சீனா உலகின் மிக நீளமான நீருக்கு அடியில் இருக்கும் சுரங்க பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சுரங்கப்பாதை 2020 ஆம் ஆண்டிற்குள் கட்டிமுடிக்கபடுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
உலகின் நீளமான சுரங்கத்தை கடலுக்கடியில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இரண்டு துறைமுக நகரங்களுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்படுகிறது.இந்த திட்டத்தில் ஷேன்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாய்யில் இருந்து லீபோனிங் மாகாணத்தில் உள்ள டைலான் நகரத்தை இணைக்கும் வகையில் சுமார் 123 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கபடுகிறது. தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான 1,400 கி.மீ. தொலைவை கடந்து செல்ல 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
ஆனால், இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டால் யான்டாய் கடற்பகுதியிலிருந்து போகாய் கடற்பகுதிக்கு 40 நிமிடங்களில் சென்று விடலாமேனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் நீளமான சுரங்கத்தை கடலுக்கடியில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இரண்டு துறைமுக நகரங்களுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்படுகிறது.இந்த திட்டத்தில் ஷேன்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாய்யில் இருந்து லீபோனிங் மாகாணத்தில் உள்ள டைலான் நகரத்தை இணைக்கும் வகையில் சுமார் 123 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கபடுகிறது. தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான 1,400 கி.மீ. தொலைவை கடந்து செல்ல 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும் , இந்த சுரங்கப்பாதை ஜப்பானில் உள்ள செய்கன் சுரங்கபாதை மற்றும் பிரட்டன், பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்க பாதையை விட நீளமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire