mercredi 15 août 2012

நிதியொதுக்கப்படாமல் அடிக்கல் நாட்ட வேண்டாம்; மகிந்த ராஜபக்ச


news
அரசாங்கத்தினால் நிதியொதுக்கப்படாத எந்தவொரு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்கும் அடிக்கற்களை நாட்ட வேண்டாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

அபிவிருத்தி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முறையான திட்டங்கள் மற்றும் தேவைப்பாட்டை அறிந்து செயற்படுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்

நிதி ஒதுக்கப்படாத எந்த ஒரு திட்டதிற்கும் அடிக்கல் நாட்ட வேண்டாம் என பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire