மனித உரிமைகள் விடயத்தை முன்வைத்து எந்த ஒரு நாடும் இலங்கை மீது பொருளாதார தடைகளை ஏற்படுத்தினால் அதனை கண்டு இலங்கை அஞ்சாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை உரிய வகையில் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு நாடும் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்தாலும் அதற்கு ஈடுகொடுக்க இலங்கை தயாராகவே உள்ளது.
இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது.
மேற்கத்தைய நாடுகளுக்கு இலங்கை தலைவர் அடிபணிய மறுப்பதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
தமக்கு அடிபணிய மறுக்கும் தலைவரை மேற்கத்தைய நாடுகள் பதவியில் இருந்து அகற்ற முயற்சிக்கும். அதன் ஒருக்கட்டமே ஜெனீவாவில் இடம்பெறுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இலங்கை மக்கள் சவால்களுக்கு தயாராக உள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire