பொது நலவாய நாடுகளின் 58 ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு எதிர்வரும் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாற்றத்துக்கான கொள்கைகளைப் பலப்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அடுத்த மாதம் 07ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெறும் என இன்று முற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற சபாநாயர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார் எனவும் 54 நாடுகளைச் சேர்ந்த 179 பிராந்தியங்களின் 800 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளளனர் எனவும் இது வரையில் சபாநாயகர்களும் அமைச்சர்களுமாக 600 பேர் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் பொதுப் பிரச்சனைகள் குறித்து ஆராயப்படும். முக்கியமாக கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை போன்ற விடயங்களும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் இதில் கலந்தாலோசிக்கப்படும் எனறும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இம்மாடு தொடர்பான தகவல் வழங்குதவற்காக புதிய இணையத்தளம் ஒன்றையும் சபாநாயகர் ஆரம்பித்து வைத்தார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire