சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரச்சினையை மட்டும்
தீர்க்கவில்லை, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து விட்டார், அதற்காக
இந்தியா அவருக்கு உயர்ந்த விருது கொடுக்க வேண்டும் என்று இந்தியாவின் ஜனதா
கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க கொழும்பு வந்துள்ள அவர் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தீவிரவாதத்துக்கு எதிராக சிறிலங்கா பெற்ற வெற்றி, 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி., இதன் மூலம், சிறிலங்காவின் பிரச்சினையை மட்டும் சிறிலங்கா அதிபர் தீர்க்கவில்லை, இந்தியாவினது பிரச்சினையையும் கூட அவர் தீர்த்து விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்
Aucun commentaire:
Enregistrer un commentaire