dimanche 5 août 2012

வரும் 12ஆம் தேதி சென்னையில் டெசோ மாநாடு!


வரும் 12ஆம் தேதி சென்னையில் டெசோ மாநாடு! இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலைக்குப் பிறகும் எஞ்சி வாழும் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறி என்ற நிலைதான் இன்றுவரை.
நம்முடைய இலட்சிய நோக்கு தனியீழம்தான் என்றாலும், அது கிட்டும்வரை நம் மக்களுக்கு வாழ்வுரிமையும், அடிப்படைத் தேவைகளும் கிட்டுகின்ற வகையிலே பல முயற்சிகளை மேற்கொண்டுதான் தீர வேண்டும் - அதற்கான அழுத்தங் களைக் கொடுத்தே தீர வேண்டும்.
தனியீழம்பற்றித் தான் பேச வேண்டும்; அதற்காக மட்டுமே போராட வேண்டும் குரல் கொடுக்க வேண்டும்; மற்றபடி அம்மக்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்சினை களைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவது  ஒரு வகையான சிறுபிள்ளைத்தனமே!
இந்த உண்மையை உணர்ந்த நிலையில்தான் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் மக்களும் டெசோ மாநாட்டில் பங்கேற்க வருகின்றனர்.
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் (2.8.2012 அன்று) விடுத்துள்ள வேண்டுகோள் விவேக மானது -_ தேவை யானது.
டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் மாநாட்டுக்கு ஒத்துழைப் புக் கொடுக்கும் மனம் இருந்தால் கொடுக் கட்டும்; கொடுக்க மனம் இல்லையென்றால் அவரவர்கள் வழியில் அவரவர்கள் தாராள மாகப் போராடலாம் _ குரல் கொடுக்கலாம் _ பயணிக்கலாம் அதில் நாம் யாரும் குறுக்கே படுக்கப் போவதில்லை.
நாளை மறுநாளே தனியீழத்தைப் பறித்துத் தரக் கூடிய பெரும் வல்ல மையும், பேராற்றலும் இருக்குமானால், தாராளமாகவே அதனைச் சாதித்துக் காட்டி இப்பிரச்சினையில் முதல் பரிசைத் தட்டிச் செல்லட்டும் - _  யார்  வேண்டாம் என்று கூறியது?
எதிரி யார்? நண்பன் யார்? என்று அடையாளம் காண்பதிலேயே தடுமாற்றம் இருந்தால் துப்பாக்கிக் குண்டுகள் தவறான மார்புகளில்தான் பாயும் என்பது பாலபாடமாகும்.
ஆகஸ்டு 12இல் நடைபெற விருக்கும் மாநாடு குறித்து நம் இனப் பகைவர்கள் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? துக்ளக் தினமலர் வகையறாக்கள்! கண்ணோட்டத்தில் இம்மாநாடு பற்றி கணிப்பு என்ன என்பதைத் தெரிந்த பிறகாவது வார்த்தைகளைக் கொட்டுவதில் கொஞ்சம் அடக்கம் இருக்க வேண்டாமா?
யார் சொன்னாலும், சொல்லா விட்டாலும், யார் ஏற்றாலும், ஏற்கா விட்டாலும், இனப்படுகொலை நடந்து முடிந்த நிலையில், உலகளவில் ஈழ  பிரச்சினை தொடர்பாக நடத்தப்படும் மிகப் பெரிய எழுச்சியூட்டும் நிகழ்ச்சி நடக்க இருக்கும் டெசோ மாநாடே!
இலங்கையின் சிங்கள அரசு உன் னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். உலக நாடுகள் கூர்மையாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும். அய்.நா. மன்றம் உட்பட இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை உணராமல் போகாது.
முள்வேலிகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளையும், நில புலன்களையும் பறி கொடுத்துக் கைப்பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள் இந்த மாநாட்டின் மூலம் ஒரு விடிவு பிறக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப் பார்கள்.
தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும், புரிய வேண்டியவர்களுக்கும் புரிகிறது. ஆனால் இதில் நல்லெண் ணத்தைக் காட்ட கடப்பாடு உடைய சில தலைவர்களுக்கும் சில அமைப்புகளுக்கும் மட்டுமேதான் தடுமாற்றம்!
