அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

தென்மராட்சியில் வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரைதொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்த போது 'அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக நான் அறிகின்றேன். இதுவரை எனக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும்
விடுக்கப்படவில்லை நான் உரையாற்றும் போதே எழுதி முன்கூட்டி தயாரித்தே நான் உரையாற்றுவேன். சில விடயங்களை நான் எழுத்தில் இல்லாமல் பேசுவேன். குறித்த விடயம் தொடர்பில் நான் சட்டத்திற்கு முரணான வகையில் ஏதாவது கருத்துக்கள் முன்வைத்திருந்தால் என்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்' என்று தெரிவித்த அவர் உண்மையினையே தான் பேசியதாகவும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire