vendredi 3 août 2012

நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த 30 பேரின் கடவுச்சீட்டுக்களை டில்லி விமான நிலையம் முடக்கியுள்ளதாகத் தகவல்கள்


  நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட நித்தியானந்தாவின் கும்பலைச் சேர்ந்த 30 பேரின் கடவுச்சீட்டுக்களை டில்லி விமான நிலையம் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.

நித்தியானந்தா , ரஞ்சிதா மீது பாலியல் புகார்கள் அதிகம் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தது போன்ற காட்சி வெளியானது முதலே இருவரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த 30 பேரின் கடவுச்சீட்டுக்களை டில்லி சர்வதேச விமான நிலையம் முடக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலானது நீதிமன்ற உத்தரவின் பேரில் இவை முடக்கப்பட்டுள்ளதா அல்லது உளவுத்துறை உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளதாக என்பது தெரியவில்லை. இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடி விடாதிருக் கவே கடவுச்சீட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

நித்தியானந்தா விவகாரத்தில் இந்தக் கடவுச்சீட்டு விவகாரம் முக்கியமான திருப்பு முனையாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது கயிலாயத்துக்குப் பயணமாகியுள்ளார் நித்தியானந்தா என்று தெரிகிறது. ஆனால் அவருக்கு பெங்களூர் மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை செய்ய அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதைப்பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் போய் விட்டார். இதனைக்குறித்து கர்நாடக இரகசியப்பொலிஸார் கோபத்தில் மத்திய அரசை அணுகி, கடவுச்சீட்டுக்களை முடக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

கயிலாயம் போன நித்தியானந்தா அப்படியே ரஞ்சிதா உள்ளிட்டோருடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடலாம் என்று தகவல் கிடைத்து அதன் பேரில் கடவுச்சீட்டுகளை முடக்க கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எப்படியோ நித்தியானந்தாவால் நாட்டை விட்டு வெளியேறமுடியாதநிலை. 
___

Aucun commentaire:

Enregistrer un commentaire