ஈழப் பிரச்சினை என்பது எங்க ளுக்கே உரித்தானது -_ இதனை யாரும் கையில் எடுக்க உரிமை இல்லை என்று ஏகபோகம் கொண் டாடுவோர்க்குத்தான் மூக்கின்மேல் கோபம் எகிறிக் குதிக்கிறது.
பிரச்சினையின் மீது கவலை உள்ளவர்கள் யாரும் இந்த நிலைக்கு ஆளாக மாட்டார்கள்.
ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கால கட்டத்தில் சில அணுகுமுறை களை நிலைப்பாடுகளை எடுத்தவை தான் _ இல்லை என்று மறுக்க முடியுமா!
இதே வைகோ அவர்களேகூட எனக்கும் விடுதலைபுலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; ஆனால் அதே நேரத்தில் தனியீழத் துக்கு ஆதரவு அளிக்கிறேன் (தினமணி 14.10.1993 பக்கம் _ 1) என்று சொல்லவில்லையா?
1996 தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக அக்கட்சி வைத்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையை முன் வைக்க மாட்டோம் என்று மதிமுக கட்டுப்பட்டுப் போகவில்லையா?
தேர்தலில் சில இடங்களைப் பெறுவதற்காக, தமது இலட்சியம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்த முக்கிய பிரச்சினையையே கைவிடத் தயாராக இருந்தவர்கள் எல்லாம் டெசோ மாநாட்டை நடத்த இவர்களுக்குத் தகுதி உண்டா என்று கேட்கலாமா?
ஈழத் தமிழர்பற்றி பேசியதற்காக பொடா சட்டத்தில் சிறைக் கொட்டடி யில் பூட்டிய செல்வி ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கூறிய சந்தர்ப்ப வாத வெற்று வார்த்தைகளை நம்பத் தயாராக இருக்கக் கூடியவர்கள் -_ டெசோ மாநாடுபற்றி விமர்சனம்  செய்வதை நினைத்தால் ஒரு வகை யில் வேதனை என்றாலும் இன்னொரு பக்கத்தில் விலா நோகச் சிரிப்பைத் தான் ஏற்படுத்துகிறது.
போரை நிறுத்த வேண்டும் என்ப தன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற் கான முயற்சியில் தற்போது ஈடுபட் டிருக்கிறார் - இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான dr. நமது எம்.ஜி.ஆர். 16.10.2008) என்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா கூறவில்லையா?
இந்தக் கூற்றுக்குப் பதவுரை, பொழிப்புரை கூற வேண்டுமா?
போரை நிறுத்தச் சொல்லுவது ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்லவாம்! அப்படியென்றால் போரை நடத்தச் சொல்லுவது ஈழத் தமிழர் களை காப்பாற்றுவதற்காகவா? பதில் சொல்லட்டும் பாஷ்ய கர்த்தாக்கள்.
விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார் துணை போகிறார் என்று காரணம் காட்டி தமிழர் தேசிய இயக்கத்தையே தடை செய்த ஒருவரை ஏற்றுக் கொள்ள முடிகிறது; ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆளான கலை ஞரை -_ ஏற்றுக் கொள்ள வேண்டாம் _ குறைந்தபட்சம் கண்டனம் செய்யாமலாவது இருக்கக் கூடாதா?
இதில்கூட மனுதர்மப் பார்வை தானா? இந்தப் பார்வை இதுவரை பார்ப்பனர்களிடத்தில் இருந்து வந்தது - அது பரிதாபத்திற்குரிய நம் சூத்திர மக்களுக்கு வந்தது எப்படி?
டெசோ மாநாடு நடந்து முடிந்த நிலையில் வெகு மக்களின் கண்கள் அகலமாகவே திறக்கப் போகின்றன! உலகளவில் புதிய திருப்பத்திற்கான புத்தொளி கிடைக்கத்தான் போகிறது.
நம் கவனமும், கவலையும் அவற்றை நோக்கித்தான்! விமர்சனங் கள் நம் பணியை வேகப்படுத்தும் - வெற்றியை நோக்கி விரைவு படுத்தும்.
வேலையைப் பார்ப்போம் _ வாருங்கள் தமிழினப் பெருமக்களே!

Aucun commentaire:

Enregistrer un commentaire