ராஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை விடுவிக்கும் ஜெயலலிதாவின் செயற்பாடானது அவர் இந்தியக் குடிமகனா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இச்செயல் கொலைகளுக்கு அனுமதி வழங்குவதாகவுள்ளதென்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீர்மானம் பிழையானது.
இது கொலை செய்வதற்கு அனுமதி வழங்கும் பிழையான முன்னுதாரணமாகும். இதனை தமிழகத்திலுள்ள தமிழர்கள் மட்டுமல்ல வட இந்தியர்களும் எதிர்க்கின்றனர். தனது சுயலாபத்திற்காக தேர்தலின் போது விடுதலை புலி ஆதரவாளர்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கான அரசியல் தீர்மானமாகும்.
அரசியலுக்காக நீதியை தூக்கிலிடுவதா? இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவேதான் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று அமைச்சர் வாசு தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire