இன்று (25.08.2012) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் கறுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை கடந்த காலங்களில் பலதரப்பட்ட கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டு தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனா என்பவர் தலைமையிலான காடையர் கும்பல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரின் பிரச்சார நடவடிக்கையினை தடுக்கும் வகையில் குளப்பங்களை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது மகன் ஒருவரை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதன் காரணமாக வினோதன் என அழைக்கப்படும் குறித்த பொது மகன் களுவாஞ்சிக்குடி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதலை நடத்திய ஜனா தலைமையிலான கும்பல் இனங்காணப்பட்டு வாகனங்களின் இலக்கங்களும் அடையாளம் காணப்பட்டு பொலிசார் தேடுதல் நடத்துவதுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
களுவாஞ்சிக்குடி நிருபர்.
களுவாஞ்சிக்குடி நிருபர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire