும் பால் கோயில்
சிலைக்கு அபிஷேகம் செய்யவும், பாம்பு பொத்திற்கு ஊற்றவும், இறக்கும்
தறுவாயில் உள்ளவருக்கு கொடுப்பதற்கும், சினிமா நடிகரின் போஸ்டருக்கு
ஊற்றவும் என விரயமாக செலவாகிறது. ஆனால் இறுதியில் அது கிடைக்கவேண்டிய ஏழை
குழந்தைக்கு கிடைக்காமலே போகிறது.
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமான
ஒரு கருவை எடுத்துக்கொண்ட முகிலனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
படத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சாதகமான விடயம் ஒளிப்பதிவு.
யாழ்ப்பாணத்தின் அழகு ஒளிப்பதிவுல் மேலும் மெருகேறியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுரேனுக்கு வாழ்த்துக்கள். பின்னணி இசை தேவைக்கேற்ப அழகாக
உபயோகிக்கப்பட்டுள்ளது. எடிட்டிங் சில இடங்களில் சொதப்பினாலும் ஓரளவு
நன்றாக உள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire