இன்று சிங்களப் பேரினவாதம்பற்றி பேசும் கும்பல்களே பிரபாகரனின் கொலைவெறி ஆயுதத்திலிருந்து உமது உயிரையும் உமது சகாக்களின் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அன்று சந்திரிகாவின் முந்தானைக்குள் நீரும் உமது தலைவரென அழைக்கப்படும் தலைமைப்பயங்கரவாதியுமான சம்பந்தனும் (1995 முதல் 2001வரை) தஞ்சம் புகுந்திருந்தமையை மறந்துவிட்டீர்கள் போலும்!
எமது தலைவரால் பௌத்த மக்களின் அதிமுக்கிய புனிதத்தலமான உங்களின் நிர்வாகத்தில் செயற்படும் தலதா மாளிகைக்கு (25.01.1998ல்) எங்கள் தலைவரின் கட்டளைக்கமைய குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவதற்காகவே நாங்கள் மலர்க் கொத்துடன் உங்களின் கால்களில் வீழ்கின்றோம் எங்களை மன்னித்துவிடுங்கள். எமது உயிரினை பாதுகாக்க முடியாத நிலையும். எமது குடும்பத்தவர்களின் வாழ்க்கைக்கு போதிய பணமும் இல்லாமையினாலேயே நாம் தலைவரினதும் கால்களில் முத்தமிட்டோம். அவர் எங்களை கௌரவமாக மன்னித்துவிட்டார். நீங்களும் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் என (12.10.2004ல்) கண்டி மஹாநாயக்க தேரரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட காட்சியினையே வாசகர்கள் இங்கு காண்கிறீர்கள்.
தலைவர் பேசுவார் நாங்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினருடன் இணைந்து கிழக்கில் மாகாண சபை ஆட்சியினை அமைப்போமென. புலிக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரென தெரிவிக்கப்படும் மண்டையன் பேசும்போது பிள்ளையானுக்கு விழக்கூடிய ஒருசில வாக்குகள் மற்றொரு இஸ்லாமியரை உருவாக்குவதற்கு உதவுமே தவிர, பிள்ளையானை உறுப்பினராக்குவதற்கு உதவாது என! இவர்களின் இடத்திற்கு இடம் பேசும் இனவாதம் கிழக்கில் வாழும் மூவின மக்களுக்கு மத்தியில் ஓர் இன வன்முறையினை தூண்டுவதற்கு உதவுமே தவிர அங்கு வாழும் மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்காது என்பதனை கிழக்கு மாகாண மக்கள் சிந்தித்து மேற்கூறிய இனவாதிகளை கிழக்கிலிருந்து விரட்டுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவெனக்கருதி அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்களென நாம எதிர்பார்க்கின்றோம்
மண்டையனின் அறிக்கை
நான் இந்த மேடையில் வைத்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பிள்ளையானுக்கு விழக்கூடிய ஒருசில வாக்குகள் மற்றொரு இஸ்லாமியரை உருவாக்குவதற்கு உதவுமே தவிர, பிள்ளையானை உறுப்பினராக்குவதற்கு உதவாது. அவர் அமீர்அலியைவிடவோ அல்லது ஏறாவூரைச் சேர்ந்த அலிசாயி மௌலானாவைவிடவோ அவரால் அதிகப்படியான விருப்புவாக்கைப் பெறமுடியாது. ஆகவே தமிழ் மக்களின் விலைமதிப்பற்ற வாக்கை முஸ்லிம்களுக்குப் பெற்றுக்கொடுக்கத்தான் இவரால் முடியுமே தவிர, இவரால் ஒரு உறுப்பினராக வரமுடியாது. காலம் இன்னும் கடந்துவிடவில்லை. தயவு செய்து பிள்ளையான் யோசிக்க வேண்டும். பிள்ளையான் படிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு அனுபவம் இருக்கின்றது. அந்த அனுபவத்திலிருந்தாவது அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு சிந்தித்தால் தமிழ் மக்களுக்கு ஒரு உதவியைச் செய்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். என்னதான் தலைகீழாக நின்றாலும் குறைந்தபட்சம் எட்டு ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் போய்விடும் என்பதை உணர வேண்டும். மட்டக்களப்பில் எட்டு ஆசனங்கள், அம்பாறையில் மூன்று ஆசனங்கள், திருகோணமலையில் நான்கு ஆசனங்கள் இரண்டு போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து மொத்தம் பதினேழு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். இதனை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க முடியாமலா போகப்போகின்றது?