lundi 20 août 2012

கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்


ராமேஸ்வரம்.ஆக.19-கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம், கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 10 படகுகளில் இன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் மீன்பிடிபடகினை துப்பாக்கி முனையில்சுற்றி வளைத்தனர். கடல்வளம் பாதிக்கும் எனவும் இப்பகுதியில் மீன்பிடிக்க கூடாது எனவும் மீனவர்களை எச்சரித்தனர்.

இதனால் இலங்கை கடற்படையினருக்கும், தமிழக மீனவர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து மீனவர்களை  இலங்கை கடற்படையினர் தாக்கினர். அவர்கள் விரித்து வைத்திருந்த மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினர் என்றும் தெரிகிறது .

Aucun commentaire:

Enregistrer un commentaire