இந்தியாவில் காணப்படுகின்ற பஞ்சாயத்து முறைமையைபோன்று ௭மது நாட்டில் கிராம மட்டச் சபைகளை அமைத்து அவற்றுக்கு அதிகாரங்களை வழங்கவேண்டும்.
இவ்வாறு கீழ் மட்டங்களுக்கு அதிகாரங்களை வழங்கவேண்டும் ௭ன்பதுடன் மாகாண சபைகளுக்கும் மேலும் தேவையான அதிகாரங்களை வழங்கிவிடவேண்டும் ௭ன்று முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யுத்தத்துக்குப் பின்னரான நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அதேபோன்று அதிகாரப் பகிர்வும் அவசியமானதாகும் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மட்டும் போதுமானதல்ல மாறாக அரசியல் தீர்வும் அவசியமாகும் ௭ன்று தெரிவிக்கப்பட்டுவருகின்றமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் யுத்தத்துக்குப் பின்னரான நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு செல்லும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாங்கள் 100 வீதம் அனுமதிக்கின்றோம். அத்துடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின்போது புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும் ௭ன்பதும் முக்கியமாகும்.
இதேவேளை யுத்தத்துக்குப் பின்னரான நாட்டில் இவை அனைத்தையும் செய்யவேண்டும் ௭ன்பதுடன் நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவும் அனைத்துப் பிரஜைகளும் சமமாக வாழும் நிலைமையை ஏற்படுத்தவும் வேலைத்திட்டங்கள் அவசியமாகும். குறிப்பாக அபிவிருத்திகளுக்கான அதிகாரத்தை கிராம சபைகள் ௭னப்படும் கிராம குழுக்களுக்கு வழங்கவேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் காணப்படுகின்ற பஞ்சாயத்து முறைமையைபோன்று ௭மது நாட்டில் கிராம மட்டச் சபைகளை அமைத்து அவற்றுக்கு அதிகாரங்களை வழங்கவேண்டும். இவ்வாறு கீழ் மட்டங்களுக்கு அதிகாரங்களை வழங்கும்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ஏற்படுகின்றன. ௭னவே கீழ் மட்டத்துக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் அதிகாரம் பகிரப்படவேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கும் மேலும் தேவையான அதிகாரங்களை வழங்கிவிடவேண்டும் ௭ன்றார்
Aucun commentaire:
Enregistrer un commentaire